ரிஷிவந்தியத்தில் பிரேமலதா? தி.மு.க., நிர்வாகிகள் கலக்கம்
தே.மு.தி.க., பொதுச்செயலர் பிரேமலதா, 'வரும் சட்டசபைத் தேர்தலில் போட்டியிடுவேன்' என அறிவித்துள்ளார். ஏற்கனவே, கணவர் விஜயகாந்த் போட்டியிட்டு வெற்றி பெற்ற ரிஷிவந்தியம் தொகுதியில் பிரேமலதா போட்டியிடக்கூடும் என தகவல் பரவி இருக்கிறது.
கடந்த சட்டசபைத் தேர்தலில், அத்தொகுதியில் தி.மு.க., போட்டியிட்டு வெற்றி பெற்றவர் வசந்தம் கார்த்திகேயன். கள்ளக்குறிச்சி மாவட்ட தி.மு.க., செயலராகவும் இருக்கிறார் வசந்தம் கார்த்திகேயன்.
பிரேமலதா போட்டியிட விரும்பினால், ரிஷிவந்தியத்தில் தன்னால் மீண்டும் போட்டியிட முடியாது என்பதால், தி.மு.க., கூட்டணியில் தே.மு.தி.க., இணைந்ததை விரும்பாததோடு, கடும் வருத்தத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. அவருடைய ஆதரவாளர்களும், கட்சியின் நிர்வாகிகளும் கடும் அதிர்ச்சியில் உள்ளனர்.
ஏற்கனவே தொகுதிக்கென பல்வேறு திட்டங்களை தீட்டி, அதை செயல்படுத்துவிம்விதமாக நிறைய பணத்தை செலவு செய்திருப்பதால், இதை எப்படி சமாளிப்பது என, கட்சியினருடன் ஆலோசனையில் இறங்கி உள்ளார்.
இது குறித்து, கள்ளக்குறிச்சி மாவட்ட தி.மு.க., நிர்வாகிகள் கூறியதாவது: கடந்த இரு தேர்தல்களாக, ரிஷிவந்தியத்தில் தி.மு.க., வெற்றி பெற்றிருக்கிறது. தற்போதும், தொகுதி தி.மு.க.,வுக்கு சாதகமாக உள்ளது இந்நிலையில், தே.மு.தி.க., பொதுச்செயலர் பிரேமலதா போட்டியிடக்கூடும் என்பதால், தி.மு.க.,வினர் கலக்கம் அடைந்துள்ளனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.
-நமது நிருபர்-
Advertisement
தொகுதியையும் ஒதுக்கி, உள்ளடி வேலையும் செய்து கட்சியை பார்த்துக் கொள்வோம். விருதுநகரில் பெற்ற தோல்வி உள்ளடி வேலையை DMDK மறக்க முடியாது .
தேமுதிக என்ற கட்சியே இனி தமிழகத்திற்கு தேவை இல்லை. விஜயகாந்த் என்ற நல்ல மனிதரின் எண்ணங்களுக்கு எதிராக செயல்படும் இந்த கட்சி இந்த தேர்தலோடு அது ஒழித்துக்கட்டப்பட வேண்டும். தமிழக இன்னும் முட்டாளாக நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள். இனி எந்தவித கொள்கையும் இல்லாமல் மாறி மாறி கூட்டணியை மாற்றிக்கொண்டு இருக்கும் பேர கட்சிகள் தமிழகத்தில் இருந்து அகற்றப்படும்.
அது என்ன ஏற்கனவே நிறைய பணம் செலவளித்துள்ளதால் அதை சமாளிப்பது எப்படி என்று போட்டுள்ளீர்கள்? அந்த பணத்தை எப்படி எடுப்பது சம்பாரிப்பது என்று தெரியாமல் முழிக்கிறார் என்று போடுங்கள்.
இப்போது தெரிகிறதா? தே.மு.தி.க கூட்டணியால் கலங்கப் போவது தி.மு.க தான்! தே.மு.தி.க வால் வி.சி.க, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளும் கலங்க வாய்ப்புகள் உண்டு!
ரிஷி வெந்தயம் தொகுதியில் பேர லதா நின்றால் திமுகவின் உடன்பிறப்பான உள்குத்து நடத்தி கடுகு தாளித்து விடுவார்கள். ஏற்கனவே மொடக்குறிச்சியார் இதில் அனுபவசாலி
தோற்பதற்க்கு எங்க நின்றால் என்ன? திமுக சொல்லும் 200 தொகுதி வெற்றியில்… இப்போதே… தேமுதிகவுக்கு ஒதுக்கும் தொகுதி எண்ணிக்கையை கழித்து விடலாம். மற்ற கழிப்புகள் மய்யம், கம்யுனிஸ்ட், மதிமுக… மற்றவை… மற்றவை… போக அதிகபட்டம் 40-50 மிஞ்சினால் அதிகம்…
கூட்டணிக்கு எல்லாத்தொகுதிகளையும் கொடுத்து விட்டு தீம்க்காவுக்கு முதல்வர், துணை முதல்வர் பதவி போதுமானது. அதை வைத்துதான் கூட்டாட்சி என்று மத்திய அரசுக்கு காட்ட முடியும்.

திமுக கிட்டே வாங்கிய 300 சிரில் ஒரு ஐம்பது ரிஷிவந்தியம் வாக்காளர் உனக்கு அன்பளிப்பாக தரலாம் ஆனா இந்த அம்மா கஞ்சம் காசு செலவழிக்காம ஜெயிக்கலாம்னு நினைப்பாங்க இவங்களை உள்ளடி வேலை செய்து தோற்கடித்தார் பின்னாட்களில் வரப்போகும் பிரச்சனைகளை முடிவுக்கு கொண்டுவரலாம் திமுக தொண்டர்கள் கண்டிப்பாக செய்ய வேண்டும்