கேட்காமலேயே கிடைத்த சீட்; ராமதாஸ் வேட்பாளர்கள் புலம்பல்
பா. ம.க., தலைவர் அன்புமணி, அ.தி.மு.க., கூட்டணியில் இணைந்துள்ளதால், தி.மு.க., - அ.தி.மு.க., போன்ற பிரதான கூட்டணியில் சேர முடியாத நிலை ராமதாசுக்கு ஏற்பட்டது. இதனால், சசிகலாவின், அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்ற கழகம் கட்சியுடன், ராமதாஸ் கூட்டணி வைத்துள்ளார்.
இருவரும் தொகுதிப் பங்கீட்டை அறிவிக்கவில்லை. ஆனால், வேட்பாளர்களை அறிவித்து வருகின்றனர். ஐந்து கட்டங்களாக இதுவரை, 35 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை, ராமதாஸ் அறிவித்துள்ளார்.
அன்புமணியின் மனைவி சவுமியா போட்டியிடும் தர்மபுரி உட்பட, பா.ம.க., போட்டியிடும் 10 தொகுதிகளுக்கு, ராமதாசும் தனியாக வேட்பாளர்களை அறிவித்துள்ளார்.
ராமதாஸ் அறிவித்துள்ள 35 வேட்பாளர்களில் பெரும்பாலோர், தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவிக்கவில்லை என்றும், அவர்களிடம் கேட்காமலேயே அறிவிக்கப்பட்டு விட்டதாகவும் புலம்பி வருகின்றனர்.
இது தொடர்பாக, ராமதாஸ் அறிவித்த வேட்பாளர் ஒருவரிடம் கேட்டபோது, 'வேட்பாளர் பட்டியல் வெளியான பிறகு தான், நான் வேட்பாளர் என்பதையே தெரிந்து கொண்டேன். போட்டியிட விருப்பம் இல்லை. ஆனாலும், ராமதாஸ் மனம் கஷ்டப்படும் என்பதால், அவரிடம் சொல்லவும் முடியவில்லை. ஆனால், சிலர் போட்டியிட விரும்பவில்லை என அவரிடம் சொல்லியதால், வேட்பாளர்களை மாற்றியுள்ளார்' என்றார்.
Advertisement
ஒரு கட்சி என்பது எந்த துண்டனை தேர்தலில் வேட்பாளராக நிறுத்தணும் என்பதை முடிவு செய்யும் ஆளுமையுடன் இருக்கவேண்டும். ஆனா என்னா நடக்குது? கட்சியில் இருக்குறவன் இல்லாதவன் பாகுபாடு இல்லாமல் நான் நிற்கிறேன் என்று கட்சி தலீவருக்கு கப்பம் கட்டி பணத்தின் அடிப்படையில் சீட் வாங்கி தேர்தல் வேட்பாளர் ஆகி விடுகிறார்.
இது அப்பட்டமான கள்ள வியாபாரம் ஆகிப்போச்சு. கட்சிதான் வேடபாளரை தேர்ந்தெடுக்கணும். ஆனா என்னா நடக்குது? தலை கீழான ஸிஸ்டமா இருக்கு. இதை எப்புடி ஜனநாயகம் ன்னு சொல்றாய்ங்க?

வயதான காலத்தில் இந்த ஆளுக்கு தேவை இல்லாத வேலை.