Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் கருத்துக் கணிப்பு முடிவுகள்

Advertisement


தே.மு.தி.க.,வுக்கு எத்தனை தொகுதி என்பதை முதலில் சொல்லுங்கள்: தி.மு.க.,வுக்கு வி.சி., - கம்யூ., நெருக்கடி

தே.மு.தி.க.,வுக்கு எத்தனை தொகுதி என்பதை முதலில் சொல்லுங்கள்: தி.மு.க.,வுக்கு வி.சி., - கம்யூ., நெருக்கடி

சென்னை: 'தே.மு.தி.க., தொகுதி பங்கீட்டை முதலில் இறுதி செய்துவிட்டு, பின்னர் எங்களை அழையுங்கள்' என, தி.மு.க., தலைமையிடம் வி.சி., மற்றும் கம்யூ., கட்சிகள் கூறியுள்ளன.
கடந்த 2021 சட்டசபை தேர்தலில், தி.மு.க., கூட்டணியில் இ.கம்யூ., - மா.கம்யூ., - வி.சி., கட்சிகளுக்கு தலா ஆறு இடங்கள் ஒதுக்கப்பட்டன. இவற்றில், வி.சி., நான்கு தொகுதிகளில் வென்றது. கம்யூ., கட்சிகள் தலா இரண்டு தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றன.
தற்போது இந்த தேர்தலில், மூன்று கட்சிகளும் இரட்டை இலக்கத்தில் தொகுதிகளை எதிர்பார்க்கின்றன. ஆனால், கடந்த முறை தோல்வி அடைந்ததால், எண்ணிக்கையை குறைக்க தி.மு.க., தலைமை முடிவு செய்துள்ளது. இதற்கிடையே, தி.மு.க., கூட்டணியில் புதிதாக இணைந்த தே.மு.தி.க.,வுக்கு அதிக முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது.

கடந்த 2011 தேர்தலுக்கு பின், பெரும் பின்னடைவை சந்தித்து வரும் அக்கட்சிக்கு, ராஜ்யசபா எம்.பி., பதவியை தி.மு.க., தந்துள்ளது. தே.மு.தி.க.,வுக்கு எட்டு தொகுதிகள் வரை பேசி முடிக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், கூட்டணியில் பிரச்னை எழாமல் இருக்க, அதை இன்னும் தி.மு.க., தலைமை வெளிப்படையாக அறிவிக்கவில்லை.
எனவே, தே.மு.தி.க., தொகுதி பங்கீட்டை முடித்துவிட்டு, தங்களிடம் பேச்சை தொடரும்படி, இம்மூன்று கட்சிகள் தரப்பில் தி.மு.க.,விடம் கூறப்பட்டுள்ளது.

இது குறித்து வி.சி., நிர்வாகிகள் கூறுகையில், ''தி.மு.க., கூட்டணியில் தே.மு.தி.க.,வுக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது. ''எங்களுக்கு பானை சின்னம் இருக்கும் நிலையில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட அழுத்தம் தருவதை தன்மான பிரச்னையாக பார்க்கிறோம். ''எனவே, தே.மு.தி.க., தொகுதி பங்கீட்டை முடித்து விட்டு, எங்களை அழையுங்கள் என தி.மு.க., தொகுதி பங்கீட்டு குழுவிடம் கூறப்பட்டு விட்டது,'' என்றனர்.
இதை வெளிப்படையாக சொல்லாமல், நிர்வாக குழு கூட்டம் என்ற பெயரில் கம்யூனிஸ்ட் கட்சிகள் காலம் தாழ்த்தி வருகின்றன.

இதற்கிடையே, திருவாரூரில் நேற்று பேட்டியளித்த மா.கம்யூ., மாநில செயலர் சண்முகம், ''தி.மு.க., கூட்டணியில் காங்கிரசுக்கு கூடுதல் தொகுதி தருவதை நாங்கள் கேள்வி கேட்கவில்லை. காங்கிரஸ் கட்சி, 28 தொகுதிகள் அல்ல; 60 தொகுதிகளை கூட கேட்டு வாங்கிக் கொள்ளட்டும்.

''ஆனால், காங்.,கிற்கு கூடுதல் தொகுதி கொடுக்க வாய்ப்பு இருக்கும்போது, இடதுசாரிகளுக்கு எதற்காக சீட்டை குறைக்க வேண்டும் என்பது தான் எங்கள் கேள்வி,'' என ஆவேசமாக தெரிவித்து உள்ளார்.

Advertisement

தேமுதிகவிற்கு 7 தொகுதிகள் கொடுக்கப்பட்டுள்ளது.. உங்களுக்கு அதில் என்ன பிரச்சனை.. உங்களுக்கு எவ்வளவு வேண்டும் என்பதை விடியலிடம் கேளுங்கள்.. இல்லை என்றால் சின்ன விடியலிடம் கேளுங்கள்..

Reply Rate this
மார் 17, 2026 10:28 am

பார்ரா தீடீர் ரோசத்தை? சோறா? சொரணையா? இல்ல, இல்ல எங்களுக்கு சோறுதான் முக்கியம்!

Reply Rate this
மார் 17, 2026 08:49 am

உண்மையிலேயே இவங்களுக்கெல்லாம் ஓட்டு விழுகுதா?

Reply Rate this