Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ்

Advertisement


நான் வெறுக்கிறேன்; அருவருக்கிறேன்; தவெக அறிவிப்புகள் குறித்து சீமான் கருத்து

 நான் வெறுக்கிறேன்; அருவருக்கிறேன்; தவெக அறிவிப்புகள் குறித்து சீமான் கருத்து
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

சென்னை: தவெக தலைவர் விஜயின் மகளிர் சார்ந்த வாக்குறுதிகளுக்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

சென்னையில் நிருபர்கள் சந்திப்பில் சீமான் கூறியதாவது:
தவெக மகளிர் சார்ந்த அறிவிப்புகள். இது போன்ற முறையை நான் வெறுக்கிறேன், அருவருக்கிறேன். இது வந்து ஒரு ஆட்சியே கிடையாது. இது ஒரு வியாபாரம். மக்களுக்கு ஒன்று வாங்கினால், ஒன்று இலவசம் என்று சொல்வோம் என்கிற மாதிரி திட்டம் ஆடி தள்ளுபடி மாதிரி. ஏற்கனவே 10.5 லட்சம் கோடி ரூபாய் கடன் இருக்கிறது.
ஒரு லட்சம் கோடி ரூபாய் வட்டி இருக்கிறது. இப்படியே வாங்கி, வாங்கி தாலிக்கு தங்கம் இலவசம், இது இலவசம், இது இலவசம் என்று சொல்லிக்கொண்டே போனால் கடைசியாக நாடு வந்து ஒரு நாள் ஏலத்திற்கு வரும். மதுவை ஒழிப்பேன் என்று சொல்ல முடியவில்லை, மதுவை ஒழிக்காமல் சட்டம் ஒழுங்கு என்பது வெட்டி பேச்சு அது ஏமாற்றுப் பேச்சு. விஜய்க்கு தனித்த தத்துவமோ, கோட்பாடோ, பாதையோ கிடையாது. மகளிருக்கு 2,500 ரூபாய் கொடுப்பதாக கூறியது திரைப்பட காமெடி போல 'FLOP 'ஆகும்.

சினிமா வேறு, சித்தாந்தம் வேறு; இரண்டையும் குழப்பிக் கொள்ளக் கூடாது. இலவசம் என்றால் எந்த பொருள் பொறுப்பற்று போய்விடும். பொருளின் அருமை கிடையாது. தாய்பாலும், தண்ணீரும் மலிவாக கிடைப்பதால் நீ மதிக்க மறுக்கிறாய். பூமி காலுக்கு கீழ் மிதிப்படுவதால் மதிப்பதில்லை. அறிவை வளர்க்கும் கல்வியும், உயிரை காக்கும் மருத்துவமும் தான் எல்லோருக்கும் சமமாக கிடைக்கும் வகையில் இலவசமாக இருக்க வேண்டும். இவ்வாறு சீமான் கூறினார்.

Advertisement

மார் 10, 2026 03:46 pm

சீமான் சொல்வது 100% சரி. அரசியல் என்பது வெறும் இலவச அறிவிப்புகள் அல்ல மக்களின் உண்மையான பிரச்சனைகளை தீர்க்கும் நீண்டநாள் திட்டங்கள் இருக்க வேண்டும்.

Reply Rate this
மார் 10, 2026 12:54 pm

தவெக திமுக வால் தோற்றுவிக்கப்பட்ட கட்சி. மநீமை போல தவெகவும் திமுகாவோடு இணைந்து விடும். இனம் இனத்தோடு சேர்ந்து விடும் என்பது போல சினிமாக்காரர்கள் ஒன்று சேர்ந்து விடுவார்கள்.

Reply Rate this

உண்மையிலேயே விஜயினால் மாற்றம் வரும் என்று நம்பிக்கொண்டு இருந்தேன். அவர் திமுக அதிமுகவின் நீட்சி என்பதை காட்டிக்கொண்டு இருக்கிறார். இலவசம் எதற்கு கொடுக்கிறாய்? ஒரு வேலையை கொடு. மக்கள் உழைத்து சம்பாதிக்கட்டும். சரி எவ்வளவு நாளைக்கு இலவசம் கொடுப்பாய்? மக்களிடமிருந்து வரும் வரிப்பணத்தில்தான் இலவசங்களை கொடுக்கப்படுகிறது. எவனும் வேலை செய்யவில்லை என்றால் எப்படி வரி வரும்? திராவிடத்தின் சூழ்ச்சியில் நடிகர் விஜய்யும் இணைகிறார். இனி நாம் தமிழர் ஒன்றே தமிழர்களின் வாய்ப்பு. இங்கே நாம் தமிழருக்கு எதிராக பேசுபவர்கள் அவர்களுக்கு ஒரு வாய்ப்பை அளித்துவிட்டு பேசுங்கள். இல்லையேல் மூடிக்கொண்டு இருங்கள்.

Reply Rate this
மார் 09, 2026 08:47 pm

கடந்த அரை நூற்றாண்டு காலமாக, திராவிட கட்சிகள் திறந்த மதுக்கடைகளால், தமிழ் சமூகம் சீரழிந்து கிடக்கிறது. குடும்பத்தை காக்க வேண்டிய ஆண்களோ, குடித்து அற்ப ஆயுளில் மடிகின்றனர். இதனால் தமிழகத்தில் ஆயிரமாயிரம் பெண்கள் இளம் வயதிலேயே விதவைகளாகி, வாழ்க்கையில் கடும் துயரங்களை அடைந்து வருகின்றனர். தேர்தலில் இலவசங்களை வாரி வழங்குவதாக கூறும் தவெக, திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் சாராய கடைகளை மூடி, தமிழகத்தில் உள்ள தாய்மார்களை காப்போம் என்ற உறுதி மொழியை அளிக்க தயங்குவது ஏன் என்பது மில்லியன் டாலர் கேள்வி.

Reply Rate this
மார் 09, 2026 08:32 pm

தன்னுடைய கருத்துக்களை மிக மிக துணிவாக வெளிப்படுத்தும் சீமானை கண்டால் ஊழல் அரசியல் நடத்தும் விடியல் போன்ற கோமாளிகளுக்கு பிடிக்காது தான் .நடிகர் விஜய் அவர்களும் தி மு க வை போன்று நம் தாய் தமிழை இழிவு படுத்திய பிடித்து தொங்குகிறார் .

இந்த விடியல் போன்ற அரசியல் வாதிகள் தங்கள் சொந்த நலனுக்கு மட்டுமே உண்மையாக இருப்பார்கள். விடியல் குட்டையில் தேடி கொள்கைகளை

Reply Rate this
மார் 09, 2026 06:51 pm

அவன் நம்பர் ஒன் டுபாக்கூர் என்றால், நீ நம்பர் டூ டுபாக்கூர்.

Reply Rate this
மார் 09, 2026 06:37 pm

அன்னான் சீமான் செய்வது உண்மை அவருக்கு ஒரு வாய்ப்பு கொடுக்கலாம் - இப்படி 1000 , 2000 , 3000 ,5000 10000 .... னு எலாம் விடாமல் எல்லா பெண்களுக்கும் ஒரு பணம் அச்சிடும் கருவி இலவசமா கொடுக்கலாம் ,

Reply Rate this
மார் 09, 2026 06:36 pm

- இப்படி 1000 , 2000 , 3000 ,5000 10000 .... னு எலாம் விடாமல் எல்லா பெண்களுக்கும் ஒரு பணம் அச்சிடும் கருவி இலவசமா கொடுக்கலாம் ,

Reply Rate this
மார் 09, 2026 06:33 pm

Whether I like Mr. Seeman or not what he says is 100% correct.No Free bees except for education and health

Reply Rate this
மார் 09, 2026 06:30 pm

கொடுக்கட்டு எல்லா இலவசமும் , என் வரி பணத்தை பிடுங்கி கொடுக்காதீர் , நியாயமாக வரி கட்டும் நடுத்தர சாமானிய குடி மக்களுக்கு எந்த சலுகையும் கிடையாது , எல்லா பெண்களுக்கும் மாசம் 1 லச்சம் பணமும் , வீடு , சமையலுக்கு தேவையான எல்லாமும் மற்றும் அணைத்து பொழுதுபோக்கு சாதனமும் கொடு , அவங்க உட்க்கார்ந்து சீரில் பக்கட்டும் , இப்படி பொம்பள பொம்பளைன்னு எல்லாமே இலவசமான , அப்போ ஆம்பளையா பொறந்தது யாரோட தப்பு ,

Reply Rate this