தமிழகத்தில் ஏப்ரல் 23ல் ஒரே கட்டத் தேர்தல்!
நமது நிருபர்
தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் 23ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறும் என இந்திய தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.
தமிழகம், புதுச்சேரி, கேரளம், மேற்கு வங்கம், அசாம் ஆகிய, ஐந்து மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தல் தேதியை இன்று (மார்ச் 15) இந்திய தேர்தல் கமிஷன் வெளியிட்டது.
டில்லி விஞ்ஞான் பவன் அரங்கில் மாலை 4 மணிக்கு செய்தியாளர் சந்திப்பில், தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ்வர் குமார் உள்ளிட்ட தேர்தல் கமிஷனர்கள் தேர்தல் அட்டவணையை வெளியிட்டனர்.
தமிழக சட்டசபை தேர்தல் (ஏப்.,23 )
* வேட்பு மனு தாக்கல் துவக்கம்- 30.03.2026
* வேட்பு மனு தாக்கல் கடைசி நாள்- 06.04.2026
* வேட்பு மனு பரிசீலனை -07.04.2026
* வேட்பு மனு வாபஸ் -9.04.2026
* ஓட்டுப்பதிவு- 23.04.2026
* ஓட்டு எண்ணிக்கை- 4.05.2026
அதேபோல், கேரளம், புதுச்சேரி, மேற்குவங்கம், அசாம் ஆகிய 4 மாநில சட்டசபை தேர்தல் தேதிகளும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அசாம் சட்டசபை தேர்தல் (ஏப்.,09 )
* வேட்பு மனு தாக்கல் துவக்கம்- 16.03.2026
* வேட்பு மனு கடைசி நாள்- 23.03.2026
* வேட்பு மனு பரிசீலனை-24.03.2026
* வேட்பு மனு வாபஸ் -26.03.2026
* ஓட்டுப்பதிவு- 9.04.2026
* ஓட்டு எண்ணிக்கை- 4.05.2026
கேரளா மற்றும் புதுச்சேரி சட்டசபை தேர்தல் (ஏப்.,09 )
* வேட்பு மனு தாக்கல் துவக்கம்- 16.03.2026
* வேட்பு மனு கடைசி நாள்- 23.03.2026
* வேட்பு மனு பரிசீலனை-24.03.2026
* வேட்பு மனு வாபஸ் -26.03.2026
* ஓட்டுப்பதிவு- 09.04.2026
* ஓட்டு எண்ணிக்கை- 4.05.2026
மேற்குவங்கம் சட்டசபை தேர்தல் (இரண்டு கட்டம்)
முதல் கட்டம்
* வேட்பு மனு தாக்கல் துவக்கம்- 30.03.2026
* வேட்பு மனு பரிசீலனை- 06.04.2026
* வேட்பு மனு கடைசி நாள்-07.04.2026
* வேட்பு மனு வாபஸ் -09.04.2026
* ஓட்டுப்பதிவு- 23.04.2026
* ஓட்டு எண்ணிக்கை- 4.05.2026
இரண்டாம் கட்டம்
* வேட்பு மனு தாக்கல் துவக்கம்- 02.04.2026
* வேட்பு மனு பரிசீலனை- 09.04.2026
* வேட்பு மனு கடைசி நாள்-10.04.2026
* வேட்பு மனு வாபஸ் -13.04.2026
* ஓட்டுப்பதிவு- 29.04.2026
* ஓட்டு எண்ணிக்கை- 4.05.2026
தினமலர் நேரலை; வீடியோ பாருங்கள்!
டில்லியில் தேர்தல் கமிஷனர்கள் 5 மாநில சட்டசபை தேர்தலுக்கான தேர்தல் தேதியை அறிவித்தனர். இவர்களது நிருபர்கள் சந்திப்பு, தினமலர் யுடியூப் உள்ளிட்ட இணையத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.
வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.
https://www.youtube.com/live/-SxlxipdTGU?si=IHqQk_eUVDIOuVHI
Advertisement
ஏப்ரல் 23 ம் தேதி ஒரு கட்சிக்கு முடிவுரை எழுதப்படும். Result May 4ம் தேதி.
மக்களின் வரிப்பணத்தில் தண்டச் சம்பளம் வாங்கும் தேர்தல் ஆணையம், பாஜக வின் புரிந்துணர்வுக் கூட்டணிக் கட்சியான திமுக நிறைவேற்றவே முடியாத, தொடரவே முடியாத திட்டங்களை அறிவித்து மக்களை ஏமாற்றும் வரை காத்திருந்து விட்டு, ஒரு மாத இடைவெளியில் தேர்தலை அறிவிப்பது மொள்ளமாரித்தனம். மூன்று மாதம் முன்பே அறிவித்து இருக்க வேண்டியதுதானே?
May 4: ஓட்டு இயந்திரத்தில் மோசடி செய்து எடப்பாடி ஆட்சியை பெற்றுள்ளார் என அப்போது புலம்புவார் தற்பொழுதைய விடியலார்.
டீவியில் தேர்தல் தேதி அறிவித்துக்கொண்டிருக்கும்போதே ரயிலில் எல்லா டிக்கெட்டுகளும் புக் ஆகி விட்டனவே இது எப்படி?
தனியார் மற்றும் அரசு மற்றும் அரசு சார்பு நிறுவனங்களில் வேலை செய்பவர்கள் வெள்ளிகிழமை லீவு கிடைக்காமல் சொந்த ஊரு போய் வாக்கு செலுத்த இயலாமல் அந்த வாக்குகள் எல்லாம் வீணாக போக அருமையாக உழைத்த உயர் அதிகாரிகளுக்கெல்லாம் நன்றிகள்
தேர்தல் நடத்துங்கள். ஆனால் நியாமாக நடக்கும் என்று எதிர்பார்ப்பது நியாயமற்றது. இதில் பாதிக்கப் படுவது சாதாரண குடிமகன் தான்.
இன்று காலை 10.40 மணிக்கு தினமலரில் நான் போட்ட பதிவு: தமிழகத்தில் மே மாதம் சித்திரை திருவிழா வருவதால் அநேகமாக ஏப்ரல் மாதம், 22 அல்லது 23 ல் தேர்தல் தேதியை
அறிவிக்க வாய்ப்பு உண்டு.

இவுரு பதவி நீக்கம் மனு என்னாச்சி? ஏப்ரல் 23 அன்று பதவியில் இருப்பாரா? 118 பேர் சுருட்டி வச்சிருந்த போர்க்கொடியை தூக்கி இருக்காங்களே.