விஜயகாந்தின் ஆன்மா ஒருபோதும் மன்னிக்காது; பாஜ விமர்சனம்
சென்னை: திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்ததை விஜயகாந்தின் ஆன்மா ஒருபோதும் மன்னிக்காது என்று தமிழக பாஜ விமர்சித்துள்ளது.
சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தேமுதிகவைத் தவிர ஏனைய கட்சிகள் தங்களின் கூட்டணி நிலைப்பாட்டை எப்போதே வெளிப்படுத்தி விட்டன. கூட்டணி பேரத்தால் தொடர்ந்து காலம் தாழ்த்தி வந்த தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா, இன்று யாரும் எதிர்பார்க்காத வகையில், முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து, திமுக கூட்டணியில் இணைந்து கொண்டார். இதன்மூலம், தேமுதிக முதல்முறையாக திமுகவுடன் கூட்டணி அமைத்துள்ளது.
இது தமிழக அரசியலில் யாரும் எதிர்பார்க்காத திருப்பமாக அமைந்து விட்டது. தேமுதிகவின் இந்த நகர்வு அதிமுக மற்றும் பாஜவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்தது குறித்து தமிழக பாஜ விமர்சனம் செய்துள்ளது.
எக்ஸ் தளப்பதிவில்; தன் வாழ்நாள் முழுவதும் தீய சக்தி திமுகவை எதிர்த்து மக்கள் பணியாற்றியவர் கேப்டன் விஜயகாந்த். அதனால், விஜயகாந்துக்கும், அவர் உருவாக்கிய தேமுதிகவுக்கும் கொடுமைகளையும், அவமானங்களையும் மட்டுமே வழங்கியது திமுக. அத்தகைய மக்கள் விரோத திமுகவுடன் இன்று கேப்டன் உருவாக்கிய இயக்கம் இணைந்ததை, ஒருபோதும் கேப்டனின் ஆன்மா மன்னிக்காது!, இவ்வாறு குறிப்பிட்டுள்ளது.
Advertisement
விஜயகாந்த் உயிருடன் இருந்திருந்தால் நேரில் நரேந்திர மோடியையும் அமித்ஷாவையும் நிர்மலா சீதாராமனையும் எப்போதோ நேரில் சந்தித்து தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் ஒதுக்கீடு செய்த நிதியை விடுவிக்காமல் பல இன்னல்களை தொடர்ச்சியாக ஏற்படுத்துவதற்காக அவருடைய பாணியில் கண்டித்து நிதி உதவிகளை உடனை விடுவிக்க செய்திருப்பார். அவருடைய உடல் நல பாதிப்புகளை கருதி தமிழ்நாடு 2026 தேர்தலில் திமுகவுடன் முதலில் கூட்டணி அமைத்த பிற கட்சி தேமுதிக என்ற பெருமையை ஏற்படுத்தி இருப்பார்.
விஜயகாந்தே அப்படித்தான். கூட்டணி என்பது கொள்கை அடிப்படையில் ஆனதல்ல. யாருக்கு கூட்டணி அமைக்கும் திறமை இருக்கிறதோ அவர்கள் வெற்றி பெறுகிறார்கள்.
பாஜக சொன்னது நாகரிகமான, நியாயமான விமர்சனம் என்றாலும் இப்படிப் பேசுவது தவறு .... கூட்டணி முடிவு இன்றைய தலைவர் பிரேமலதாவின் விருப்பம் .....
கலைஞர் கருணநிதி வயோதிகம் காரணமாக இறந்தபோது துக்கம் தாங்காமல் விஜயகாந்த் அழுதுகொண்டு வீடியோ வெளியிட்டது ஏன் என்பதை தனது மரணத்திற்கு பிறகு கலைஞரிடம் விஜயகாந்த் ஜெயலலிதாவிடம் கூட்டணி அமைத்து தமிழ்நாட்டை பத்தாண்டுகள் வளர்ச்சியில் பின்னோக்கி செல்ல வைத்து விட்டேனே எனக்கூறி தேம்பி அழுதிருப்பார்.

அவங்க கட்சி வளர வேண்டாமா ? எவ்வளவு காலம் தான் அவர்கள் சட்டமன்றத்தில் இல்லாமல் இருப்பார்கள் ?