கிறிஸ்டோபர் திலக்கிற்கு எம்.பி., பதவி: காங்., கோஷ்டி தலைவர்கள் அதிருப்தி
- நமது நிருபர் -
அகில இந்திய காங்கிரஸ் செயலர் கிறிஸ்டோபர் திலக், ராஜ்யசபா எம்.பி., வேட்பாளராக அறிவிக்கப்பட்டது, தமிழக காங்கிரசில் அதிருப்தி அலையை ஏற்படுத்தியுள்ளது.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுலுக்கு மிகவும் நெருக்கமான கிறிஸ்டோபர் திலக், கட்சியின் எஸ்.சி., - எஸ்.டி., அணிகளின் தேசிய ஒருங்கிணைப்பாளராக இருக்கிறார். தமிழகத்தில் கட்சி வளர்ச்சிக்கு உழைத்தவர்களுக்கு முன்னுரிமை வழங்காமல், டில்லி மேலிட தொடர்பில் இருந்த கிறிஸ்டோபர் திலக்கிற்கு வாய்ப்பு வழங்கியதை, தமிழக காங்கிரஸ் கோஷ்டி தலைவர்கள் கடும் அதிருப்தியுடன் விமர்சிக்கின்றனர்.
தமிழக காங்கிரஸ் மூத்த நிர்வாகிகள் கூறியதாவது: முன்னாள் மாநில தலைவர்கள் அழகிரி, திருநாவுக்கரசர், தங்கபாலு உள்ளிட்டோர் இம்முறை ராஜ்யசபா 'சீட்' எதிர்பார்த்தனர்; ஆனால், கிடைக்கவில்லை. இந்த முறை எம்.பி., பதவி கிடைக்கும் என எதிர்பார்த்த பீட்டர் அல்போன்சுக்கும், திருநெல்வேலி அல்வா தான் கிடைத்துள்ளது. அதேபோல, கிருஷ்ணகிரி தொகுதியில், கடந்த லோக்சபா தேர்தலில் சீட் கிடைக்காத செல்லக்குமாருக்கும் ராஜ்யசபா எம்.பி., பதவி வழங்கப்படவில்லை.
அகில இந்திய காங்கிரஸ் செயலர் விஸ்வநாதனை, திருவள்ளூர் தொகுதி வேட்பாளராக ராகுல் தேர்வு செய்திருந்தார். ஆனால், கடைசி நேரத்தில் சசிகாந்த் செந்தில் நிறுத்தப்பட்டார். இதனால், அவரும் ராஜ்யசபா எம்.பி., பதவியை எதிர்பார்த்தார்.
தமிழக காங்கிரஸ் துணைத் தலைவராகவும், ஊடகத் துறை தலைவராகவும் உள்ள கோபண்ணாவும் ராஜ்யசபா எம்.பி., பதவிக்காக போராடினார். அவருக்கும் வாய்ப்பு கிட்டவில்லை.
இதனால், தமிழக காங்கிரசின் மூத்த தலைவர்கள் பலரும், ராஜ்யசபா சீட் விஷயத்தில், கட்சி தலைமை மீது கடும் அதிருப்தியில் உள்ளனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.
Advertisement
அதனுடன் அற்புத பெருவிழா மாவட்டங்கள் தோறும் விடியல் நடத்தினால் வரும் தேர்தலில் விடியலுக்கு வெற்றி உறுதி .....
இந்த வடக்கன் இத்தாலி காங்கிரஸ் காரன் உத்தர பிரதேசம் அங்கே வடக்கே நின்று ஜெயிக்க முடியாமல் வய நாடு பங்களாதேஷி பாக்கிஸ்தான் வோட்டுகள் வாங்கி ஜெயித்தவன் .....கட்சி தலைவனுக்கே வடக்கே நின்று ஜெயிக்க வக்கில்லை ??......
பேசாமல் மொத்த 234 தொகுதிகளையும், ஒவ்வொரு சாதிக்கு ஒரு ஒரு சீட் ஆக தேர்தல் ஆணயம் பிரிக்கும் காலமும் வரலாம். அப்பவாவது அதிருப்தி குறைகிறதா என்று பார்ப்போம்.
ராகுல் செய்த துரோகத்தால் கட்சியில் உள்ளவர்கள் இனி மவுனம் சாதிப்பார்கள் அல்லது வேறு கட்சிக்கு தாவி விடுவார்கள் இது வரும் மாநில தேர்தலில் வெகுவாக பாதிப்பு உண்டாகும் இதற்கு ராகுல் முழு முழு காரணம்

மணிப்பூரில் குக்கி கலவரத்தை தூண்டி விட்டதற்கு கொடுத்த பரிசாக இருக்கலாம். இதை தானே அரசியல் கட்சிகள் செய்கிறது?