இந்தியாவுக்கு மற்றொரு நாட்டின் ஒப்புதல் ஏன் தேவை: முதல்வர் ஸ்டாலின் கேள்வி
சென்னை: 'தன் சொந்த எரிசக்தி தேவைகளை பூர்த்தி செய்ய, இந்தியாவுக்கு ஏன் மற்றொரு நாட்டின் ஒப்புதல்' என, முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
முதல்வர் ஸ்டாலின் அறிக்கை:
ரஷ்யாவில் இருந்து, 30 நாட்களுக்கு மட்டுமே இந்தியா எண்ணெய் வாங்க, அமெரிக்கா முடிவு செய்யும்போது, அது ஒரு அடிப்படை கேள்வியை எழுப்புகிறது. தன் சொந்த எரிசக்தி தேவைகளை பூர்த்தி செய்ய, இந்தியாவுக்கு ஏன் மற்றொரு நாட்டின் ஒப்புதல்?
விசாகப்பட்டினத்தில் இந்தியா நடத்திய சர்வதேச கடற்படை மதிப்பாய்வு பயிற்சியில் பங்கேற்ற உடனேயே, ஆயுதம் ஏந்தாத ஈரானிய போர்க் கப்பலை, அமெரிக்கா மூழ்கடித்ததும் கவலை அளிக்கிறது.
பன்னாட்டு பயிற்சியின் ஒரு பகுதியாக, இந்தியாவிற்கு வந்த ஒரு கப்பல், அத்தகைய விதியை சந்திக்கும்போது, இந்தியா அமைதியாகவோ அல்லது செயலற்றதாகவோ தோன்ற முடியாது.
இந்தியாவின் நீண்ட கால மூலோபாய சுயாட்சி மற்றும் சுதந்திரமான வெளியுறவு கொள்கையின் பாரம்பரியத்தில், மத்திய பா.ஜ., அரசு முற்றிலும் சமரசம் செய்ததாக தெரிகிறது.
சர்வதேச அரங்கில் இந்தியாவின் கண்ணியம் பாதுகாக்கப்பட வேண்டும். நாட்டின் இறையாண்மை மற்றும் நலன்கள் பாதுகாக்கப்பட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Advertisement
dear CM that is international business. kindly focus on tamilnadu we have Powerful EAM who knows what is international alliance.
நமக்கு 5துண்டு சீட்டு உயரம்தான்னு தெரிஞ்சப்பறோம் இந்த பேச்செல்லாம் தேவையா தலைவர் ?
மொதல்ல தமிழ் நாட்டின் பிரச்சினைகளை சரிசெய்யப்பாருங்கள் முதல்வரே. உலக பிரச்சினைகள் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்? சும்மா உடான்ஸ் விடுவது எல்லாம் தெரிந்தமாதிரி.
நமக்கு தான் இங்கேயே ஒரு வாப்பாடும் தெரியாது, எதற்கு தேவையில்லாமல் சர்வதேச விவகாரம் பேசுகிறேன் என பில்டப் கொடுத்து வாங்கிக்கட்டிக் கொள்ள வேண்டும்?
கொஞ்சம் காத்து இருங்க இன்னும் மூணு மாசம் தான் அப்பறோம் பாருங்க தமிழ்நாட்டு மேல எவ்ளோ பாசம் என்று எதிர் கட்சியான பின்னே எவ்ளோ போராட்டம் செய்றாங்க
கர்நாடக மேகதாது கட்ட போறாங்களாம்.
உங்க கூட்டணி தான். முதல்ல அத பத்தி பொய் பேசுங்க
சும்மா தெரியாத விஷயத்துல கருத்து சொல்லி

உலக அரசியல் திலகம் சொல்லுது