Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ்

Advertisement


கோவில்பட்டியில் வைகோ போட்டி? தனி சின்னத்தில் களமிறங்குகிறார்!

கோவில்பட்டியில் வைகோ போட்டி? தனி சின்னத்தில் களமிறங்குகிறார்!

- நமது நிருபர் -

தி.மு.க., சார்பில் ராஜ்யசபா எம்.பி., பதவி எதிர்பார்த்து கிடைக்காததால், சட்டசபை தேர்தலில் கோவில்பட்டி தொகுதியில் போட்டியிட, ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

தி.மு.க., கூட்டணியில் ம.தி.மு.க.,வுக்கு நான்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அவற்றில், ஒரு தொகுதியில் தனி சின்னத்திலும், மூன்று தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்திலும் போட்டியிட ஒப்பந்தமாகி உள்ளது.

இந்நிலையில், கோவில்பட்டி தொகுதியில் தனி சின்னத்தில் வைகோ போட்டியிட வேண்டும் என கட்சியினரும், நாயுடு சமூகத்தினரும் வலியுறுத்தியுள்ளனர்.

ம.தி.மு.க., நிர்வாகிகள் கூறியதாவது:
தி.மு.க., கூட்டணியில் ம.தி.மு.க.,வுக்கு நான்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்டு, தேர்தல் செலவையும் தி.மு.க., ஏற்றுக் கொண்டுள்ளது. எனவே, எங்களுக்கு அதிருப்தி இல்லை. மூன்று முறை ராஜ்யசபா எம்.பி.,யாகவும், இரு முறை லோக்சபா எம்.பி.,யாகவும் வைகோ இருந்துள்ளார்.

கடந்த 1996 சட்டசபை தேர்தலில், விளாத்தி குளத்தில் போட்டியிட்டு தோல்வி அடைந்த பின், சட்டசபை தேர்தலில் அவர் போட்டியிடவில்லை. 2021 தேர்தலில், கோவில்பட்டி தொகுதியில் போட்டியிட விரும்பினார். ஆனால், கடைசி நேரத்தில் போட்டியிடுவதை தவிர்த்தார்.

தற்போது ராஜ்யசபா எம்.பி., பதவியை எதிர்பார்த்தார்; கிடைக்கவில்லை. இந்நிலையில், சட்டசபையிலும் அவரது குரல் ஒலிக்க வேண்டும் என ம.தி.மு.க.,வினர் விரும்புகின்றனர். கோவில்பட்டியில் உள்ள நாயுடு சமூகத்தைச் சேர்ந்த தொழிலதிபர்களும், வைகோ போட்டியிட வலியுறுத்தியுள்ளனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement

மார் 13, 2026 01:21 pm

2016இல் இதே தொகுதியில் போட்டியிட முடிவு செய்து வேட்பு மனு தாக்கல் செய்யும் நிமிடம் வேறு ஒருவரை தாக்கல் செய்ய வைத்தார். எனவே இதுவும் மாறலாம்!

Reply Rate this
மார் 13, 2026 01:20 pm

ரெட்டையிர்மெண்ட் தான் மக்கள் கொடுப்பார்கள். ஓய்வெடுங்கள் பெரியவரே

Reply Rate this
மார் 13, 2026 12:28 pm

கடலை மிட்டாய் கொடுத்து அனுப்புங்கள் தமிழ் வாக்காளப் பெருமக்களே

Reply Rate this
மார் 13, 2026 12:26 pm

பெட்டி கோபாலுக்கு இனி இறங்கு முகம்தான். அடுத்து வீட்டுக்கு அனுப்ப வேண்டியதுதான்.

Reply Rate this
மார் 13, 2026 11:20 am

கோவில்பட்டியில் நின்றாலும் சரி, இல்லை கொட்டாம்பட்டியில் நின்றாலும் சரி ஒரு காலத்தில் வீரவசனம் பேசிய இந்த தி.மு.கவின் அடிமைக்கு எங்கு நின்றாலும் தோல்வி உறுதி.

Reply Rate this
மார் 13, 2026 10:54 am

கோவில்பட்டியில் இவர் சார்ந்த சமுதாய ஓட்டு அதிகம் என்றாலும் அதே சமுதாயத்தை சார்ந்த கடம்பூர் ராஜூ மிக பிரபல்யம். ஆக, வைகோ தோல்வி உறுதி.

Reply Rate this
மார் 13, 2026 10:37 am

அடேங்கப்பா . . . இதுக்கே வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கலாம் . . . . ஏனய்யா இந்த பொழப்பு ? . . . அன்னைக்கே வாஜ்பாயி கூப்பிட்டாரு . . . மத்திய மந்திரி ஆக்குறேன் , மதிப்பு மரியாதையா வாழ்க்கையை ஓடிருக்கலாம் . . . இப்டி தாத்தா மகன் பேரன் கொள்ளுப்பேரன் - நண்டு நசுக்கு எல்லாத்துக்கும் கும்பிடு போட்டுக்கிட்டு துண்டை மாத்தி மாத்தி போட்டுக்கிட்டு , , , கடைசி காலத்தில் ? ? ? ? விதி வலியது . .? ?

Reply Rate this
மார் 13, 2026 10:29 am

Padhavi mukkiyam..he can do anything for that. No principles and the fools who have been sacrificed for him must be watching him from Hell

Reply Rate this
மார் 13, 2026 10:22 am

திராவிடர்கள் தான் சார்ந்த சமூகம் தன் குடும்பத்துக்கு மட்டுமே பாடுபடுவார்கள். தமிழர்கள் தான் தமிழக மக்கள் நலனை முன்னிட்டு செயலாற்றுவார்கள்

Reply Rate this
மார் 13, 2026 10:11 am

நாயுடு சமுகத்தின் துரோகி இந்த சைக்கோ இவன் ஒரு கிறிஷ்த்துவன். இந்து என்று போலி வேடம் போடுகிறான். இந்த உலகத்திலே மிக கேவலமான அரசியல்வியாதி இவன்

Reply Rate this