ரூ.1.50 கோடி அபராதம் விதிக்கப்பட்டவர் விஜய்
எங்களை எதிர்க்கும் சுண்டெலி கட்சிக்கு எல்லாம் பயப்பட மாட்டோம். தம் இருக்கிற வரை தான் விசில் அடிக்க முடியும். விஜய் கொள்ளையடித்த பணத்தை, வெளியே எடுத்து வரச் சொல்லுங்கள். சென்னை உயர் நீதிமன்றத்தால், விஜய்க்கு 1.50 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. எங்கள் தகுதிக்கு, அவருக்கு நாங்கள் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை. இவ்வளவு பேசுபவர், மோடி பற்றி ஏன் பேசவில்லை?
தந்தைக்கு சோறு போடாமல் கழுத்தை நெரிப்பவன்; தாயை பாட்டிலால் அடிப்பவன் எல்லாம் எங்களை எதிர்க்கின்றனர். ஹிந்தி எதிர்ப்பால்தான், தமிழகத்தில் தமிழ் படம் ஓடுகிறது. தமிழகத்தில், ஹிந்தி படம் ஓடாததற்கு காரணம், தி.மு.க., நடத்திய ஹிந்தி எதிர்ப்பு போராட்டம்தான். தி.மு.க., மீண்டும் ஆட்சிக்கு வருவதை யாராலும் தடுக்க முடியாது. அரைக்க அரைக்க சந்தனம் மணக்கும். அதுபோல், தி.மு.க.,வை திட்ட திட்ட வெற்றி குவியும்.
- ஆர்.எஸ்.பாரதி, அமைப்பு செயலர், தி.மு.க.,
Advertisement

வாசகர்கள் கருத்துகள்