Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ்

Advertisement


 கூட்டணி குழப்பத்தில் கட்சி தலைமை; பிளவை எதிர்நோக்கும் தமிழக காங்.,

 கூட்டணி குழப்பத்தில் கட்சி தலைமை; பிளவை எதிர்நோக்கும் தமிழக காங்.,
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

தி.மு.க., அல்லது த.வெ.க., என, எந்த கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்தாலும், அக்கட்சி பிளவுபட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இது குறித்து, தமிழக காங்கிரஸ் வட்டாரங்கள் கூறியதாவது:
தி.மு.க., கூட்டணியை கோஷ்டி தலைவர்கள் சிலரும், எம்.எல்.ஏ.,க்கள் சிலரும் தான் விரும்புகின்றனர் என, விஜய் ஆதரவு காங்கிரசார் தெரிவிக்கின்றனர்.
'தொண்டர்கள் எண்ண ஓட்டத்திற்கு ஏற்ப முடிவெடுக்க வேண்டும்' என்ற அடிப்படையில், தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் ஷோடங்கர், த.வெ.க.,வுடன் கூட்டணி அமைப்பதற்கு காய்களை நகர்த்தி வருகிறார்.
இதனால், காங்கிரசில் மொத்தமுள்ள 17 எம்.எல்.ஏ.,க்களில், 12 எம்.எல்.ஏ.,க்கள், தி.மு.க., கூட்டணியை விரும்பும் ஆதரவாளராக மாற்றப்பட்டு உள்ளனர்.

தி.மு.க., கூட்டணியிலிருந்து காங்கிரஸ் வெளியேறினால், அக்கட்சி மூத்த தலைவர் ஒருவர் தலைமையில், எம்.எல்.ஏ.,க்கள், சில மாவட்டத் தலைவர்கள், காங்கிரசை உடைத்து, புதிய கட்சி துவக்க தயாராக உள்ளனர்.

தி.மு.க., கூட்டணியில் காங்கிரஸ் நீடிக்குமானால், 'ஜனநாயக பொங்கல் விழா'வை நடத்திய விஜய் ஆதரவு காங்கிரஸ் நிர்வாகிகள் இணைந்து, ஜனநாயக காங்கிரஸ் அல்லது காங்கிரஸ் முன்னேற்ற கழகம் என்ற கட்சியை துவக்க தயாராக உள்ளனர். இவ்வாறு அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

- நமது நிருபர் -

Advertisement

பிப் 14, 2026 07:51 pm

Whatever happens, the Cong will split. Each group will fight against the other. Finally both will not win even a single seat. Congress -mukt TN at last.

Reply Rate this
பிப் 14, 2026 06:22 pm

அணுவையும் பிளக்க முடியும்.

Reply Rate this
பிப் 14, 2026 01:15 pm

சாவுங்க இந்திய துரோகிகளா.

Reply Rate this
பிப் 14, 2026 12:43 pm

இப்போது இருக்கும் தமிழக காங்கிரஸ் என்பது திராவிட வளர்ச்சிக் கழகம்தான். இவர்களா காமராஜர் ஆட்சியைத் தரப் போகிறார்கள்?.

Reply Rate this
பிப் 14, 2026 09:47 am

பேசாம பிஜேபி கூட கூட்டணி வெச்சுட வேண்டியது தான் ஹாஹாஹா

Reply Rate this
பிப் 14, 2026 05:51 am

1996 போல காங்கிரஸ் கட்சியை உடைத்து புதுக்கட்சி தொடங்கினால் அன்றைய தினம் போல வெற்றி பெறலாம் என்பது உண்மையாக இருக்கலாம்.

ஆனால் அந்த முடிவு ஊழல் செய்ததாகக் கருதப்படும் ஆளுங்கட்சிக்கு எதிராக வந்தது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
முப்பது வருடங்களுக்கு பின்னாலும் மக்கள் மனநிலை ஊழலுக்கு எதிராகவே இருக்கும் என்பதை அரசியல் "ப.சி" எடுத்தோர் புரிந்து கொண்டால் சரி.

Reply Rate this
காந்தி அன்று சொன்னது போல்
காங்கிரஸ் கட்சியை கலைத்து விட்டு
இத்தாலி குடும்பம் பாரதத்தில்
கொள்ளை அடித்த பணத்தை கொண்டு மீதம் உள்ள நாட்களை
இத்தாலியில் போய் அனுபவியுங்கள்.பாரத மக்களுக்கும்
ஒரு திருஷ்டி கழித்த மாதிரி.
பிப் 14, 2026 10:15 am
Rate this