அ.தி.மு.க.,வை விஜய் குறைத்து மதிப்பிடுகிறார்
தி.மு.க.,விற்கும், த.வெ.க.,விற்கும் இடையே தான் போட்டி என்று விஜய் கூறுவது சரியல்ல. அவர், அ.தி.மு.க.,வை விஜய் குறைத்து மதிப்பிடுகிறார்; அவமதிக்கிறார்; அக்கட்சியை சீண்டுகிறார்.
அ.தி.மு.க., ஒரு பொருட்டே அல்ல என்று விமர்சிக்கிறார் என்றால், அ.தி.மு.க., - பா.ஜ., அணியை ஒரு பொருட்டாக கருதவில்லை என்றுதான் பொருள். விஜய் எந்த எதிர்பார்ப்பில் இந்த கருத்தை கூறுகிறார் என்று தெரியவில்லை. இந்த தேர்தலில், தி.மு.க., - அ.தி.மு.க., இடையே மட்டுமே போட்டி.
ஜெயலலிதா வெளிப்படையாகவே மோடி எதிர்ப்பை வலியுறுத்தி பேசியவர். ஆனால், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா பற்றி பேசினால், அரசியல் ஆதாயம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில், பா.ஜ.,வினரும் அவர்களின் புகழ்பாடுகின்றனர்.
அ.தி.மு.க., - பா.ஜ., இடையே முரண்பாடுகள் இருக்கின்றன. அதனால், அது பொருந்தா கூட்டணியாக உள்ளது. இதை மறைக்க, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவை துணைக்கு அழைக்கின்றனர்.
-- திருமாவளவன், தலைவர், விடுதலை சிறுத்தைகள்
Advertisement

அப்போ நீ போய் முட்டு கொடு.