Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு

Advertisement


திமுக தான் காங்கிரசின் அடிமை: இபிஎஸ் பேட்டி

திமுக தான் காங்கிரசின் அடிமை: இபிஎஸ் பேட்டி

சென்னை: திமுக தான் காங்கிரசிடம் அடிமையாக இருக்கிறது, என அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் கூறியுள்ளார்.

தனியார் டிவிக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது: அதிமுகவிலும் திராவிட மாடல் இருக்கிறது. அதனால் தான் அதிமுக வலுவாக இருக்கிறது. அதிமுக மட்டும் இலவசம் தரவில்லை. நாடு முழுவதும் இலவசம் அறிமுகம் ஆகி உள்ளன. திமுக அளித்த வாக்குறுதிகளில் 4 ல் ஒரு பங்கை கூட நிறைவேற்றவில்லை. இதனால் தான் நிறைவேற்றப்பட்ட வாக்குறுதிகள் குறித்து வெள்ளை அறிக்கை கேட்கிறோம். இதுவரை தரப்படவில்லை. கடன் வாங்குவதில் இந்தியாவில் நம்பர் 1 மாநிலம் என்ற நிலையில் தமிழகம் இருக்கிறது.

உதயநிதியை துணை முதல்வர் என திமுகவினர் ஏற்கலாம். ஆனால் மக்கள் ஏற்கவில்லை. கருணாநிதி குடும்பத்தில் பிறந்ததால் தான் அவருக்கு துணை முதல்வர் பதவி கிடைத்தது.பொது விவாதம் நடத்த ஸ்டாலின் எங்கே அழைத்தாலும் நான் தயார். ஸ்டாலின் உடன் ஒரே மேடையில் பொது விவாதம் செய்ய நான் தயாராக இருக்கிறேன்.

ஊரின் பெயரை எனதுபெயருக்கு முன்னாள் போட்டுக் கொள்ளுங்கள் என முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கூறினார். அவர் கூறியதால் தான் எடப்பாடியை பெயருக்கு முன்னாள் சேர்த்துள்ளேன். தேஜ கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை. நாங்கள் தெளிவாக உள்ளோம். அதிமுக கூட்டணி வெற்றி பெற வேண்டும் என மக்கள் முடிவு செய்துவிட்டனர். திமுக ஆட்சியில் மக்கள் துன்பத்தை அனுபவிக்கின்றனர். அதனால் அதிமுகவிற்கு வெற்றிகிடைக்கும். முதல்வரின் கணக்கு எதுவாக இருந்தாலும், மக்களின் கணக்கு அதிமுக வெற்றி பெற வைப்பது தான். நானும் முதல்வரும் ஒரே நேரத்தில் தேர்வு செய்யப்பட்டோம். என் வழி வேறு. ஸ்டாலின் வழி வேறு. அவரது தந்தை முதல்வராக இருந்ததால் அவருக்கு விளம்பரம் கிடைக்கிறது. நான் தான் முதல்வர் வேட்பாளர் என்பதை தெளிவுபடுத்திவிட்டார்கள். அதிமுக தனிப்பெரும்பான்மை உடன் ஆட்சி அமைக்கும்.

திமுக தான் காங்கிரசின் அடிமையாக இருக்கிறது. அதிமுக எந்த விதத்தில் அடிமையாக உள்ளது. பாஜவிடம் அதிமுகவை அடகு வைக்கவில்லை. 2024 ல் அதிமுக தான் தனித்துப் போட்டியிட்டது. திமுக காங்கிரஸ் உடன் கூட்டணி அமைத்தது. சசிகலா, பன்னீர்செல்வம் பிரச்னை முடிந்த போன ஒன்று. அவர்கள் குறித்து எடுத்த முடிவில் எந்தமாற்றமும் இல்லை. அதிமுகவில் அவர்களுக்கு இடமில்லை. தினகரன் உடன் இருந்தது கருத்து வேறுபாடு தான். தற்போது அது சரியாகிவிட்டது. விஜய்க்கு ஆல் தி பெஸ்ட் என எப்படி சொல்லமுடியும். அவரை தேர்தல் களத்தில் சந்திப்போம். வலிமையான பாரதம் வளமான பாரதம் உருவாக இளைஞர்கள் துணை நிற்க வேண்டும்
சினிமாவில் தான் விஜய் சூப்பர் ஸ்டார். அரசியல் சூப்பர் ஸ்டார் அல்ல. எம்ஜிஆர் பெயரை சொன்னால் தான் கட்சி நடத்த முடியும். அதனால் தான் எம்ஜிஆர் பெயரை விஜய் பயன்படுத்துகிறார். தவெக ஒரு தேர்தலை கூட சந்திக்கவில்லை. சந்தித்தால் தான் எவ்வளவு ஓட்டு கிடைக்கும் என தெரியவரும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

பிப் 12, 2026 04:20 am

தீம்க்கா சிறப்பான பணச்சலவை இயந்திரம். காங்கிரஸ் பணம் உலர்த்தும் இயந்திரம். அப்படிப்பட்ட ஒரு கல்லில் செதுக்கிய உறவு..

Reply Rate this
பிப் 11, 2026 10:01 pm

அடிமைத்தனத்தை நாம பேசலாமா பழனி......

Reply Rate this
அவர் சொல்வது உன்னை போல திமுக அடிமைகளை..
பிப் 12, 2026 12:10 am
Rate this
பிப் 11, 2026 09:56 pm

ஜெயலலிதா பல முறை விடுப்பில் சென்ற போதும், பொறுப்பை ஒப்படைத்தது ஓ.பன்னீர்செல்வத்திடம் தானே தவிர, எடப்பாடி பழனிசாமியிடம் அல்ல.
எனவே, உண்மையான வாரிசு பன்னீர்செல்வம் தான்.
பாவம், அனைத்தையும் பறி கொடுத்து விட்டு, ஒரு மூலையில் நிற்கிறார்.


2017 முதல் 4 வருடங்கள் ஊழல் ஆட்சி புரிந்தவர் எடப்பாடி.
மீண்டும் எடப்பாடியை அரியணையில் ஏற்றக்கூடாது.

Reply Rate this
இப்போது என்ன ஊழலற்ற ஆட்சியா நடக்கிறது. நெஞ்சைத் தொட்டுச் சொல்லுங்கள். பிறகு ஏன் திமுகவை மீண்டும் அரியணையில் ஏற்ற துடிக்கிறீர்கள்
பிப் 11, 2026 10:50 pm
Rate this
பிப் 11, 2026 09:38 pm

அடிமைப்பெண் கேள்விப்பட்டிருக்கிறேன். அது MGR நடித்த திரைப்படம். இது என்ன அடிமைக்கட்சி?

Reply Rate this
பிப் 11, 2026 09:34 pm

இன்றைய அரசியலில் அடிமைகளுக்கும் ரௌடிகளுக்கும் பஞ்சமே இல்லை. செயலில் தான் காட்டுவார்கள். பேச்சில் மட்டும் புலியின் மீசை தான். பகுத்தறிவு பேசுகிறவர்கள் கால்களிலேயே மேடையிலே விழும் அளவுக்கு வளர்ந்து விட்டதே அரசியல்.

Reply Rate this
பிப் 11, 2026 09:34 pm

அதன் வலி தெரியும்

Reply Rate this
பிப் 11, 2026 09:32 pm

எல்லோருக்குமே தெரியும்!

Reply Rate this
பிப் 11, 2026 09:23 pm

அடிமைப்படுத்தி / மிரட்டி தான் கூட்டணிக்கு படிய வைச்சாங்கன்னு எல்லாருக்கும் தெரியும்!

Reply Rate this
பிப் 11, 2026 09:18 pm

சினிமாவில் சூப்பர் ஸ்டார் யார் என்றே இவருக்கு தெரியவில்லை ..... என்னத்த சொல்ல ?...சூப்பர் ஸ்டார் யார் என்று கேட்டால் சின்ன குழந்தைக்கு கூட தெரியும் ...பாவம் இவருக்கு தெரியவில்லை போல் தெரிகிறது.

Reply Rate this
பிப் 11, 2026 08:55 pm

ஸ்டாலின் க்கு தைரியம் இருக்கு நோ பவர் SHARING என்று சொல்ல ஆனால் மோடி டபுள் என்ஜின் சர்க்கார் என்று சொல்லுகிறார் அனால் எடப்பாடி க்கு இந்த தைரியம் இருக்கா சொல்லுங்க சொல்லுங்கள்

Reply Rate this
காங்கிரஸ் கட்சியின் மாணிக்கம் தாகூர் அவர்களுக்கு இருக்கும் துணிச்சல் ஏன் எல் முருகன் அண்ணாமலை தமிழிசை அவர்களுக்கு இல்லை என்று பொதுவான வர்கள் கேட்கிறார்கள்.
பிப் 11, 2026 09:41 pm
Rate this
முதல்வருக்கு என்ன பவர் இருந்து என்ன செய்ய. எவ்வளவோ சாதனைகள் செய்திருக்கிறேன் என்று சொல்கிறார்.முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தனியே நின்று ஜெயித்துக் காட்டியது மாதிரி ஜெயித்துக் காட்டலாமே. ஏன் இன்னும் காங்கிரசை பிடித்துக் கொண்டிருக்கிறார். கூட்டணி இல்லாவிட்டால் திமுகவின் வண்டவாளம் தெரிந்துவிடும். வேசம் கலைந்து விடும் .திமுகவுக்கு தனியே நிக்க தைரியம் இருக்கிறதா. பதில் சொல்லுங்கள் முட்டு.
பிப் 11, 2026 10:56 pm
Rate this
அவர்கள் கேட்க வேண்டிய அவசியம் இல்லை....கூட்டாக தேர்தலில் உழைக்கிறார்கள் .....வெற்றி பெற்றால் பதவியையும் பங்கீட்டு கொள்வார்கள் ....அதில் உங்களுக்கு என்ன கஷ்டம் வந்தது ?
பிப் 11, 2026 11:41 pm
Rate this