தமிழகத்தில் பா.ஜ.,வை நுழைய விட மாட்டோம்
அ.தி.மு.க., உள்ளிட்ட நான்கு கட்சிகளை அடிமைகளாக்கி தமிழகத்திற்குள் நுழைய பா.ஜ., முயற்சிக்கிறது. ஆனால், அது நடக்காது. தமிழகத்தில் டில்லி அரசியல் எடுபடாது. அதனால் தான் முதல்வர் ஸ்டாலின் இந்த தேர்தல் டில்லிக்கும், தமிழகத்துக்குமான என போட்டி என முழக்கமிடுகிறார்.
கட்சி தலைமையகம் ராயப்பேட்டையில் இருப்பதை மறந்துவிட்டு, அடிக்கடி டில்லி செல்கிறார் அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி. முன்பெல்லாம் முகத்தை மூடியபடி சென்றவர், இப்போது முகத்தை மூடாமலேயே டில்லி செல்கிறார்.
ஒரிஜினலை போன்ற பொருட்களை 'அசெம்பிள்' செய்து போலி நிறுவனங்களை சேர்ந்தோர் ஏமாற்று வேலை செய்வர். அதேபோலவே, அ.தி.மு.க., உள்ளிட்ட கட்சிகளை 'மேட் இன் டில்லி' என்ற பெயரில், பா.ஜ., 'அசெம்பிள்' செய்திருக்கிறது. தேர்தல் முடிந்ததும் அ.தி.மு.க.,வின் பியூஸை பா.ஜ., பிடுங்கி விடும். பீஹாரின் நிதிஷ் குமாரின் நிலைதான் பழனிசாமிக்கும் ஏற்படும்.
- உதயநிதி, துணை முதல்வர், தி.மு.க.,
Advertisement

வாசகர்கள் கருத்துகள்