கூட்டணி என்பது தலைவர்களின் விருப்பம்: தேமுதிக-திமுக கூட்டணி குறித்து இபிஎஸ் பேட்டி
சென்னை: ''கூட்டணி என்பது அந்தந்த கட்சி தலைவர்களின் விருப்பம்,'' என அதிமுக பொதுச்செயலர் இபிஎஸ் கூறியுள்ளார்.
நேற்று வரை எந்த கூட்டணிக்கு செல்வது என சொல்லாமல் தேமுதிக இருந்தது. இன்று காலை முதல்வர் ஸ்டாலினை சந்தித்த பிரேமலதா, தேமுதிக - திமுக கூட்டணியை உறுதி செய்தார். இதற்கு திமுக கூட்டணி கட்சிகள் வரவேற்பு தெரிவித்து வருகின்றன.
அதேநேரத்தில், தமிழக பாஜ வெளியிட்ட அறிக்கையில், ' திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்ததை விஜயகாந்த் ஆன்மா மன்னிக்காது,' என விமர்சனம் செய்திருந்தது. தமாகா தலைவர் வாசனும் தேமுதிகவின் முடிவை விமர்சனம் செய்திருந்தார்.
இன்று காலை அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸிடம், பிரேமலதா குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பிறகு பதிலளிப்பதாக கூறியிருந்தார்.
இந்நிலையில் இன்று மாலை சட்டசபை முடிந்து கிளம்பும்போது, தேமுதிக - திமுக கூட்டணி குறித்து இபிஎஸ் கூறுகையில், கூட்டணி என்பது அந்தந்த கட்சிகளின், தலைவர்களின் விருப்பம்' என ஒரே வரியில் பதிலளித்து விட்டு சென்றார்.
Advertisement
ராஜ்யசபா தேர்தல் சட்ட மன்ற தேர்தலுக்கு முன்பே வருவதால் தனுக்கு தனது தம்பிக்குஒரு ராஜ்யசபா பதவி கிடைக்கும் என்ற இறுமாப்பில் இந்த அம்மையார் அங்கே சென்றிருக்கிறார் ராஜ்ய சபா தேர்தல் முடிந்து இவரது தம்பிக்கு ஒரு பதவியும் கொடுக்கவில்லை என்று தெரிந்தவுடன் அங்கே ராஜினாமா செய்து விட்டு தனியாகவே நிற்பார் உள்ளதும் போச்சுடா நொள்ளக்கண்ணா என்றாகிவிடும் இந்த அம்மையாரின் விளையாடல் பிறகு வருந்தி என்ன பயன்
ஆமாம் சரிதான் , கூட்டணி என்பது கொள்ளைக்கூட்ட தலைலைவர்களின் விருப்பம்
கூட்டணி என்பது ஏமாற்று வித்தை. தி மு க கொள்கை பிராமண எதிர்ப்பு. கடவுள் இல்லை என்கிற திடமான நம்பிக்கை. இந்த கட்சியுடன்கூட்டணி வைத்துக்கொள்ளும் கட்சிகள் ஜாதி துவேஷம் கொண்டது அல்ல. கடவுள் நம்பிக்கை கொண்டவை. வாக்காளர்கள் கூட்டணிக்கு
வாக்கு அளிக்காமல் சுயேச்சை வேட்பாளர் ஒருவற்கு அளிக்கலாம்
பதிவு பெற்ற கட்சிகள் உள்ளாட்சி, நகராட்சி, சட்ட, பாராளுமன்ற தேர்தலில் போட்டி இடுவது பற்றி தேர்தல் ஆணையம் மூலம் விருப்ப தேர்வு செய்து, கட்டாயம் தனித்து போட்டியிட வேண்டும். தேர்தல் ஆணையம் கட்சி நிதி கணக்கு எண் வழங்க வேண்டும். அந்த எண் மூலம் மட்டும் நிதி வசூலிக்க வேண்டும். அந்த கணக்கில் இருந்து கட்சி பொருளாளர் பணம் எடுக்க அனுமதிக்க வேண்டும். தாவா ஏற்பட்டால், RBI வசம் நிதியை ஒப்படைக்க வேண்டும்.
வெயிட்டான பொட்டி பசையான எடத்துல தானங்க கிடைக்கும்? அடுத்து நம்ப பண்ருட்டி யாரு வேற கெளம்பிட்டாரு. எங்க வெயிட்டானதா கெடைக்கும்னுட்டு. ம்ம்ம் நடக்கட்டும். இப்போ பொட்டி பாத்தா தாங்க உண்டு.

திமுக தோற்க்கும் இடங்களை தே மு தி க வுக்கு கொடுத்து உள்ளடி வேலைகள் அனைத்தும் செய்து தோற்கடிக்க படுவார்கள். மற்ற இடங்களில் தே மு தி க வின் ஓட்டுகளை திமுக பெற்று விடுவார்கள். மொத்ததில் தே மு தி க வுக்கு தோல்வி.