Advertisement
1. கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டை சுமுகமாக முடித்ததலில் இலைக் கட்சி தலைவருக்கும் மகிழ்ச்சியோ மகிழ்ச்சியாம். அதை கொண்டாடும்விதமாக, சொந்த ஊரில் உள்ள கோவிலுக்கு தன்னுடைய குடும்பத்தினரை, பேசி முடித்த மறுநாள் அனுப்பி வைத்து சிறப்பு பூஜைகள் செய்ய வைத்தாராம். அப்போது, அங்கு ஒருவருக்கு சாமி வந்து, அருள் வாக்கு சொல்ல, அதுவும் தனக்கு பாசிட்டிவ்வாக இருப்பதால், தலைவர் இரட்டிப்பு மகிழ்ச்சியில் இருக்கிறாராம்.
2. சுமுகமாக கூட்டணி கட்சிகளோடு பேசி முடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த பீயூஸான மனிதர், கடைசியாக கட்சி அலுவலகம் வந்தபோது, அடிக்கடி கட்சி பக்கம் எட்டிப் பார்க்காத தலைகளெல்லாம் அட்டெனென்ஸ் போட காத்திருந்ததாம். ஒவ்வொருவரையும் பார்த்த அந்த மனிதர், என்ன தேர்தல் நேரம் என்பதால், கட்சி பக்கம் எட்டிப் பார்க்கிறீர்களா? என பளிச்சென்று கேட்க, பலருடைய முகங்களும் பியூஸ் போனது போல் ஆகி விட்டதாம்.
4. கடந்த முறை 'மைக்' எடுத்து பேசி, ஊரெல்லாம் பிரசாரத்தில் ஈடுபட்ட அந்த சிங்கக் குரல் நடிகர் தலைவர், இப்போது விவசாயியோடு விவசாயியாக ஏர் கலைப்பையோடு தேர்தலை நோக்கி கிளம்பி இருக்கிறார். அவருக்கு கட்சி நிதி என்று எதுவும் இல்லாததால், தேர்தலை எப்படி எதிர்கொள்வது என புரியாமல் தட்டு தடுமாறுகிறாராம். பிரசார வேன் துவக்கத்திலேயே மக்கர் செய்ய, நண்பர்கள் யாராவது பிரசார வேன் கொடுத்து உதவ மாட்டார்களா என காத்திருக்கிறாராம்.
5. கட்சியை கலைக்காத குறையாக, கடந்த தேர்தலின் போதே சூரிய கட்சிக்கு ஆதரவு நிலை எடுத்த 'கண்ணே கலைமானே' நடிகர், அதற்கு தேவையானதை ராஜ்யசபா தேர்தலின் போதே பெற்று விட்டார். ஆனாலும், வரும் தேர்தலுக்கும் கட்சி சார்பில் போட்டியிட ஐவருக்கு வாய்ப்பளிக்க வேண்டும் எனச் சொல்லி, ஐந்து விரல்களை சூரிய கட்சியை நோக்கி கை நீட்ட, 'நீங்க செஞ்ச உதவிகளுக்கு நிறைய செஞ்சாச்சு; ரெண்டு போதும்' என சொல்லி மூன்று விரல்களை மடக்கி விட்டனராம்.
6. கடந்த முறை தாமரை கட்சியில் சென்னையின் விளக்கு தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்த பூ நடிகைக்கு, இப்போதும் தேர்தலில் போட்டிபோட ஆசையாம். ஆனால், போட்டி கடுமையாக இருப்பதால், தனக்கு இம்முறையும் சீட் கிடைக்க வாய்ப்பில்லை என முடிவெடுத்து ஒதுங்கி இருந்தாராம். அவருடைய கணவரோ, அரசியலில் ஒதுங்கக் கூடாது என சொல்லி அம்மணியை முடுக்கிவிட, சென்னையின் பிரதான தொகுதியில் சீட் கேட்டு மல்லுகட்டுகிறாராம்.
3. அறம்தாங்கியூரில் தொடர்ச்சியாக தானும் தன் மகனும் வென்று கொண்டிருக்கும் தொகுதியை இந்த முறை சூரிய கட்சியினர் எடுத்துக் கொள்ள முயல, கை கட்சியின் அரசர் கடும் கோபம் அடைந்துள்ளாராம். கடந்த லோக்சபா தேர்தலின்போது, மலைக்கோட்டை தொகுதியை தன்னிடம் இருந்து பறித்ததோடு, இப்போது என் மகனையும் தொகுதி இல்லாமல் செய்யும் முயற்சியில் இறங்கி இருக்கின்றனரே என்று சொல்லி, சூரிய கட்சி தலைமையை நோக்கி கொந்தளிக்கிறாராம்.
வேலுார்: 'கருணாநிதியின் மகள் கனிமொழிக்கே, 'சீட்' கொடுக்காதவங்க, கம்யூனிஸ்டுகளுக்கு எப்படி கூடுதல் சீட்...
ரேஷன் அரிசி அட்டைதாரர்களுக்கு பிரிஜ், பருப்பு, பாமாயில் இலவசம் உள்ளிட்ட 297 வாக்குறுதிகளை, அ.தி.மு.க.,...
புதுச்சேரியில், என்.ஆர்.காங்., - பா.ஜ., அடங்கிய தேசிய ஜனநாயக கூட்டணியில், அ.தி.மு.க., வுக்கு இரண்டு 'சீட்'...
திருச்சி மாவட்டத்தில், மணப்பாறை உள்ளிட்ட ஒன்பது சட்டசபைத் தொகுதிகள் உள்ளன. இவற்றில் எந்த தொகுதிக்கும் இல்லாத...
மத்திய அமைச்சரும், தமிழக பா.ஜ., தேர்தல் பொறுப்பாளருமான பீயூஷ் கோயல் நேற்று முன்தினம் சென்னை வந்தார். அ.தி.மு.க.,...
சேலம் மாவட்டம் வீரபாண்டி தொகுதி சிட்டிங் எம்.எல்.ஏ., தான் அ.தி.மு.க.,வின் ராஜமுத்து. மறைந்த முன்னாள் அமைச்சர்...
அ.தி.மு.க., உள்ளிட்ட நான்கு கட்சிகளை அடிமைகளாக்கி தமிழகத்திற்குள் நுழைய பா.ஜ., முயற்சிக்கிறது. ஆனால், அது...
சென்னை: பா.ம.க.,வின் 'மாம் பழம்' சின்னம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவையடுத்து, சென்னை உரிமையியல்...
- நமது நிருபர் -‛புதிய தமிழகம் கட்சியுடன் கூட்டணியை இறுதி செய்ய முடியவில்லை' என அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி...
சென்னை: 'மேற்காசிய போரின் பாதிப்புகளுக்கு மக்களை தயாராக இருக்க சொல்லும் முன், அவர்களை காக்க நீங்கள் தயாராக...
வாசகர்கள் கருத்துகள்