Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் சர்வே முடிவுகள்

Advertisement


 தபால் ஓட்டுக்களை முழுமையாக பெற தி.மு.க., தீவிர முயற்சி

 தபால் ஓட்டுக்களை முழுமையாக பெற தி.மு.க., தீவிர முயற்சி

திண்டுக்கல்: தமிழகம் முழுதும் உள்ள 234 தொகுதிகளிலும் வெற்றியை தீர்மானிக்கும் தபால் ஓட்டுக்களை முழுமையாக பெற தி.மு.க., தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

தமிழகத்தில் 2021ல் நடந்த சட்டசபை தேர்தலில் தி.மு.க., தலைமையிலான கூட்டணி 159 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது.

இதில் தி.மு.க., 133 தொகுதிகளில் வெற்றி பெற்ற நிலையில் காங்கிரஸ் 18, மற்ற கூட்டணி கட்சிகள் 8 தொகுதிகளில் வெற்றி பெற்றன. அத்தேர்தலில் தி.மு.க., மட்டுமே 37.7 சதவீதம் ஓட்டுக்களை பெற்றது. 66 தொகுதிகளை பெற்ற அ.தி.மு.க., எதிர்க்கட்சியானது. இதில் தி.மு.க., வெற்றி பெற்ற 53 தொகுதிகளில் ஓட்டு வித்தியாசம் சொற்ப அளவில் இருந்தன.

உதாரணத்திற்கு சென்னை தியாகராயநகரில் தி.மு.க., வேட்பாளர் 137, காட்பாடியில் கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் 746, நெய்வேலியில் தி.மு.க., சபா ராஜேந்திரன் 977 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர்.

இதுபோல் 53 தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு வித்தியாசம் ஓட்டுக்கள் குறைந்த அளவிலே இருந்தன. இந்த தொகுதிகளில் தபால் ஓட்டுக்களே கட்சிக்கு வெற்றியை தேடி தந்தன. இதை கண்டறிந்த தி.மு.க., தபால் ஓட்டுகளின் சொந்தக்காரர்களாக உள்ளவர்களுக்கு வலை விரிக்க துவங்கியுள்ளன.

தபால் ஓட்டுக்கள் செலுத்தும் மூத்த அரசு ஊழியர்கள், மூத்த முதுநிலை ஆசிரியர்கள், தொகுதியில் இருந்து பிற மாவட்டங்களில் பணிபுரியும் ஆசிரியர்கள், தொ.மு.ச.,வில் அங்கம் வகிக்கும் மின்வாரியம், போக்குவரத்துத்துறை ஊழியர்கள் பட்டியல் தயாரித்த, அவர்களை கவனிக்க கட்சி நிர்வாகிகள் சிலருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

தொ.மு.க., நிர்வாகி ஒருவர் கூறுகையில், ''இம்முறை சட்டம் ஒழுங்கு பிரச்னையை எதிர்கட்சிகள் பலமாக முன்னெடுத்துள்ளதால் வெற்றி வாய்ப்பு என்பதை உறுதி செய்யும் நோக்கி தபால் ஓட்டுக்களை அறுவடை செய்யும் பணிகளை தீவிரப்படுத்த தி.மு.க., மூத்த நிர்வாகிகள் உத்தரவிட்டுள்ளனர்,'' என்றார்.

Advertisement