Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ்

Advertisement


 நான் இருக்கும் வரை தே.ஜ., கூட்டணி தமிழகத்தில் வெற்றி பெற முடியாது: ஸ்டாலின்

 நான் இருக்கும் வரை தே.ஜ., கூட்டணி தமிழகத்தில் வெற்றி பெற முடியாது: ஸ்டாலின்
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

திருச்சி: ''நான் இருக்கும் வரை, தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியால் வெற்றி பெற முடியாது,'' என முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

திருச்சி மாவட்டம், சிறுகனுாரில் நடந்த தி.மு.க.,வின், 12வது மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: கடந்த தேர்தலுக்கு முன், இதே இடத்தில் நடந்த மாநாட்டில், ஏழு இலக்குகளை அறிவித்தோம். அந்த ஏழு இலக்குகளையும் ஐந்து ஆண்டு கால ஆட்சியில் நிறைவேற்றி உள்ளோம்.

வெற்றி உறுதி

தமிழகத்தை தொடர்ந்து புறக்கணிக்கும் மத்திய அரசு கூட, தமிழகத்தை நம்பர் ஒன் மாநிலம் என்று சொல்கிறது. அந்தளவுக்கு நாம் கெத்தா முன்னேறி உள்ளோம். அ.தி.மு.க., ஆட்சியுடன், நம் ஆட்சியை ஒப்பிடும் போது, பல மடங்கு அதிகம் செய்துள்ளோம்.

நம் திட்டங்களான மகளிர் உரிமைத்தொகை, இலவச மகளிர் பஸ் பயணம், காலை உணவுத்திட்டம் உள்ளிட்ட எந்த திட்டத்தையும், யாராலும் தடுக்கவோ, நிறுத்தவோ முடியாது. தி.மு.க., அரசால் பயனடைந்தவர்கள் ஓட்டு போட்டாலே போதும்; வெற்றி உறுதி.

தி.மு.க., ஆட்சியில் நிறைவேற்றிய திட்டங்களை 'டாப் - அப்' செய்து, மற்ற கட்சிகள் தேர்தல் வாக்குறுதியாக அறிவிக்கின்றன. மற்ற கட்சிகளின் தேர்தல் அறிக்கைக்கு கன்டென்ட் கொடுப்பதே ஸ்டாலின் திட்டங்கள் தான். நான் இருக்கும் வரை தமிழகத்தில் தே.ஜ., கூட்டணி, வெற்றி பெற முடியாது.

கருப்பு - சிவப்பு கூட்டம்

தமிழகத்துக்கு எதையும் செய்யாமல், எந்த நம்பிக்கையில் தே.ஜ., கூட்டணியினர் ஓட்டு கேட்டு வருகின்றனர் என தெரியவில்லை. இந்த தேர்தலில் வெற்றி பெறப்போவது தமிழக அணியா, டில்லி அணியா என்பது தான்.

தமிழகத்தை எப்படியாவது காவி மயம் ஆக்கிவிடலாம் என திட்டம் போடுகின்றனர். கருப்பு - சிவப்பு கூட்டம் இருக்கும் வரை, யார் அப்பன் வந்தாலும் அது நடக்காது.

அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, சுயநலத்துக்காக அ.தி.முக.,வை பா.ஜ.,விடம் அடகு வைத்து விட்டார். அ.தி.மு.க.,வை அழிக்கும் வேலையை பா.ஜ., செய்கிறது.

ஏழாவது முறை

பீஹாரில் நிதிஷ்குமாரை முன்னிறுத்தி தேர்தலில் ஜெயித்துவிட்டு, காரியம் முடிந்ததும், தற்போது பா.ஜ.,வை ஆட்சியில் அமர வைக்க உள்ளனர். உதயசூரியன் சின்னம் வெற்றி பெறுவதற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை, கூட்டணி கட்சிகளின் சின்னங்களின் வெற்றிக்கும் தி.மு.க.,வினர் கொடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement

மார் 10, 2026 12:29 pm

அப்ப .......

Reply Rate this
மார் 10, 2026 12:17 pm

இந்த பாரி வள்ளல் தமிழக மக்கள் தலையை அடமானம் வைத்து உலகவங்கியில கடன் வாங்கி அதில் சொற்ப பணத்தை மக்களுக்கு பிட்சை போட்டு பாக்கி பணத்தை நாமம் போட்டு தெனாவட்டுல வள்ளல் பேசுறது உண்மைதான்

Reply Rate this
மார் 10, 2026 11:19 am

அப்ப 2026 NDA ஜெயித்த பிறகு, ஒரு நல்ல செய்தி வரும் போல

Reply Rate this
மார் 10, 2026 11:07 am

வாய் சவடால்

Reply Rate this

அட என்னப்பா இப்படி பொசக்குன்னு சொல்லீட்டீங்க? எங்க இளம் பெரியார் இன்பாண்ணாவோட கொள்ளுப்பேரன் காலத்துல கூட அலிங்க கெலிக்க முடியாதுண்ணாதா நாங்க அதாங்க உப்பீஸ் களவு காணரோம்.சே இப்படி கேவலமா போச்சே.

Reply Rate this
மார் 10, 2026 10:46 am

அதாவது, நீங்க இருக்கும்வரை தமிழ்நாட்டை உருப்பட விடமாட்டேன் என கூறுகிறீர். ஒருவகையில் நீர் சொல்வதும் உண்மைதான், உமக்கு பக்கபலமாக டாஸ்மாக் டுமீல்ஸ்/மூர்க்ஸ்/கிறிஸ்து இருக்கும்வரை உன்னை யாரு அசைச்சுக்க முடியாது.

Reply Rate this
மார் 10, 2026 10:45 am

செஞ்சுட்டா போவுது பிஜேபி வரட்டும்

Reply Rate this
மார் 10, 2026 10:42 am

காவி பாரதத்தின் ஆன்மீக கலாச்சார அடையாளம்.

Reply Rate this

போலி சமூகநீதி பேசி, இலவசங்களை காட்டி மக்களின் ஓட்டுக்களை திருடி ஆட்சிக்கு வர நினைக்கும் இவருக்கு இந்த தேர்தலில் இருக்கு ஆப்பு. நாடகம் வெளுத்துவிட்டது.

Reply Rate this
மார் 10, 2026 09:52 am

தொண்டர்கள் தொண்டர்கள்வே இருங்க அவனுங்க நீங்க போடரா ஓட்ட எல்லாம் வாங்கிட்டு சொகுசு ac கார்லா போவானுங்க கொடுமைடா சாமி

Reply Rate this
தொண்டர்கள் இல்லை ₹200 உபிஸ்..
மார் 10, 2026 01:07 pm
Rate this