Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ்

Advertisement


 ராமதாஸ் பெயரில் புதுக்கட்சி உதயம்

 ராமதாஸ் பெயரில் புதுக்கட்சி உதயம்

சென்னை: பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் ஆதரவாளர், 'அய்யா பாட்டாளி மக்கள் கட்சி' என்ற பெயரில், புதுக்கட்சி துவக்கி இருப்பதாக, தகவல் வெளியாகி உள்ளது.
ராமதாஸ் - அன்புமணி இடையே ஏற்பட்ட மோதலில், பா.ம.க., உடைந்தது. ஆனால், கட்சியும், மாம்பழ சின்னமும் அன்புமணிக்கு தான் சொந்தம் என, தேர்தல் கமிஷன், நீதிமன்றம் அறிவித்துள்ளன. இதனால் கோபமடைந்த ராமதாஸ், வரும் தேர்தலில், அன்புமணிக்கு எதிராக தன் ஆதரவாளர்களை களமிறக்க ஆலோசித்து வருகிறார்.
இந்நிலையில், அவரது அணியின் தலைமை நிலையச் செயலர் அன்பழகனின் மகன் முகிலன், தன் தலைமையில், 'அய்யா பாட்டாளி மக்கள் கட்சி' என்ற பெயரில், புதிய கட்சியை உருவாக்கி உள்ளார்.
பா.ம.க., கொடியில் ராமதாஸ் படத்தை வைத்து, கொடி தயார் செய்யப்பட்டுள்ளது. இந்த கட்சியை பதிவு செய்ய, தேர்தல் கமிஷனிடம் கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு ராமதாஸ் ஆதரவு உள்ளதா என்பது தெரியவில்லை.

Advertisement

பிப் 12, 2026 09:37 pm

ராமதாசின் முன் வினை பயன்.

Reply Rate this
பிப் 11, 2026 10:10 pm

இது ன்ன தலைவலி ?அய்யா கட்சி, மகன் கட்சி?
இந்த வயசில் அய்யாவிற்கு தேவையா"

Reply Rate this
பிப் 11, 2026 12:50 pm

பெட்டி வாங்கும் காலம். பல புது கட்சிகள் உண்டானால் தானே அரசியலில் சம்பாதித்தவன் பணம் பரவலாகும். இன்னும் சில பேரும் பிழைக்கலாம். சோசலிசம் கொள்கை இது.

Reply Rate this
பிப் 11, 2026 10:30 am

இரண்டு கட்சிகளுமே சாதீய கட்சிகள் தானே? குடும்பத்தில் யாராவது ஒருவர் பதவியில் இருக்க வேண்டுமென்று போடும் நாடகம். ஆனால் மக்கள் இருவரையுமே புறம் தள்ள போகிறார்கள். இன்னும் ஜாமீனிலும் விசாரனை வளையத்திற்குள்ளும் தானே மகன் இருக்கிறார்.

Reply Rate this
பிப் 11, 2026 10:14 am

புரட்சி, எழுச்சி, மறுமலர்ச்சி, புதிய, திராவிடம், தமிழக, இப்படி ஏதாச்சும் ஒண்ணை கண்டிப்பா உங்க கட்சிபேருல சேத்துக்கோங்க.

Reply Rate this
பிப் 11, 2026 10:09 am

முச்சந்தியில் நிறுத்தி சாட்டையடி அடியுங்கள் என்று சொன்னவர் தனி கட்சி ஆரம்பிக்கும் நிலைக்கு வந்து விட்டார். ஓய்வு எடுப்பது நல்லது

Reply Rate this
பிப் 11, 2026 08:26 am

அ ப ம க. அப்பா ம க

Reply Rate this

இந்த கட்சிக்கு மாங்காய் சின்னம் ஒதுக்கப்படுகிறது. இந்த கட்சி அன்புமணி கட்சியுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்திக்கும்.

Reply Rate this
பிப் 11, 2026 05:43 am

சற்று பின்னோக்கி பார்த்தால் எங்கேயோ இருந்த ராமதாஸ் வன்னிய மக்களை பகடை காயாக்கி இன்று கோடானு கோடி சொத்துக்களை அடைந்தது எப்படி? ரெண்டு திருட்டு த்ரவிஷ கட்சிகளுடன் பேரம் பேசி பேசி நிலபுலன்கள் சொத்துக்களை வாங்கி குவித்துவிட்டார். கொள்கை சித்தாந்தம் எதுவுமில்லை.

Reply Rate this
பிப் 11, 2026 03:04 am

இப்போது நேரமில்லை அடுத்த தேர்தலில் பார்ப்போம் இதுதான் தேர்தல் ஆணையத்தின் விடை. பேரன் பேத்திகளுடன் வீட்டிலேயே விளையாடிக்கொண்டிருக்கும் நேரம் இது வீணாக்காதீர்கள் சட்டுபுட்டுன்ணு விலையாட்டை ஆரம்பியுங்கள்

Reply Rate this