சினிமா 'பிளாக் டிக்கெட்' போல விற்று தீர்ந்த த.வெ.க., விருப்ப மனு
சென்னை: சினிமா 'பிளாக் டிக்கெட்' போல, த.வெ.க., விருப்ப மனு வினியோகம் துவங்கிய ஒன்றரை மணி நேரத்தில் 10,000 மனுக்கள் விற்று தீர்ந்தன.
சட்டசபை தேர்தலில் போட்டியிட விரும்பும் கட்சியினருக்கு, விருப்ப மனு வினியோகம், சென்னை பனையூரில் உள்ள த.வெ.க., அலுவலகத்தில் நேற்று பகல் 12:00 மணிக்கு துவங்கியது.
த.வெ.க., தலைவர் ஜோசப் விஜய் என்ற பெயரில் முதல் மனுவை, அக்கட்சி பொதுச்செயலர் ஆனந்த் பெற்றுக்கொண்டார். வழக்கமாக, அ.தி.மு.க., - தி.மு.க., போன்ற கட்சிகளின் விருப்ப மனு, 10,000 முதல் 15,000 ரூபாய் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படும்.
ஆனால், த.வெ.க.,வில் விருப்ப மனு கட்டணம் வெறும் 100 ரூபாய் மட்டும்தான். அதை நிரப்பி கொடுக்கும்போது, பொது பிரிவினர் 10,000 ரூபாயும், பட்டியலின பிரிவினர் 5,000 ரூபாயும் கொடுக்க வேண்டும்.
அதுகுறித்து தெரியாமல், த.வெ.க.,வினர் கட்டுக்கட்டாக மனுக்களை வாங்கினர். பெரும்பாலும், விஜய் பெயரிலேயே அவை வாங்கப்பட்டன. அதனால், விருப்ப மனு வினியோகம் துவங்கிய ஒன்றரை மணி நேரத்தில், 10,000 மனுக்கள் விற்று தீர்ந்தன.
விருப்ப மனுவில், ஜாதி சங்கங்களில் இருந்தால் அதன் விபரம், தாய்மொழி, வருமான வரி தாக்கல் செய்யப்பட்ட விபரம், சொத்து விபரம் உள்ளிட்ட, 37 கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன.
Advertisement
விசிலடித்தான் குஞ்சுகள் என்பதை நிரூபித்து நிரூபித்து விட்டார்கள்.
கறுப்பை வெள்ளை ஆக்கும் திருவிளையாடல் இந்த விருப்ப மனு விவகாரத்திலும் நடக்கும் வாய்ப்பு உள்ளது... அயோக்கிய அல்லிலோயா கும்பல் இது.
விஜய்க்கு மட்டும்தான் பதவி ஆசை என்றிருந்த செய்திக்கு பின்னர் இப்போ அக்கட்சியில் சேர்ந்த உடனே எம் எல் ஏ ஆசையுடன் இவளோ பேரா?
நிர்மல்...விருப்பமனு அஇஅதிமுகவில் ரூபாய் பத்தாயிரம் முதல் 15ஆயிரம்.நீ நூறு ரூபாய்க்கு விக்கிறே...ப்ளாக் டிக்கட்டே 2ஆயிரம் கொடுத்து வாங்கும் அணில் குஞ்சுகளுக்கு நூறு ரூபாய் எல்லாம் எம்மாத்திரம்.
திரைப் படம் ரிலீஸ் ஆகும் முதல் நாளிலேயே முண்டியடித்துக் கொண்டு பிளாக்கில் டிக்கெட் வாங்கியே பழக்கப்பட்டவர்கள் திடீரென மாறி விடுவார்களா என்ன? இங்கும் இப்படித்தான் முண்டியடிப்பார்கள் ! தியேட்டரை ஒட்டியுள்ள பொதுமக்கள் , பாதசாரிகளுக்கு பட ரிலீசின் முதல் நாளில் கொடுக்கும் வழக்கமான தொந்தரவுகளை பனையூரில் வாழும் பொதுமக்களுக்கும் கொடுத்துள்ளனர் அணில் குஞ்சுகள்.
வரி ஏய்ப்பு பற்றி மக்களிடம் தெரிவித்தால் JOSEPH விஜய் ஒரு தொகுதியில் கூட டெபாஸிட் வாங்க வாய்ப்பில்லாமல் போய்விடும்.

இந்த வருமானம் எல்லாம் வருமான வரி கடணக்குல வருமா அல்லது ஜடி ரெய்டு வருமா டேய் கிறுக்கு பசங்களா அது தேர்தலில் நிற்பதற்க்கான விருப்பமனுடா சினிமா டிக்கெட் கிடையாதுடா இதையும் பிளாககுல விற்பானுக போலயே