Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் கருத்துக் கணிப்பு முடிவுகள்

Advertisement


தொகுதி பங்கீடு சந்திப்பு: அண்ணாமலை புறக்கணிப்பு

தொகுதி பங்கீடு சந்திப்பு: அண்ணாமலை புறக்கணிப்பு
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

கோவை: தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றுள்ள அ.தி.மு.க., -பா.ஜ., - அ.ம.மு.க.,- பா.ம.க., உள்ளிட்ட கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்கீடு செய்வதற்கான கூட்டம் சென்னையில் நேற்று நடந்தது.

தமிழக பா.ஜ., தேர்தல் பொறுப்பாளர் பியூஸ் கோயல், அ.தி.மு.க., பொது செயலாளர் பழனிசாமி ஆகியோர் முன்னிலையில் தொகுதி பங்கீடு இறுதியானது.

பா.ஜ., தரப்பில், மத்திய இணை அமைச்சர் முருகன், மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் மாநில தலைவர் தமிழிசை உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஆனால், முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை பங்கேற்கவில்லை. அவர், கோவையில் உள்ள வீட்டில் தங்கியிருந்தார். இதுதொடர்பாக விசாரித்தபோது, சொந்த காரணங்களால் சென்னை செல்லவில்லை என தெரிவித்தனர்.

கோவை மாவட்டத்தில் எந்த தொகுதியில் போட்டியிட்டால், தனக்கு சாதகமாக இருக்கும் என ஆதரவாளர்களிடம் ஆலோசித்து வந்தார். இச்சூழலில், தொகுதி பங்கீடு கூட்டத்தில் அவர் பங்கேற்கச் செல்லாமல் தவிர்த்தது, அரசியல் வட்டாரத்தில் பேசும் பொருளாக உருவெடுத்துள்ளது.

Advertisement

மார் 24, 2026 04:26 pm

There was not even to say the name of BJP for Panchayat board member level, whereas Shri Annamalais way of challenging the ruling party and that too DMK is very difficult yet ensured to get the entrance of BJP in the Assembly. Now, in the absence of Shri Annamalai, there is a doubt the existing four will come back or totally wiped out, God only knows.

Reply Rate this

இன்றைய தமிழகத்தின் நிலை
சிறுவர்கள் - மொபைலுக்கு அடிமை.
வாலிபர்கள் - சினிமா மோகம் காதல் போதை பொருளுக்கு அடிமை.
இளைஞர்கள- மதுவுக்கும் நாட்டையே காட்டிக்கொடுக்கும் அளவிற்கு பணத்திற்கு அடிமை.
வயதானோர் கள்ளச்சாராயம் பிரியாணி நல்லது எது கெட்டது எது என்று சீர்தூக்கி பார்க்காமல் தாம் என்ன நினைக்கிறோமோ அது தான் சரி என்று ஆணித்தரமாக நம்பும் எண்ணத்திற்கு அடிமை.
சிறுமியர்- மொபைல் மேக்கப்புக்கு அடிமை.
டீன் ஏஜர்ஸ்- மொபைல் மேகப் காதலுக்கு அடிமைகள்.
இளைஞிகள் - மொபைல் மேக்கப் இலவசம் ரீல்ஸுக்கு அடிமைகள்.
வயதானோர்-இலவசம் டீவி சீரியல் பணம் இவைகளுக்கு அடிமை..... இதில் ஒரு வர்கத்தினருக்காவது அரசியல் என்றால் என்ன, நம்மை யார் ஆளவேண்டும், இலவசங்கள் ஏன், இருக்கும் பகுத்தறிவை வைத்து சீர்தூக்கி கெட்ட சமுதாயத்தை திருத்துவது எப்படி என்று என்றைக்காவது யோசித்தது உண்டா ???

Reply Rate this

கர்ம வீரர் காமராஜர் ஐயாவை பற்றி பேசாத ஏளனப்பேச்சா, செய்யாத துரோகமா இந்த தமிழ்நாடு மக்கள் செய்தது.....தம்மை ஆளப்போகிறவன் நேர்மையாக, மெத்த படித்தவனாக, கறைபடியாத கைகளுக்கு சொந்தகாரனாக, பொதுவாழ்வில் தூய்மையானவனாக எதையும் எதிர் கொள்ளவும் தைரியமானவனாக இருக்கும் திரு.அண்ணாமலையை ஏசி பரிகாசம் செய்வது தமிழ்நாட்டு மக்களுக்கு அதிலும் மதவாத கட்சிகள் திமுக, காங்கிரஸ், விசிக, இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளை சேர்ந்தவர்களை பார்க்கும் போது அதிர்ச்சியோ வியப்போ ஏற்படவில்லை.....நல்லவேளை நான் இந்த மக்களோடு வாழவில்லை.... கடவுளுக்கு நன்றி.....!!!

Reply Rate this
மார் 24, 2026 12:47 pm

பாஜக தனித்து போட்டியிட்டால் 36-42 தொகுதிகளில் வெற்றி கிடைக்கும்

Reply Rate this
இப்படி தான் 1983ம் வருடம் பாராளுமன்றத்தில் பாஜகவை பார்த்து ஏளனமாக பேசியவர்கள் இன்று பாரளுமன்றம் வெளியே படிக்கட்டுகளில் உட்கார்ந்து கொண்டு வயிறு எரிந்து கண்ணீர் வடிக்கிறார்கள்.....கர்மா வலியது நன்பர்களே....!!!
மார் 24, 2026 03:38 pm
Rate this
மார் 24, 2026 12:20 pm

புள்ளார் சுழி போட்டு பார்த்தும் அழைத்து பார்த்தும் ஓரு கட்சியும் வராத நிலையில் பங்கீடு என்பது கட்சி தலைவர்கள் தங்கள் தலைமையை நிலை நிறுத்திக் கொள்ள அமைக்கப்பட்ட பங்கீடாகவே அண்ணாமலை சார் பார்க்கிறார் என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

Reply Rate this
மார் 24, 2026 12:12 pm

வியூகங்கள் பொய்க்கும் மலை உயர்ந்து நிற்பார்

Reply Rate this
மார் 24, 2026 07:02 am

அடியாத்தீ.... எங்கூரு பக்கம் சொல்வாய்ங்க... ..

Reply Rate this
மார் 24, 2026 07:01 am

விரைவில் தி மு கா வில் இணைவார்

Reply Rate this
மார் 24, 2026 06:33 am

அண்ணாமலை அவர் வேலையை செய்கிறார்.

Reply Rate this
மார் 24, 2026 06:07 am

தி.மு.க அனுதாபி (மறைமுகமாக)

Reply Rate this