அ.தி.மு.க., பொதுச்செயலராக பழனிசாமி இருக்க மாட்டார்: ஸ்டாலின்
மதுரை: “தேர்தலுக்கு பின் பழனிசாமி மாற்றப்படுவார். அ.தி.மு.க.,வின் பொதுச்செயலராக நியமிக்க வேறொருவரை பா.ஜ., தேர்ந்தெடுத்து வைத்துள்ளது,” என, மதுரை திருமங்கலத்தில் நடந்த, பன்னீர்செல்வம் உள்ளிட்டவர்கள் தி.மு.க.,வில் இணையும் விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தி.மு.க.,வில் இணையும் விழா, மதுரை அருகே திருமங்கலம் ராயபாளையத்தில் நேற்று நடந்தது.
இணைப்பு விழாவில் கலந்து கொண்டு முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:
எம்.ஜி.ஆர்., உருவாக்கிய அ.தி.மு.க., யாருக்கோ அடிமை சேவகம் செய்யப் போனதால், உரிமைக்குரல் எழுப்பி தாய் கழகத்திற்கு திரும்பி, தடம் மாறாமல் திராவிட பாதையில் பயணத்தை துவங்கியுள்ளீர்கள்.
எப்போதும் சிரித்த முகமாக இருப்பார். பன்னீர்செல்வத்தின் சிரிப்பே ஒருமுறை பிரச்னையானது. என்னை பார்த்து சிரித்ததால் இரு நாட்டுக்கிடையே போர் வந்தது போல் பிரச்னை ஆக்கிவிட்டனர். இருந்தும், அதே சிரித்த முகத்துடன் இருக்கிறார்.
ஜெயலலிதா, தான் அமர்ந்த முதல்வர் இருக்கையில் இவரை இருமுறை அமரவைத்தார். தன்னிடம் ஒப்படைத்த அரசாட்சியை எவ்வித துரோகமும் இன்றி திருப்பி ஒப்படைத்த நேர்மைக்கு சொந்தக்காரர். விசுவாசத்திற்கு ஒரு பன்னீர்செல்வம் என்றால், துரோகத்திற்கு அடையாளம் பழனிசாமி.
தன்னை காப்பாற்றிக் கொள்ள எம்.ஜி.ஆர்., உருவாக்கிய, ஜெயலலிதா வழிநடத்திய அ.தி.மு.க.,வை பா.ஜ.,விடம் அடமானம் வைத்திருக்கிறார். யாருக்கும் நன்மை செய்யாத பா.ஜ.,வா அ.தி.மு.க.,விற்கு நன்மை செய்யப் போகிறது. அதன் ரத்தத்தை தான் உறிஞ்சி எடுக்கும். பீஹாரில் நிதிஷ் குமாருக்கு ஏற்பட்ட நிலைதான், பழனிசாமிக்கும் வரப்போகிறது.
எனக்கு கிடைத்த தகவல்படி, அ.தி.மு.க.,வில் பழனிசாமிக்கு பதில் வேறு ஒருவரை, பொதுச்செயலராக பா.ஜ., ஏற்கனவே தேர்ந்தெடுத்து வைத்துள்ளது. பழனிசாமியை இந்த தேர்தல் வரை தான் பா.ஜ., வைத்திருக்கும். பின், அவரையே துாக்கிவிடுவர்.
ஒருவேளை, கூட்டணி வைக்க அவர் மறுத்திருந்தால் இப்போதே அவரை மாற்றி இருப்பர். அந்தளவுக்கு பா.ஜ.,வின் கன்ட்ரோலுக்கு அ.தி.மு.க., சென்றுவிட்டது. அ.தி.மு.க., தொண்டர்களின் ஓட்டுகளை வாங்கி, தன்னை வளர்த்துக்கொள்ள பா.ஜ., போட்ட திட்டத்திற்கு பழனிசாமி துணை போயிருக்கிறார்.
அவர்களது கூட்டணி சார்பில் நடக்கும் தேர்தல் கூட்டங்களில், என்.டி.ஏ., கூட்டணி என்று தான் கூறுகின்றனர். பிரதமரே, அப்படித்தான் சொல்கிறார்.
தி.மு.க., வெற்றி பெறும் என பா.ஜ.,வே நினைக்கிறது. அதனால் தான் 'பிரசார பீரங்கியான' கவர்னர் ரவியை மாற்றியுள்ளனர். ஸ்டாலினுக்கு மறுபடியும் பதவி பிரமாணம் செய்து வைக்க வேண்டுமே என்ற விரக்தியில் அவர் கிளம்பிவிட்டார். தேர்தல் முடியும் வரை கவர்னரை மாற்ற வேண்டாம் என பலமுறை கோரிக்கை வைத்தேன். இதில் கூட கோரிக்கையை நிறைவேற்றி தர மாட்டீர்களா?
இவ்வாறு அவர் பேசினார்.
Advertisement
ஐபிஏசி ஒரு தனியார் நிறுவனம். நிலக்கரி ஊழலில் தொடர்புடைய பணப் பரிவர்த்தனைகள் அவர்களை நோக்கியே செல்கின்றன. அப்படியிருக்க, அந்த நிறுவனத்தில் சோதனை நடத்தப்படுவதைப் பற்றி இந்த திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் முதல்வருமான மம்தா பானர்ஜி ஏன் கவலைப்படுகிறார்?
ஏன்... அதிமுக பொது செயலாளராக இவர் பதவி ஏற்கப் போகிறாரா.... அடுத்த கட்சியை பற்றி உங்களுக்கு என்ன கவலை.... இது எப்படி இருக்கு என்றால் ஆடு நனைகிறதே என்று ஓநாய் அழுதது போல் உள்ளது.
மைனாரிட்டி அரசாக கருணாநிதி திமுக இருந்தும், ஆட்சி தொடர ஆதரவு தந்து காத்த காங்கிரஸுக்கு அமைச்சர் பதவி தராமல் ஏமாற்றிய சுயநல திமுகவிற்கு,
3 முறை பாஜகவை விட குறைவான MLA கள் இருந்தும், விரும்பும் வரை முதல்வராக நிதிஷ் குமாரை இருக்க வைத்த பாஜகவின் கூட்டணி தர்மம் பற்றி பேச துப்பில்லை.
அ.தி.மு.க தலைமை மாறுகிறதோ இல்லையோ? உன் தலைமையிலான தி.மு.க என்ற கட்சியே அ.தி.மு.க வாக மாறி நீண்ட நாட்கள் ஆகிறது. உம்மையும் உம் பிள்ளையையும் தவிர அங்கு கோலோச்சுபவர்கள் எல்லாமே அ.தி.மு.கவினர் தான். பத்தாததற்கு தியாகி பன்னீரும் அவரது மகனும் வேறு. காலம், காலமாய் கட்சிக்கு மாடாய் உழைத்த உண்மைத் தி.மு.கவினர் மனம் வெதும்பி, நொந்து போய் உள்ளனர். வரும் தேர்தல் தோல்விக்குப் பின் அவர்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து உன் தலைமையை மாற்றுவார்கள். அல்லது திறமைசாலிகளான அ.தி.மு.கவில் இருந்து வந்த அமைச்சர்கள் ஒன்று சேர்ந்து உன் தலைமையை மாற்றுவார்கள். மொத்தத்தில் தேர்தலுக்குப் பின் திருவாளர். ஸ்டாலின் தி.மு.க தலைவராக தொடரப் போவதில்லை.
செங்கோல் ஆட்சி கொடுத்திருந்த மன்னர்களை எதிர்த்து கேவலமாக பேசிய எம் பி வெங்கடேசன் என்ற மானஸ்தன் எங்கே இருக்கிறார்?
அ.தி.மு.க தலைமை மாறப் போவதாக இருந்தால் ஏன் பவ்ய பன்னீர் அங்கிருந்து ஓடி வந்து உன் காலை கட்டிப் பிடிக்கப் போகிறார்?
தமிழ் செங்கோலை உண்மையான பக்தி புரிதலுடன் நாடாளுமன்றத்தில் நடுநாயகமாக பிரதமர் மோடி நிறுவியபோது புலம்பிய ஸ்டாலின் கும்பல் இப்போது அட்டை செங்கோலை மேடைக்கு மேடை தூக்கிக்கொண்டு பாசாங்கு செய்கிறார்கள்.

அறிவுகெட்ட ஆலய செங்கல் ஒன்று ஒன்றாக உருவப்படும் நாள் வெகு தூரத்தில் இல்லை...