Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ்

Advertisement


 ம.தி.மு.க.,வுக்கு கிடைத்தது 4 'சீட்'

 ம.தி.மு.க.,வுக்கு கிடைத்தது 4 'சீட்'

சென்னை: ''கூட்டணியில் ம.தி.மு.க.,வால் எந்த பிரச்னையும் ஏற்படாது,'' என, அக்கட்சியின் முதன்மை செயலர் துரை கூறினார்.

ம.தி.மு.க., உயர்நிலை குழு அவசர ஆலோசனை கூட்டம், சென்னை எழும்பூரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்தது.

கூட்டம் துவங்கும் முன், துரை அளித்த பேட்டி: ம.தி.மு.க., கடந்த ஒன்பது ஆண்டுகளாக தி.மு.க., கூட்டணியில் உள்ளது; நிபந்தனையற்ற ஆதரவை அளிக்கிறது. தொகுதி பங்கீட்டில் எவ்வித கால தாமதமும் ஏற்படவில்லை. கூடுதல் கட்சிகள் சேர்வதால், கூட்டணி பலம் பெற்றிருக்கிறது.

தமிழகத்தில் பா.ஜ., நுழையக்கூடாது என்ற அடிப்படையில், 'சீட்' எண்ணிக்கையை குறைத்துக் கொண்டிருக்கிறோம். ம.தி.மு.க., நலனை விட, தமிழகத்தின் நலன் காக்கப்பட வேண்டும். தி.மு.க., கூட்டணியில், ம.தி.மு.க.,வால் எந்த பிரச்னையும் ஏற்படாது. இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கிடையில், தி.மு.க., கூட்டணியில் ம.தி.மு.க.,வுக்கு நான்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மூன்று தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்திலும், ஒரு தொகுதியில் தனி சின்னத்திலும் ம.தி.மு.க., போட்டியிடும் என அக்கட்சி தலைமை அறிவித்துள்ளது.

Advertisement

மார் 12, 2026 05:58 pm

சோறு போட்டா ஓரமா போயி சாப்பிட்டுட்டு வந்துருவோம் எங்களால எந்த பிரச்சினையும் இல்லை உங்களுக்கு தேவை சோறு மானம் வெட்கம் எல்லாம் இல்ல

Reply Rate this
மார் 12, 2026 02:00 pm

அந்த தனி சின்னதிலும் நிற்க அமெரிக்காவில் வாழும் களின்படியார் மகளுக்கு கொடுத்து சமூகநீதியை காப்பாற்றலாம். வைகோ வாய்ப்பை தவற விடமாட்டார் என்று நம்பலாம்.

Reply Rate this
மார் 12, 2026 01:25 pm

இது ஒரு கட்சி, இதற்க்கு psycho ஒரு தலைவர். பேசாமல் கட்சியை களைத்து விட்டு, திமுக உடன் இணைத்து விடலாம்.

Reply Rate this
மார் 12, 2026 01:06 pm

பேசாம திமுகவில் கட்சியை அதாவது நாலுபேர் இருக்காங்க கட்சின்னு சொல்லக்கூடாது சேர்ந்திடுங்க. இணைக்கணும் என்றால் ஒரு 500 பேராவது இருக்கணும்ல.

Reply Rate this
மார் 12, 2026 12:57 pm

துரைசாமி, நாஞ்சில் சம்பத், மல்லை சத்யா கட்சிய விட்டு போய்விட்டார். கணேசமூர்த்தியை மறைந்து விட்டார், துரைவைகோ already MP, மீதி இருப்பது வைகோ மட்டுமே. So, ஒரு சீட் போதும்.

Reply Rate this
மார் 12, 2026 12:52 pm

வைகோ பேசாமல் கட்சியை கலைத்துவிட்டு தாய் கழகமான திமுகவில் இணைக்கலாம்

Reply Rate this
மார் 12, 2026 12:04 pm

கேவலம்

Reply Rate this
மார் 12, 2026 12:04 pm

2006ல் 35 சீட் கொடுக்கலேன்னு கூட்டணியில் இருந்து வெளியே சென்ற மானஸ்தனா நீங்கள் ???

Reply Rate this
மார் 12, 2026 10:39 am

oru தொகுதியில் தனது சொந்த சின்னம். பரவாயில்லை. கொஞ்சம் முதுகு எலும்பு ஒட்டிக்கொண்டுள்ளது.

Reply Rate this
மார் 12, 2026 08:21 am

இதைவிட கேவலமானது இல்லை. வெட்கம் மானம் சூடு சுரணை இருந்தால் கூட்டணியிலிருந்து வெளியேறி இருக்க வேண்டும். ஆசை யாரை விட்டது.

Reply Rate this