Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ்

Advertisement


 ஒற்றை இலக்க தொகுதிகள்: தி.மு.க., முடிவு; வி.சி., அதிர்ச்சி

 ஒற்றை இலக்க தொகுதிகள்: தி.மு.க., முடிவு; வி.சி., அதிர்ச்சி
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

சென்னை: சட்டசபை தேர்தலில், விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு எட்டு தொகுதிகள் என, ஒற்றை இலக்கத்தில் வழங்க தயாராக இருப்பதாக தி.மு.க., தொகுதி பங்கீட்டு குழுவினர் தெரிவித்துள்ளனர்.

தி.மு.க., கூட்டணி கட்சிகளுடன் தொகுதி ஒதுக்கீடு தொடர்பாக பேச்சு நடத்தி வரும் பாலு தலைமையிலான தி.மு.க., குழுவினர், நேற்று வி.சி., கட்சியுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சு நடத்தினர். வி.சி., சார்பாக, அதன் தலைவர் திருமாவளவனும், நிர்வாகிகளும் பங்கேற்றனர்.

அப்போது, கூட்டணியில் 12 தொகுதிகளை கேட்டு, வி.சி., சார்பில் பட்டியல் கொடுக்கப்பட்டது. ஆனால், கடந்த 2021 தேர்தலை விட, இரண்டு 'சீட்' கூடுதலாக, எட்டு தொகுதிகள் தர தயாராக உள்ளதாக தி.மு.க., குழுவினர் தெரிவித்தனர்.

இதையடுத்து, 'இம்முறை இரட்டை இலக்கத்தில் தொகுதிகள் பெறுவோம் என, கட்சியினரிடம் கூறி வருகிறோம்; ஒற்றை இலக்கத்தில் பெற்றால், கட்சிக்குள் விமர்சனம் எழும். எனவே, 10 தொகுதிகளாவது கொடுக்க வேண்டும்' என, வி.சி., தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த தி.மு.க., குழுவினர், 'உங்களுக்காக ராமதாஸ் தரப்பு பா.ம.க.,வை கூட்டணியில் சேர்க்க முடியவில்லை. 'தே.மு.தி.க., மக்கள் நீதி மய்யம் போன்ற கட்சிகள் கூட்டணியில் புதிதாக இணைந்திருப்பதால், அவர்களுக்கும் தொகுதிகள் ஒதுக்க வேண்டும்.
'மேலும், இந்த தேர்தலில் கடும் போட்டி இருக்கும் என்பதால், அதிக தொகுதிகளில் போட்டியிட தி.மு.க., விரும்புகிறது. எனவே, விட்டுக் கொடுங்கள்' என கூறியுள்ளனர். இதனால், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் அதிர்ச்சியடைந்து உள்ளனர்.

Advertisement

மார் 03, 2026 01:00 pm

அதிர்ச்சிலாம் வேணாம்...காங்.வெளியேற நேரம் பார்த்துக்கிட்டு இருக்கு.10தொகுதி விசிக்கு கிடைக்கும்.

Reply Rate this
மார் 03, 2026 12:20 pm

டிரம்ப் இத்துடன் ஈரானை தாக்குவதை நிறுத்திக் கொள்ளவேண்டும் விசிக தலைவர் திருமாவளவன்: நேற்று நாங்குனேரியில் ஒரு ரௌடி கும்பல் கண்ணில் பட்ட எல்லோரையும் வெட்டி இருக்கானுங்க அதில் இறந்துபோன இரண்டு பேரும் இவருடைய தலித் இனத்தை சேர்ந்தவர்கள். அவர்களை போய் பார்க்காவிட்டாலும் பரவாயில்லை ஆனால் அதற்கு சின்னதாக ஒரு கண்டனத்தை தெரிவிக்கவில்லை. இந்த திராவிடமாடல் ஆட்சியை கண்டிக்க துப்பில்லை இந்த லெட்சணத்தில் இவரு ட்ரம்பை கண்டிக்க போயிட்டாரு!

Reply Rate this
மார் 03, 2026 12:09 pm

ராமதாசிடம் திருமாவை சொல்லி அரசியல். திருமாவிடம் ராமதாஸ் பெயரை சொல்லி சீட் குறைப்பு. ஒரே இடத்திலேயே நிரந்தர அடிமைகளாக இருந்தால் இப்படித்தான் நடக்கும். இது தேவைதான் திருமாவிற்கு!

Reply Rate this
மார் 03, 2026 11:31 am

காங்கிரஸ் tvkக்கு போகும் போது குருமா வுக்கு என்ன வந்தது. போயி தொலைய வேண்டியது தானே, கூட அந்த நாதக வையும் கூட்டி கொண்டு போங்க. அந்த வைகோவையும் கூப்பிடுங்க. ஒரு சில இடங்களில் ஜெயிக்க வாய்ப்பு கிட்டும். திமுகவின் திமிர் தனத்தை அடக்க வாய்ப்பு கிடைக்கும்.

Reply Rate this

விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆளும் கட்சியும் அல்ல ஆளத் துடிக்கிற கட்சியும் அல்ல திருமாவளவன்: நாலு சீட்டு கொடுத்தா போதும் ஐயா நாங்கள் என்றும் உங்களுக்கு முட்டுக் கொடுக்கும் அடிமை கட்சியாவே இருப்போம்.

Reply Rate this
மார் 03, 2026 08:25 am

அட நீங்க வேற... அவனுக்கு ஒரே ஒரு தொகுதி கொடுத்தாலும் போதும்.... அறிவாலய வாசலில் தான் நிற்பான்.... அப்படியே அந்த பெட்டி.... அதை மட்டும் கொடுத்து விடுங்கள்.... அப்போ தாழ்த்தப்பட்ட மக்கள் நலன்.... அவர்கள் எக்கேடு கெட்டால் நமக்கென்ன ?

Reply Rate this
மார் 03, 2026 08:19 am

திருமாவளவன் இதில் அதிர்ச்சி அடைவதற்கு எல்லாம் ஒன்றுமில்லை. இவருடைய அதிருப்தியை திமுககாரனுங்க பொருட்படுத்த மாட்டானுக. இதையும் மீறி இந்த திருமா இரட்டை தொகுதிகள்தான் வேணும்னு அடம்பிடித்தால் அப்றம் திமுககாரனுங்க வழக்கம்போல அவிங்க புத்தியை காட்டிருவானுக. எப்படின்னா விசிகவின் வன்னியரசு, திருப்போரூர் MLA பாலாஜி, நாகை MLA ஷா நவாஸ், செஞ்சி MLA பாபு போன்றவர்களை வைத்து கட்சியில் திருமாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கவைத்து விசிகவை இரண்டாக உடைக்கவும் தயங்க மாட்டார்கள். எனவே திருமாவளவனுக்கு இப்போது இருக்கும் ஒரேவழி ஸ்டாலின் கொடுக்கும் தொகுதிகளை சத்தமில்லாமல் வாயைப் பொத்திக்கொண்டு வாங்கிக் கொள்வதுதான்.

Reply Rate this

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில துணைப் பொதுச்செயலாளரா இருந்த ஆதவ் அர்ஜூனாவை ஏன்யா சஸ்பெண்ட் பண்ணி அவரை தவெக விஜய்யோட கட்சிக்கு போகவிட்டீங்க? அவருக்கு நெஞ்சுல எவ்வளவு துணிச்சல் இருந்தால் எங்க தலைவர் திருமாவளவனை முதல்வர் ஆக்குவேன்னு சொல்லியிருப்பாரு?

Reply Rate this