கல்லாப்பெட்டி கூட்டணி; திமுகவை விளாசினார் விஜய்
நமது நிருபர்
''கொள்ளையடித்த பணத்தை கொடுத்து கூட்டணிக்கு கட்சிகளை பிடிக்கின்றனர். அது, கல்லாப்பெட்டி கூட்டணி,'' என்று வேலுாரில் நடந்த பொதுக்கூட்டத்தில், திமுகவை, தவெக தலைவர் விஜய் கடுமையாக விமர்சனம் செய்தார்.
வேலூரில் தவெக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தில் விஜய் பேசியதாவது:
மக்களை நேசிக்கும் நல்ல தலைமை இல்லாத காரணத்தினால், இத்தனை வருடமாய் ஸ்டாலின் சார் கொடுத்த பொய்யான வாக்குறுதிகள் எல்லாவற்றையும் நம்பி ஏமாந்த மக்களுக்கு சரியான நேரத்தில் வந்தது தவெக.
ஒவ்வொரு வீட்டிலும் நாம் உயிராக இருக்கிறோம். உங்களை எல்லோரையும் நேரில் சந்திக்க எனக்கு ஆசை. எதிர்க்கட்சியாக இருந்து கேள்வி கேட்டு கொண்டு இருக்கும் நமக்கு எதிராக என்ன சூழ்ச்சி நடக்கிறது என்பது உங்கள் எல்லோருக்கும் நன்றாக தெரியும்.
வாக்குறுதி
உங்கள் எல்லோருக்கும் நான் வாக்குறுதி கொடுக்கிறேன். நம்ம ஆட்சி அமைந்ததும், ஒவ்வொரு கிராமத்துக்கும் நேரடியாக வந்து என்னுடைய சொந்தங்களாகிய உங்களை சந்திக்கிறேன். கொஞ்ச நாட்களுக்கு முன், ஸ்டாலின் சார் ஒரு உருட்டு ஒன்று உருட்டினார். வரும் சட்டசபை தேர்தலை, தமிழகத்திற்கும், டில்லிக்கு இடையேயான தேர்தல் என்று சொல்கிறார்கள்.
இது தமிழகத்துக்கும்- தேஜ கூட்டணிக்கும் இடையேயான தேர்தல் என்று சொல்கிறார்கள். என்ன சார் டில்லியில் போய் நிற்க போகிறீர்களா? இது பார்லிமென்ட் தேர்தலா? பிரதமர் பதவிக்கு போட்டி போடுகிறீர்களா?
இது ஏன் தமிழகத்திற்கும், தேஜ கூட்டணிக்கும் இடையேயான தேர்தல் என்று சொல்கிறீர்கள், எனக்கு ஏதும் புரியவில்லை. எந்த தேர்தலை எப்படி டீல் செய்ய வேண்டும் என்று தமிழக மக்களுக்கு தெளிவாக தெரியும். நம்ம தமிழக மக்களை மாதிரி நீங்கள் பார்க்கவே முடியாது.
தேர்தல் எதற்கு?
தமிழக மக்கள் சூப்பர் மக்கள் சார். இந்த போருக்கு போகும் போது தான் படையுடன் போவார்கள் என்று கேள்வி பட்டு இருக்கிறேன். ஆனால் நீங்கள் பால் டப்பாவை உருட்டி கொண்டு இருக்கிறீர்கள் சார். உண்மைக்கும் இந்த தேர்தல் எதற்காக நடக்கிறது என்று சொல்கிறேன். தமிழக மக்களுக்கும் ஊழலுக்கும் இடையே நடக்குற போர்; தமிழக மக்களுக்கும் லஞ்சத்திற்கு இடையே நடக்குற போர்.
தவெக vs திமுக
தமிழக மக்களுக்கும், நிர்வாகத்தை சரியாக செய்யாத திமுக அரசுக்கும் இடையே நடக்குற போர்; தமிழக மக்களுக்கும் உங்க ஆட்சிக்கும் இடையே நடக்கும் போர்; தமிழக மக்களுக்கும் ஸ்டாலின் சார்க்கும் இடையே நடக்குற போர்; இன்னும் சுருக்கமாக செல்லனும்னா விஜய்க்கும் ஸ்டாலின் சாருக்கும் இடையே நடக்குற போர்.
தமிழகம் தான் இந்த விஜய். இந்த விஜய் தான் தமிழகம். தூய சக்தி தவெகவுக்கும், தீய சக்தி திமுகவுக்கு இடையே தான் போர்.
உல்டா மாடல்
இன்னொரு காமெடி, அவருடைய ஆட்சியில் தான் தமிழகம் சூப்பர் ஸ்டார் மாநிலமாக இருக்கிறதாம். சரி தமிழகம் சூப்பர் ஸ்டார் மாநிலம் தான். அது காமராஜர், அண்ணாதுரை அவர்கள் டைமில். எம்ஜிஆர் ஆட்சியில் இருந்த போது.
இன்றைக்கு ஒன்றுக்கும் உதவாத உல்டா மாடல் ஆட்சியில், தமிழகம் சூப்பர் ஸ்டார் மாநிலம் கிடையாது. சூப்பர் standup காமெடிகாரர் ஆட்சி நடத்தும் மாநிலமாக மாறிவிட்டது. மக்களே உங்களுக்காக தான், வரும் தடைகள், சூழ்ச்சிகளையும் தாண்டி இந்த 2026ம் தேர்தலில் தவெக தில்லாக நிற்கும்.
இதுவரைக்கும் நடந்த தேர்தல், வேறு இப்பொழுது நடக்க போகும் தேர்தல் வேறு. ஒவ்வொரு 5 வருடத்திற்கும் ஒரு முறை நடக்கும் தேர்தலாக நினைத்து விடாதீர்கள். 50 வருடத்திற்கு ஒருமுறை நடக்க போகும் தேர்தல் இது. அதிசய தேர்தல் இது.
ஊழல், லஞ்சம்
ஒரு தேர்தலில், அவர்கள் அவர்களுடைய எதிரிகளை தான் எதிர்ப்பார்கள். இதுதான் யதார்த்தம். இந்த தேர்தலில் தான் ஒட்டுமொத்தமாக சேர்ந்து இந்த விஜயை எதிர்க்கிறார்கள். ஏன் என்றால் இந்த விஜய் ஊழலை எதிர்க்கிறான், லஞ்சத்தை எதிர்க்கிறான். மக்களுடோடு மக்களாக நிற்கிறான். மக்கள் அவனோடு நிற்கிறார்கள், அந்த காண்டு.
நீங்கள் எப்படி வேண்டுமென்றாலும் எதிர்த்துக்கோங்க, போட்டி இரண்டே பேருக்கு இடையே தான். ஒன்று தவெக, இன்னொன்று திமுக. நமக்கு எதிராக அவதூறு பரப்புகிறார்கள். அவர்களுக்கு தெரியாது. என் மீது அவதூறு பரப்பினால், அது மக்கள் மேல் அவதூறு பரப்புகிற மாதிரி.
எனக்கு எதிராக செய்யும் செயல் மக்களுக்கு எதிராக செய்யும் செயல் என்று அவர்களுக்கு தெரியவில்லை. இந்த விஜயை மக்களிடம் இருந்து பிரிக்கவே முடியாது.
சொத்து மதிப்பு எவ்வளவு?
அரசியலுக்கு வந்த பிறகு உங்களிடம் இருக்கும் சொத்து விபரத்தை வெளியிட முடியுமா? அந்த உண்மையாக உழைத்து வந்த காசா? ஆட்சி அதிகாரத்திற்கு வந்த பிறகு ஆட்டைய போட்ட காசா? இது எல்லாம் ஓபனாக சொல்ல முடியுமா? வரும் தேர்தல் தான் திமுகவை சுவிட்ச் ஆப் செய்யும் ரிமோட். கரூர் சம்பவத்தில் முதல்வர் என் மீது பழியை போட்டது ஏன்?
கல்லாப்பெட்டி கூட்டணி
அறிவாலயம் பக்கத்தில் யார் நடந்து போனாலும், நிழலுக்கு ஒதுங்கினாலும் ஸ்டாலின் கூட்டணியில் சேர்த்துக்கொள்கிறார். கொள்ளையடித்து வைத்திருக்கிற பணத்தில் ஒரு பங்கு கொடுத்து கூட்டணியில் சேர்க்கின்றனர். அதற்கு கல்லாப்பெட்டி கூட்டணி என்று பெயர் வைத்திருக்கிறேன்.
அப்படி கஷ்டப்பட்டு கூட்டணி சேர்த்திருக்கிறார். அரதப்பழைய அந்த கூட்டணி கணக்கு மூலமாகவோ, கொள்ளையடித்த பணத்தில் எங்கள் மக்களை ஏமாற்றியோ ஜெயிக்க முடியாது. இது வித்தியாசமான விசில் புரட்சி தேர்தல். இவ்வாறு விஜய் பேசினார்.
விஜய் வாக்குறுதிகள்!
* சட்டம் ஒழுங்கு நீண்ட காலமாகக் காணாமல் போயுள்ளது. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு வலுவான பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யும் மாநிலமாக எங்கள் அரசு உயர்த்தும்.
* போட்டித் தேர்வுகளுக்கு ஏற்ப பள்ளி பாடத்திட்டம் மேம்படுத்தப்படும். அனைத்து அரசுப் பள்ளிகளிலும் பெண் மாணவர்களுக்கு தரமான கழிப்பறைகள் அமைக்கப்படுவது உறுதி செய்யபபடும்.
* போதைப்பொருட்கள் இல்லாத தமிழகம் உருவாக்கப்படும். மாவட்ட கலெக்டர்கள், எஸ்.பி.,க்களில் சரி பாதி பேர் பெண்கள் நியமிக்கப்படுவர்.
* மலை கிராமங்களில் மகப்பேறு வசதிகளுடன் கூடிய மருத்துவமனைகள் அமைக்கப்படும். -
* ஆட்டோ, டாக்ஸி மற்றும் லாரி ஓட்டுநர்களுக்கு நல வாரியம் அமைக்கப்படும்.
* மீனவர்கள் மற்றும் நெசவாளர்களின் தேவைக்கேற்ப நல நடவடிக்கைகள் உருவாக்கப்படும்.
தினமலர் நேரலை; வீடியோ பாருங்கள்!
வேலூரில் நடந்த தவெக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தில் விஜய் பேசியது தினமலர் யுடியூப் உள்ளிட்ட இணைய தளத்தில் நேரலை ஒளிபரப்பு செய்யப்பட்டது.
வீடியோ பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.
Advertisement
இவரை போன்ற ஏமாற்றுப்பேர்வழி , கோமாளி நடிகன் நம்பி மக்கள் வசுக்களிக்க மாட்டார்கள். ஊழல் நடிகன் . நீ நல்லவன் என்றால் காப்பி அடிக்கசமல் இரு
ஒருவேளை நடிகர் என்பதற்காக விஜய் பேச்சில் மதிமயங்கி ஒட்டுமொத்த மக்களும் விஜய்க்காக ஓட்டுபோட்டுடறாங்கன்னு வச்சுக்குவோம். திமுக போன்று இவரும் கொள்கை எதிரி, பாசிசம், பாயசம், டபுள் எஞ்சின் , டப்பா எஞ்சின் டாப் எஞ்சின் அப்படின்னு வசனம் பேசி பாஜகவை மட்டம் தட்டி திட்டினாரே , இவருக்கு நாம் ஏன் செய்யணும் என்று காரணம்காட்டி மத்திய அரசு தமிழகத்துக்கு நிதி தரலேன்னா அப்போ என்ன சொல்லுவார். ? மத்திய அரசு வஞ்சிக்கிறது , ஓரவஞ்சனை , இப்படி பீலா விடுவாரா ? நீங்கள் எப்படி காரியம் சாதிப்பீர்கள் ? மத்திய அரசின் காலில் விழுவீரா ? அல்லது எதிர்த்து சண்டை போடுவீரா ? இல்லை தெருவில் மக்களை கூட்டிக்கொண்டு தர்ணா பண்ணுவீரா ? இல்லை உதயநிதி சொன்னாரே அந்த ரகசியம் எங்களுக்கு தெரியும்னுட்டு அதேமாதிரி ரகசியம் வச்சுருக்கிறீரா ? தமிழக மக்கள் கேட்கிறார்களே ? என்ன பதில் திரு ஜோசப் விஜய் அவர்களே ? பத்து லட்சம் கோடி கடனில் தமிழகம் தத்தளிக்கிறது , என்ன செய்யப்போகிறீர்கள் , வரி போடுவீர்களா ? புது திட்டங்களுக்கு என்ன செய்வீங்க, யாரிடம் கையேந்தபோறீங்க ? பொருளாதார ரீதியாக அதை விளக்கிச்சொல்லுங்கள் திரு ஜோசப் விஜய் அவர்களே ?
ஜன நாயகன் யாரோ நிறுத்தி வைத்து இம்சை பண்ணுவது பற்றி வீரர் விச வாயே திறக்காது.
..கொள்க எதிரி மேலே அவ்வளவு பயம் … :
யாருப்பா ஸ்கிரிப்ட் எழுதினது. சினிமாவில மாதிரி சோகம், வீரம், காமெடி, சென்டிமென்ட் இப்படி எல்லாம் கலந்து கொடுதிருக்கார். ஒரு தமிழ் படம் பார்த்த ஃபீலிங், அங்க போனவுங்களுக்கு வந்திருக்கும்.
இப்ப வேணும்னா நீங்க புல்லுக் கட்டு கொடுத்து காளைய அடக்கி இருக்கலாம்? எங்க அண்ணன் ராமராஜன் பேச்சி, பேச்சி நீ பெருமையுள்ள பேச்சின்னு பாட்டுப் பாடியே என்னக்கோ சீறி வந்த காளைய அடக்கீட்டாரு!
யாரு உரையை எழுதி கொடுத்தார்களோ , எதாவது லாஜிக் இருக்கா, 41 பேர் இறந்தவன் ஊருக்கு போகல. ஜெயிச்சா ஒவொரு கிராமத்துக்கும் வருவாராம். இளைஞர் கூட்டம் இவர் சினிமா கவர்ச்சி பார்த்து ஒட்டு போடலாம் ஆனா ஜெயிக்க வாய்ப்பில்லை. ஆக்கப்பூர்வமாக செயல் பட்டால் மட்டுமே ஜெயிக்க முடியும்
ஆமா... விஜய்... நீ வேலூர் கூட்டத்தில் பேசிய “வரலாற்று சிறப்புமிக்க உரை”யில்... “பச்சுக்கு... பச்சுக்கு..ன்னு” அப்படீன்னு பேசியிருக்கிற... அப்படீன்னு என்ன அர்த்தம்... என் காதில் வேற மாதிரி கேக்குதே...? இந்த “பச்சுக்கு... பச்சுக்கு..ன்ற” ஒலி... எந்த இடத்தில் வரும்னு தெரியுமா...? ஐயாயிரம் பேர் திரண்ட ஒரு பொதுக்கூட்டத்தில்... ஒரு அரசியல் கட்சித் தலைவர், இப்படியா பேசுவாங்க... “சொல்புத்திதான் இல்ல... சுயபுத்திகூடவா இல்ல”.... இந்த வார்த்தைகளுக்கு அர்த்தம் என்ன தெரியுமா....? தமிழ்நாட்டு மக்களின் தலையெழுத்து... உன்னைப் போன்ற தரம் தாழ்ந்தவர்களின் பேச்சை கேட்க வேணும்னு... நான் அறிந்த வரையில், தமிழ்நாட்டில் எந்த ஒரு அரசியல் கட்சித் தலைவரும் அரசியல் கட்சியின் பேச்சாளர்கள் பேசியிருக்கலாம் இப்படி அநாகரீகமாக பொதுவெளியில்... பொதுமேடையில் பேசியதே இல்லை...? இதை கைதட்ட ஒரு கூட்டம்.. அந்த கூட்டத்துக்கு ஒரு எழவும் தெரியாது, புரியாது...?
தற்குறி என்று சொல்லல் தவறு.. தமிழ்நாட்டு மக்களுக்கே இது போன்ற கூட்டம் நல்லதல்ல… இப்ப தான் ₹கோடி அபராதம் கட்டி விட்டு நமக்கு வந்து ஊழல் பற்றி பாடம் எடுப்பது. கொடும

ஏம்பா நீயும் கடைய்ய திறந்து ஐந்து அகில இந்திய கட்சி ஒன்னு வரும் னு பீலா உட்டயெ என்னாச்சு? கதை கந்தலா?