போட்டிக்கு ஆர்வம்!
சூரிய கட்சியின் தலைமை போட்டிபோடும் சென்னை குளமான தொகுதியில், இம்முறை தாமரை கட்சியும் போட்டியிட வேண்டும் என விரும்பினராம். இதற்காக, வேட்பாளரைக்கூட தேர்வு செய்து விட்டனராம். ஆனால், தொகுதி பங்கீட்டின் போது, அந்த தொகுதியை விட்டுக் கொடுக்க இலை கட்சி தலைமை மறுத்து விட்டது. இதை அறிந்ததும், சூரிய கட்சி தலைமையை எதிர்த்து, இலை கட்சியில் போட்டியிட நிறைய பேர் முட்டி மோதுகின்றனராம்.
Advertisement

வாசகர்கள் கருத்துகள்