உதயநிதியை முதல்வராக மக்கள் ஏற்க மாட்டார்கள்
தமிழக சட்டசபை தேர்தல், தமிழர்களின் பெருமையை காப்பதற்கானது; தமிழ் கலாசாரத்தை பாதுகாப்பதற்கானது; ஸ்டாலினின் ஊழல் நடைமுறைகளில் இருந்து மக்களை காப்பதற்கானது. தமிழக மக்கள், உதயநிதியை ஒருபோதும் முதல்வராக ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
'டாஸ்மாக்' ஊழல் வாயிலாக அரசு கருவூலத்தில் இருந்து, முதல்வர் ஸ்டாலின் குடும்பத்துக்கு 50,000 கோடி ரூபாய் சென்றுள்ளது. அரசின் பல்வேறு ஒப்பந்தங்களில் ஊழல் மலிந்து கிடக்கிறது.
தமிழகத்தில் தே.ஜ., கூட்டணி தலைமையில் ஆட்சி அமையும். எங்கள் கூட்டணியில் அறைக்குள் கலந்து ஆலோசிக்கப்பட்டு, அனைத்து முடிவுகளும் சுமுகமாக எடுக்கப்படுகின்றன.
- பீயூஷ் கோயல், மத்திய அமைச்சர், பா.ஜ.,
Advertisement
ஊழல் செய்த திமுக அமைச்சர்கள் மீது மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுத்து கிழித்திருக்கிறது. எல்லா அமைச்சர்களும் மகிழ்ச்சியாக உள்ளார்கள். கேவலம்
முதலில் உதய நிதியை எம்.எல்.ஏ, யாகவே அந்த தொகுதி மக்கள் ஏற்க மாட்டார்கள் தேர்தலில் நின்று ஜெயித்து வரட்டும் பிறகு பார்த்துக்கொள்ளலாம்
முதலில் தூக்கத்திலிருந்து உங்கள் கட்சியினரை எழுப்பி விடுங்கள். எவ்வளவு பிரச்சினை உள்ளது. போராட வேண்டாமா. திமுக விடம் கற்றுக்கொள்ளுங்கள். ஒன்றுமே இல்லாததை ஊதி பெரிதாக்குவார்கள். ஆனால் உங்களுக்கு அல்வா மாதிரி கிடைத்தாலும் ஒன்றுமே செய்ய மாட்டீர்கள். இப்படியே போனால் எப்படி வெல்ல முடியும்.

ஏதோ மக்கள் விரும்பித்தான் ஒவ்வொருவரும் முதலமைச்சர் ஆகிறார்கள் என நினைக்கின்றார் முப்பது அல்லது முப்பத்தைந்து விழுக்காடு வாக்குகள் வாங்கி தான் தலைமை இடம் வருகிறார்கள் .அறுபத்தைந்து விழுக்காடு மக்கள் அவர்களை விரும்ப வில்லை .இது தான் ஜனநாயகம்