Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு

Advertisement


 குழு அமைக்காத தி.மு.க.,வால் மனம் வலிக்கிறது: காங்கிரஸ்

 குழு அமைக்காத தி.மு.க.,வால் மனம் வலிக்கிறது: காங்கிரஸ்

“கூட்டணியில் தொகுதி பங்கீட்டுக்கு பேச்சு நடத்த காங்., தரப்பில் குழு அமைத்து, 70 நாட்கள் ஆகிவிட்டன. தி.மு.க.,விலிருந்து அழைத்து பேசுவர் என காத்துக் கொண்டிருக்கிறோம். பேச்சு நடத்த குழு அமைக்காததால், காங்., தொண்டர்கள் மனம் வலிக்கிறது,” என, தமிழக காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் ஷோடங்கர் கூறினார்.
தமிழக காங்கிரசில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட தலைவர்களின் கலந்தாய்வுக் கூட்டமும், பயிற்சி முகாமும் டில்லியில் நேற்று நடந்தது.

அதிருப்தி இல்லை

காங்., தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மூத்த எம்.பி.,க்கள் ராகுல், கே.சி.வேணுகோபால் உள்ளிட்டோர் பங்கேற்ற இக்கூட்டம் குறித்து தமிழக காங்., தலைவர் செல்வப்பெருந்தகை அளித்த பேட்டி:
கூட்டத்தில், அனைத்து கிராமங்களிலும் காங்கிரஸ் கட்சி தேர்தல் பணியை முடுக்கிவிட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. கூட்டணி குறித்த குழப்பம் எதுவும் காங்கிரசில் இல்லை. கூட்டணி குறித்துப் பேச தி.மு.க., சார்பில் இன்னும் குழு அமைக்காதது குறித்து, கட்சித் தலைமையிடம் எல்லாரும் வருத்தமாக குறிப்பிட்டனர்.
கடைசி நேரத்தில் களத்துக்கு செல்வது சரியாக இருக்காது என்பதால், தி.மு.க., சார்பில் குழு அமைக்க வலியுறுத்துகிறோம். முதல்வரையும் சந்தித்து, தி.மு.க., சார்பில் கூட்டணி பேச்சு நடத்த உடனே குழு அமைக்க வலியுறுத்த உள்ளோம்.

அப்போது, டில்லியில் தலைவர்களோடு பேசியது குறித்து எடுத்துச் சொல்வோம். மற்றபடி, தி.மு.க., மீது காங்கிரசுக்கு அதிருப்தி எதுவும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.
தமிழக மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் ஷோடங்கர் கூறுகையில், “தமிழக காங்கிரஸ் சார்பில், தி.மு.க.,வுடன் பேச்சு நடத்த, கடந்த நவம்பரில் குழு அமைத்தோம். ''உடனே, பேச்சு நடத்த முதல்வர் ஸ்டாலினையும் சந்தித்தோம். இன்றோடு 70 நாட்கள் ஆகி விட்டன. எனவே, உடனடியாக எங்களை அழைத்து பேச வேண்டும்.

கோபம் இல்லை '' குழு அமைக்காமல் இருப்பது துரதிருஷ்டவசமானது. இதனால் எங்களுக்கு மனம் வலிக்கிறது. யார் மீதும் எங்களுக்கு கோபம் இல்லை,” என்றார்.

இதற்கிடையில், ராமேஸ்வரத்தில் தி.மு.க., துணைப் பொதுச்செயலர் கனிமொழி, நேற்று கூறுகையில், ' 'ஆட்சியில் பங்கு கேட்பதாக காங்கிரசில், சில தனி நபர்கள் கூறுகின்றனர். அதை பெரிதாக எடுத்துக் கொள்ளத் தேவையில்லை. கூட்டணி தொடர்பாக தி.மு.க., - காங்., பேசி வருகிறது,'' என கூறினார்.

- நமது டில்லி நிருபர் -

Advertisement

பிப் 11, 2026 07:12 pm

தமிழக காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை, ஒரு சவலைப் பிள்ளை. யாராவது வலுவான ஒரு பெரிய கட்சி உதவினால் மட்டுமே சில தொகுதிகளில் வெற்றி பெற முடியும். தற்போது உள்ள சூழ்நிலையில் திமுக வை பகைத்து கொள்ளவும் முடியாது. தவெக பின்னால் போகவும் மனமில்லை. தமிழகத்தில் ஒருவேளை திமுக, காங்கிரஸ் கூட்டணி ஏற்பட்டு, மீண்டும் ஆட்சி அதிகாரத்திற்கு வந்தால், லஞ்சமும், கஞ்சாவும் தமிழகத்தில் தலை விரித்து ஆடும் என்பதில் ஐயமில்லை.

Reply Rate this
பிப் 11, 2026 04:50 pm

நெஞ்சம் கனிந்தது, உறவு மலர்ந்தது. சீட் எண்ணிக்கை புளித்தது. அரசியல் அதிகாரம் வெறுத்தது.

Reply Rate this
பிப் 11, 2026 04:47 pm

பிட்சை எடுப்பதில் முதல் தகுதி பொறுமை .

Reply Rate this
பிப் 11, 2026 04:09 pm

காங்கிரஸ் கட்சியின் கூட்டணி ஆட்சி நிபந்தனையை ஸ்டாலின் நிராகரித்த பிறகு அமைச்சரவை பங்கு என்ற இரண்டாவது நிபந்தனையும் தானாகவே இல்லை என்பது உறுதி ஆகி விட்டது. இனி மீதமிருப்பது தொகுதி எண்ணிக்கை அதிலும் தங்களது காங்கிரஸ் மானத்தை இழக்க தான் போகிறது. எனவே அவர்களிடம் உள்ள ஒரே மாற்றுவழி த.வெ.க. வின் பக்கம் கூட போகாமல் தைரியத்தோடு தங்கள் தலைமையில் சில கட்சிகளை அழைத்து ஒரு கூட்டணியை அமைக்க முயற்சிப்பது தான். அப்போது தான் தமிழகத்தில் மற்ற கட்சிகளிடமும் மக்களிடமும் காங்கிரஸ் கட்சிக்கு என்ன மரியாதை இருக்கிறது என்பது தெளிவாகி விடும்.

Reply Rate this
பிப் 11, 2026 12:39 pm

APOARAM EDHUKKU MANAM VALIKKUDHU ENA DRAMA.KEVALAM.

Reply Rate this
பிப் 11, 2026 07:31 am

மனம் நொந்து போய் இருக்கிறோம்..... மனம் நொதால் .... !!!

Reply Rate this
பிப் 11, 2026 07:19 am

TVK தான் கூப்பிடுது, அங்கே போயி 70 சீட்லே நிக்க வேண்டியது தானே. ஏன் மதியாதார் வீட்டில் இருக்கீங்க. வெளியே போங்க.

Reply Rate this
பிப் 11, 2026 05:57 am

tvk மற்றும் பிஜேபி அமைச்சரவில் பங்கு என்று கூறும் பொழுது, தி மு காவும் அறிவிப்பது தவறு ஒன்றும் இல்லை தமிழகம் ஒன்றும் தி மு கா விற்கு சொந்தம் இல்லை ஸ்டாலின் கனிமொழி உதயநிதி - இவர்கள் தான் ஆள வேண்டுமா கனிமொழி - கருணாநிதி மகள் தவிர வேறு quality ஒன்றும் இல்லை - அதேபோல் உதயநிதிக்கு ஒன்றும் அனுபவம் இல்லை எல்லோரும் பங்கு போட்டு சாப்பிடுங்க

Reply Rate this