Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ்

Advertisement


 'பெட்டியை வாங்கிக்கொண்டு தி.மு.க., அணியில் சேருவதா?': நயினார் நாகேந்திரன்

 'பெட்டியை வாங்கிக்கொண்டு தி.மு.க., அணியில் சேருவதா?': நயினார் நாகேந்திரன்

திருச்சி: ''பணப்பெட்டியை வாங்கிக் கொண்டு தான், தி.மு.க., கூட்டணியில் சேருகின்றனர்,'' என தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார்.

திருச்சியில், வரும் மார்ச் 11ல் நடக்கும் தேசிய ஜனநாயக கூட்டணி பிரசார கூட்டத்தில், பிரதமர் மோடி பங்கேற்கிறார்.

கூட்டம் நடத்துவதற்காக மாத்துார், பஞ்சப்பூர், பொன்மலை ஜி கார்னர் ஆகிய மூன்று இடங்களை, நயினார் நாகேந்திரன் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் நேற்று பார்வையிட்டனர்.

முன்னதாக, திருச்சி ரயில் நிலையத்தில் நயினார் நாகேந்திரன் அளித்த பேட்டி:

தமிழகத்தில், மாணவர்களிடம் கஞ்சா புழக்கம், போலீஸ் விசாரணையில் மரணங்கள், கொலைகள், ரவுடியிசம் என சட்டம் - ஒழுங்கு கடுமையாக சீர்குலைந்துள்ளது.

தி.மு.க., கூட்டணி மீது மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். எனவே, எங்கள் தே.ஜ., கூட்டணி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறும்

கடந்த 2021 தேர்தலை போலவே, இந்த தேர்தலிலும் தி.மு.க.,வினர் பொய் வாக்குறுதிகளை கொடுத்து வருகின்றனர்.

தற்போது இருக்கும் தே.ஜ., கூட்டணி, கடந்த 2021 தேர்தலிலும் இப்படியே இருந்திருந்தால், 110 தொகுதிகளில் வெற்றி பெற்றிருப்போம்.

பணப்பெட்டியை வாங்கிக்கொண்டு தான் தி.மு.க., கூட்டணியில் பலரும் சேர்ந்து வருகின்றனர்.

முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் மீது நாங்கள் மதிப்பு வைத்துஉள்ளோம். எந்த பக்கம் இருந்தால் அவருக்கு நல்லது என்பதை, அவர் தான் முடிவு செய்ய வேண்டும்.

தமிழகத்துக்கு, அனைத்து நிதிகளையும் மத்திய அரசு முறையாக வழங்குகிறது. ஆனால், நிதியை பெற்றுக்கொண்டு, மத்திய அரசு தரவில்லை என தி.மு.க., அரசு பொய் சொல்கிறது.

ஆதிதிராவிடர் நலத்துறைக்கு மத்திய அரசு கொடுக்கும் நிதியை தமிழக அரசு வேறு துறைக்கு பயன்படுத்துகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

பிப் 22, 2026 08:40 pm

2024 பாராளுமன்ற தேர்தலில் உமது ஹோட்டலில் 4 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. அது என்ன உழைத்து சம்பாரித்த பணமா? இல்லை பொட்டியா?
விளக்கமா சொல்லு பார்க்கலாம். கிழக்கே உதிக்கும் சூரியன் மேற்கே அல்லது தெற்கே உதயமாகலாம்.... ஆனால் உங்க கூட்டணி ஜெயிக்காது........

Reply Rate this
பிப் 22, 2026 04:29 pm

நீயே பரம்பரை சாராய வியாபாரி உனக்கு முன்னாள் ஒருத்தன் இருந்தான் அவன் யோக்கியன் மாதிரி பேசிட்டு கடைசியில்
30000 கோடி சொத்துக்கள் சேர்த்து விட்டான் என்று அவனை தூக்கி விட்டார்கள்

Reply Rate this
பிப் 22, 2026 04:25 pm

பிஜேபி வந்தால் பஸ்ஸ்டாண்டு ரயில்வே ஸ்டேஷன் அரசு அலுவலகங்கள் எல்லாமே இந்தி மயமாகும் இந்திக்காரன்
இங்கே சர்வ சாதாரணமாக திருடுவான் அரசு வேலைகளில் இருப்பான்.. தமிழ் நாடு பழைய வரலாறு கள் அழிக்கப்படும்

Reply Rate this
பிப் 22, 2026 03:46 pm

விட்டா திருமங்கலம் ஃபார்முலா ஆரம்பிச்சிவிட்டதே பிஜேபி தான் என்று சொல்லுவார்கள்

Reply Rate this
பிப் 22, 2026 03:03 pm

டி டி வி தினகரனுக்கு பெட்டி கொடுத்தீர்களே . விஷமும் தூக்கு கயிறும் கொடுத்தீர்களா

Reply Rate this
பிப் 22, 2026 01:18 pm

Ban All Parties Getting/Giving Money Bags SHAME ON Democracy

Reply Rate this
பிப் 22, 2026 12:51 pm

சரி 2024 இல் அந்த 4 கோடி பண பெட்டி யார் அந்த சார் கொடுத்த பெட்டி

Reply Rate this
பிப் 22, 2026 11:48 am

பிரேமலதாக்கு பெட்டியும் வேணும் ராஜ்யசபா பதவியும் வேணும். உங்க கூட்டணியில் MP சீட் நஹி னு சொல்லிட்டாங்க. அதனால் அங்க தாவிட்டாங்க. பழம் நவுவி பாலில் விழுந்ததா அல்லது விட்டில் பூச்சி விளக்கில் விழுந்ததா என்பது இனிமேல் தான் தெரியும்.

Reply Rate this
பிப் 22, 2026 10:30 am

பிரேமலதாவை குடும்ப பாசமும் பெட்டியும் படுத்தும் பாடு ...

Reply Rate this
கட்சிகளின் எம்எல்ஏ வுக்கு பொட்டி கொடுத்து வாங்குவது பாஜக பழக்கம் என்று ஊடகங்களின் செய்திகள் அடிப்படையில் பொதுவானவர்கள் கூறுகின்றனர்.
பிப் 22, 2026 12:20 pm
Rate this
இருநூறு கொடுத்தால் போதும் என்று எல்லோரும். சொல்கிறார்கள்
பிப் 22, 2026 01:15 pm
Rate this
உனக்கு வேற வேலையே இல்லையா?
பிப் 22, 2026 01:18 pm
Rate this
பிப் 22, 2026 09:38 am

மகாராஷ்டிராவில் சிவசேனாவை பாஜக பெட்டி குடுத்து தானே வாங்கியது என்பது ஊரறிந்த உண்மை ...

Reply Rate this