கும்பகோணத்தில் ராமதாஸ்?
பா. ம.க., நிறுவனர் ராமதாசை, முதல் முறையாக தேர்தலில் போட்டியிட வைக்க, சசிகலா முயற்சி செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
இது குறித்து, ராமதாஸ் ஆதரவாளர்கள் கூறியதாவது: பா.ம.க., நிறுவனர் ராமதாசும், ஜெயலலிதா தோழி சசிகலாவும், கூட்டணி அமைத்துள்ளனர். இந்த புதுக் கூட்டணி, 234 தொகுதிகளிலும் போட்டியிட உள்ளது. இந்த கூட்டணி வெற்றி பெறுவது மிகக் கடினம்தான். ஆனால், வட மாவட்டங்களில், வன்னியர் ஓட்டுகளையும், தென் மாவட்டங்களில் முக்குலத்தோர் ஓட்டுகளையும், இந்த கூட்டணி நிச்சயம் பிரிக்கும். இதனால், தி.மு.க., - தே.ஜ., கூட்டணிக்கு நிச்சயம் இழப்பு ஏற்படும்.
ஆனாலும், வெற்றி அவசியமானது என்பதால், டெல்டா மாவட்டத்தில் உள்ள ஒரு தொகுதியில் போட்டியிட சசிகலா முடிவு செய்துள்ளார். அதேபோல், ராமதாசையும் முதல் முறையாக தேர்தலில் போட்டியிட வைக்க, சசிகலா தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அதன்படி, முக்குலத்தோர் மற்றும் வன்னியர்கள் அதிகமாக உள்ள கும்பகோணம் தொகுதியை, ராமதாசுக்கு சசிகலா பரிந்துரை செய்துள்ளார். இவ்வாறு அவர்கள் கூறினர்.
Advertisement

வாசகர்கள் கருத்துகள்