Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ்

Advertisement


 கான்ஸ்டன்டைன் ரவீந்திரனின் ஜாதியை பகிரங்கப்படுத்திய தி.மு.க., 'போஸ்டர்'

 கான்ஸ்டன்டைன் ரவீந்திரனின் ஜாதியை பகிரங்கப்படுத்திய தி.மு.க., 'போஸ்டர்'
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

சென்னை: ஜாதி அடையாளத்தை காட்டிக்கொள்ளாத கான்ஸ்டன்டைன் ரவீந்திரனுக்கு, ராஜ்யசபா எம்.பி., பதவி வழங்கி, தி.மு.க., செய்த விளம்பரம் பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

மறைந்த தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்திற்கு நெருக்கமாக இருந்தவர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன். கடந்த 2014 லோக்சபா தேர்தலில் மத்திய சென்னை தொகுதியில் போட்டியிட, விஜயகாந்த் அவருக்கு வாய்ப்பு வழங்கினார்.

ஆனால், தேர்தலில் தோல்வி அடைந்தார். தே.மு.தி.க.,வில் அவர் வளர்வதை பிடிக்காத சிலர், அவரை ஓரம்கட்டினர். இதனால் அதிருப்தி அடைந்த அவர், தி.மு.க.,வில் இணைந்தார். தற்போது, தி.மு.க., நடத்தும் ஆங்கில நாளேட்டின் ஆசிரியராக உள்ளார்.இந்நிலையில், தி.மு.க., சார்பாக, ராஜ்யசபா எம்.பி., ஆகிறார்.

இதையடுத்து, 'ராஜ்யசபாவில் மீனவர் குரல். எங்களது நீண்டகால கோரிக்கையை ஏற்று, மீனவ சமுதாயத்தை சேர்ந்த கான்ஸ்டன்டைன் ரவீந்திரனுக்கு எம்.பி.,யாக வாய்ப்பளித்த தி.மு.க.,விற்கும், முதல்வருக்கும் நன்றி' என, தமிழகம் முழுவதும் மீனவ பகுதிகளில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. தி.மு.க., தலைமையின் ரகசிய உத்தரவின்படி, இந்த ஏற்பாடு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

அரசியல் வட்டாரத்தில் கூறப்படுவதாவது: கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் பேராசிரியராக இருந்து அரசியலுக்கு வந்தார். அவர் என்ன ஜாதி என்பதே இதுவரை பலருக்கும் தெரியாமல் இருந்தது.

எம்.பி., பதவியை வழங்கி, அவரது ஜாதியை கூறி விளம்பரம் செய்யப்பட்டது, அனைத்து தரப்பினரிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கிறிஸ்துவ மீனவர்கள் ஓட்டு, விஜய்க்கு கிடைக்கும் என ஆய்வு முடிவுகள் தெரிந்ததால், அதை மடைமாற்ற இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த வட்டாரத்தில் கூறப்படுகிறது.

Advertisement

மார் 09, 2026 02:25 pm

எதையும் விளம்பரப் படுத்தி பழக்கப் பட்ட ஸ்டாலினுக்கு இது என்ன புதுசா?

Reply Rate this
மார் 09, 2026 12:56 pm

இந்த மீனவர்கள் தான் அதிக அளவில் மதம் மாற்றப் படுகிறார்கள். இத்தனைக்கும் அவர்கள் ஜாதி ரீதியாக பாதிக்கப்பட்டதாக வரலாறு இல்லை.

Reply Rate this
மார் 09, 2026 11:40 am

சாதியை வளர்ப்பதையே வாழ்வாதாரமாக கொண்டிருந்த ஈரோடு ராமசாமி நாயாக்கன் வழி தோன்றல்கள் தொடருவது இயற்கையானதுதான்.

Reply Rate this
மார் 09, 2026 11:23 am

இது முழு பொய். எங்கள் ஈரோடு ஈர மனசுகாரர் எல்லா சாதி களையும் ஒளித்து விட்டார். வேண்டும் என்றால் நீங்க சோதனை செய்து பார்க்கலாம். பிளாஸ்டிக் சார் இலிருந்து வேங்கை வயல் வரைக்கும் வெங்காயம் விளைந்து உள்ளது

Reply Rate this
மார் 09, 2026 11:20 am

திராவிடமே சாதி பிரிவினையை உண்டாக்கி, வன்முறை மற்றும் மற்ற முறைகள் மூலம் அரசியல் ஆதாயம் பெரும் அமைப்பு தானே..

Reply Rate this
மார் 09, 2026 10:53 am

வரும் தேர்தலில் திமுகவை ஒதுக்கிவைத்தால் பிறக்கும் மதசார்பற்ற தமிழகம். திருட்டுகபட வேஷதாரிகளான திமுக வேண்டாம்

Reply Rate this
மார் 09, 2026 09:47 am

நடிகர் ஜோசப் விஜய் சந்திரசேகர் 18 முதல் 40 வயது வரை உள்ள சிறுபான்மை மற்றும் விசிக இளைஞர்களின் வாக்குகளை பெறுவார் தீயமூக வேறு வேலை இருந்தால் பார்க்கலாம் ....

Reply Rate this
மார் 09, 2026 09:10 am

அவரவர் ஜாதி அவர்களுக்கு, பழக்க வழக்கங்கள் மாறலாம், ஆனால் உயர்ந்தது தாழ்ந்தது என்று குத்துவதே தவறு.

Reply Rate this
மார் 09, 2026 09:06 am

க்ரிப்டோ ஹிந்துவோ ? . . ,

Reply Rate this
மார் 09, 2026 09:04 am

மதம் இல்லை, ஜாதி இல்லை என்று உரக்கக் கூவும் கேடுகெட்ட வேஷதாரி திமுகவின்ர்தான் ஓட்டு வங்கி அரசியலுக்கு எல்லாவற்றிலும் ஜாதி, மதம் பார்த்து பார்த்து செய்கிறது. சூடு சொரணை உள்ளவர்கள் திமுகவுக்கு வாக்களிக்க மாட்டார்கள்.

Reply Rate this