ஸ்டாலின் அஞ்ச மாட்டார்: உதயநிதி சவால்
அரியலுார்: ''தமிழகத்தை பழனிசாமி டில்லியில் அடகு வைக்க பார்க்கிறார்,'' என துணை முதல்வர் உதயநிதி குற்றஞ்சாட்டினார்.
தமிழகத்துக்கு உரிய நிதியை மத்திய அரசு தரவில்லை; 100 நாள் வேலை திட்டத்தை முடக்குகிறது. இதற்கு, அ.தி.மு.க., துணை நிற்கிறது. விரைவில் பா.ஜ.,விடம், அ.தி.மு.க.,வை பழனிசாமி சரண்டர் ஆக்குவார். பா.ஜ.,வுக்கு பழனிசாமி பயப்படலாம்; முதல்வர் ஸ்டாலின் அஞ்ச மாட்டார்.
ஒட்டு மொத்த தமிழகத்தையும், பழனிசாமி டில்லியில் அடகு வைக்க பார்க்கிறார். அதற்கு தமிழக மக்கள் இடம் கொடுக்க மாட்டார்கள். வரும் தேர்தலில் அ.தி.மு.க., கூட்டணியை மக்கள் கிளீன் போல்ட் ஆக்குவர். இவ்வாறு அவர் கூறினார்.
Advertisement
ஹி ஹி அவர் அஞ்ச மாட்டார், கைப்புள்ள பாண்டி லெவல்!
ஓட்டுக்கு லஞ்சம் குடுத்து மறுபடியும் எப்படியாவது ஆட்சிக்கு வருவோம் என்று ஒரு மிதப்பில் உளருகிறார்!
ஸ்டாலின் அஞ்சவும் மாட்டார். ஒரு சில அமைச்சர்களின் நடவடிக்கைகளால் படுக்கையில் துஞ்சவும் மாட்டார். இத நான் சொல்லல சொன்னது அப்பாதான்.
ஸ்டாலின் அஞ்ச மாட்டார் . பெண்கள் தான் தினம் தினம் அச்சத்தில் வாழ்கிறார்கள் .
கொலை, கொள்ளை, க.அ, மது, போலி மதச்சார்பின்மை, போலி கடவுள்மறுப்பு, பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பின்மை, லஞ்சம், அணடப்புளுகு, அரசுப்பணியாளர் உள்பட அனைத்து பிரிவினரையும் ஏமாற்றல், விலைவாசி உயர்வு,நீட்டாக புளுகு சர்வாதிகாரம், இன்னும் பல, இவற்றிற்கே அஞ்சாதவர் எதற்க்குத்தான் அஞ்சுவார்?
காங்கிரஸ் ஆளும் மாநிலங்கள் கூட இந்த அளவுக்கு மத்திய அரசு பற்றி புகார் செய்வதில்லை. தேவையற்ற தாக்குதல் மூலம் என்ன சாதித்து விட்டீர்கள்? நீங்களே அளித்த வாக்குறுதிப்படி மதுவிலக்கை அமல் படுத்துங்கள். உங்கள் வாக்குறுதிகளை உங்களாலே நிறைவேற்ற இயலவில்லை என்றால் கட்சியையே கலையுங்கள்.
This person is imposed on TN public because of family origin no other qualification uses his mouth in wherever way he likes a real movkery of democracy

இந்தியாவில் அரசியல்சாதிகள் யாருக்கும் எதுக்கும் அஞ்சத் தேவையே இல்லை.