விருத்தாசலமா; விருகம்பாக்கமா? குழப்பத்தில் தே.மு.தி.க., பிரேமலதா
- நமது நிருபர் -
தே.மு.தி.க., பொதுச்செயலர் பிரேமலதா, விருகம்பாக்கம், விருத்தாசலம் ஆகிய இரண்டில் எந்த தொகுதியில் நிற்பது என்ற குழப்பத்தில் இருக்கிறார்.
தி.மு.க., கூட்டணியில் சென்னையில் உள்ள, விருகம்பாக்கம் தொகுதி கேட்கப்பட்டுள்ளது. அ.தி.மு.க., கூட்டணியில் இருந்தபோது, இந்த தொகுதியில், தே.மு.தி.க., சார்பில் பார்த்தசாரதி வெற்றி பெற்றுள்ளார்.
பார்த்தசாரதி மீண்டும் போட்டியிட்டால், அ.தி.மு.க., வேட்பாளராக களமிறங்கும் வி.என்.ரவியை எதிர்த்து தே.மு.தி.க., வெற்றி பெறுவது சிரமம் என தி.மு.க., கருதுகிறது. அதனால், பிரேமலதா அல்லது அவரது மகன் விஜய பிரபாகரன் இருவரில் ஒருவர், அத்தொகுதியில் போட்டியிட வேண்டும் என தி.மு.க., தலைமை விரும்புகிறது.
ஆனால், விருத்தாசலம் தொகுதியில் போட்டியிடவே பிரேமலதா விரும்புகிறார். கட்சி துவக்கிய முதல் தேர்தலில், விஜயகாந்த் வெற்றி பெற்ற தொகுதி, தனக்கும் வெற்றியை தரும் என பிரேமலதா நம்புகிறார்.
இதற்கிடையில், அ.தி.மு.க., கூட்டணியில் மயிலம் தொகுதி பா.ம.க., - எம்.எல்.ஏ., சிவகுமார், விருத்தாசலத்தில் போட்டியிட விரும்புகிறார் என்றும், அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் சண்முகம், மயிலம் தொகுதியில் களமிறங்குவார் என்றும் கூறப்படுகிறது.
விருத்தாசலம் தொகுதியில் பா.ம.க., போட்டியிட்டால், சுலபமாக வெற்றி பெறலாம் என பிரேமலதா கருதுவதால், அத்தொகுதியை பிடிவாதமாக கேட்கிறார். ஆனால், விருகம்பாக்கத்தில் நிற்க, தி.மு.க., தரப்பில் வலியுறுத்துவதால், குழப்பத்தில் இருக்கிறார் பிரேமலதா, என்கின்றனர் அவரது கட்சியினர்.
Advertisement
வெற்றியை தோல்வியோ விஜயகாந்த் எதை பின்பற்றினாரோ அதே பின்பற்ற வேண்டும் அதிமுக
தே .மு. தி .க விற்கு வாழ்வா சாவா என்று இந்த தேர்தல் முடிவுக்கட்டும். இந்த கூட்டணியின் தேர்தல் முடிவு வருமுன் உங்களது ஆண்டாள் கல்லூரி விற்றகாசை வாங்கிவிடுங்கள். அதன் பின்னர் என்ன வேண்டுமாலும் நடக்கும் .
எங்கே நின்றாலும் தோற்பது உறுதி. திமுகவுடன் கூட்டணி வைத்தவுடன் தேமுதிக மீது பரவலான அதிருப்தி தோன்றியிருப்பது தெரிகிறது
ஒரு பெரிய தொகையை தேத்தியாச்சு. பாக்கம இருந்த என்ன? பாலமா இருந்த என்ன? பச்சை நோட்டு இருக்கிறவரைக்கும், தொகுதி போன என்ன இல்லே டெபாசிட் போனதான் என்ன ?
ஏங்க, வியட்நாம், வெனின்சுலாவியா வேண்டாங்க இந்தியாவிலுள்ள வாரணாசி இங்கெல்லாம் நிக்கமாடீங்களா? சென்னையில்தான் நிற்கவேண்டுமானால் வானகரத்தில் நில்லுங்கள்.
இதுக்கும் கொளத்தூரை கேட்டுப் பாருங்கள். ஸ்டாலின் அங்கு நிற்க போவதில்லை என்ன கேள்விப்பட்டேன்.

தோக்கப் போறீங்க. எங்க தோத்தா என்ன? குழப்பமே வேண்டாம். குலுக்கி போட்டு ஒரு சீட்டை எடுத்து அங்க நில்லுங்க.