Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் சர்வே முடிவுகள்

Advertisement


மலைக்கு உள்ளடி!

மலைக்கு உள்ளடி!

தாமரை கட்சியின் மலையானவருக்கு கோவை மற்றும் திருப்பூரில் 'சீட்' கொடுக்க தயாராக இருந்தாராம் இலை கட்சி தலைவர். ஆனால், மேலிட அனுமதி இல்லாமல் தொடர்ந்து இலை கட்சித் தலைவருடன் பேசி வந்த அந்த கந்த கடவுள் தலைவர், 'அதெல்லாம் வேண்டாம். நாங்க கேட்குற தொகுதிகளை மட்டும் கொடுத்தா போதும்' என்று சொல்லி, கொடுக்கவிருந்த தொகுதிகளை தடுத்து விட்டாராம். இந்த விஷயமும் இப்போது தாமரை கட்சியில் புகைகிறதாம்.

இசைக்கு புரியுமா?


சென்னையின் கபாலி தொகுதியில் தான் போட்டியிடுவேன் என்று சொல்லி மல்லுகட்டும் அந்த தாமரை கட்சி இசை தலைவருக்கு தொகுதி சரிபட்டு வராது என்று சொல்லி வருகின்றனர் கட்சியினர். தென் மாவட்டத்தில், மக்கள் சபையின் முதல் நபருக்கு எதிராக போட்டியிட்டால் வெற்றி நிச்சயம் என சர்வே முடிவுகள் சொல்வதை வைத்தே, அவர் அங்கு போக வேண்டும் என கட்சி தலைமை விரும்புகிறதாம். ஆனால், அதை எப்படி சொல்வது என புரியாமல் தவிக்கின்றனராம்.

Advertisement