Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ்

Advertisement


களம் இறக்கப்பட்ட அருந்ததியர் சமூக கட்சிகள்; மேற்கு மாவட்டங்களில் பலத்தை கூட்டும் தி.மு.க.,

களம் இறக்கப்பட்ட அருந்ததியர் சமூக கட்சிகள்; மேற்கு மாவட்டங்களில் பலத்தை கூட்டும் தி.மு.க.,
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

சென்னை: அருந்ததியர் ஓட்டுகளை மொத்தமாக அள்ள, அந்த சமூக கட்சிகளை கூட்டணிக்குள் தி.மு.க., கொண்டு வந்துள்ளது.

கடந்த 1971க்குப் பின், தொடர்ந்து இரண்டு சட்டசபை தேர்தல்களில் தி.மு.க., வென்று ஆட்சி அமைத்தது இல்லை. இந்த வரலாற்றை முறியடிக்க, வரும் சட்டசபை தேர்தலை விட்டால் வேறு வாய்ப்பு கிடைக்காது என்று நினைத்து, முதல்வர் ஸ்டாலின் காய்களை நகர்த்தி வருகிறார்.

முரண்டு பிடித்த போதிலும் போராடி, காங்கிரஸ் உடனான கூட்டணியை தி.மு.க., தக்க வைத்துள்ளது. அது மட்டுமல்லாது, தமிழக அரசியல் வரலாற்றில் எப்போதும் இல்லாத அளவுக்கு காங்கிரஸ், தே.மு.தி.க., மக்கள் நீதி மய்யம், முஸ்லிம் லீக், எஸ்.டி.பி.ஐ., உள்ளிட்ட 23 கட்சிகளுடன், மெகா கூட்டணியை தி.மு.க., அமைத்துள்ளது.

கடந்த 2021 சட்டசபை தேர்தலில் தி.முக., கூட்டணி வென்றாலும், வடக்கு, மேற்கு மாவட்டங்களில் பெரும் தோல்வியை சந்தித்தது. தென் மாவட்டங்களிலும் கணிசமான தொகுதிகளை இழந்தது.

வரும் தேர்தலில், தென் மாவட்டங்களில் அ.தி.மு.க.,வை தோற்கடிக்க வேண்டும் என்பதற்காக, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வத்தை, தி.மு.க.,வில் சேர்த்துள்ளனர்.

வடக்கு, மேற்கு மாவட்டங்களில், அ.தி.மு.க., கூட்டணி வெற்றிக்கு பா.ஜ., - பா.ம.க., ஓட்டுகள் காரணமாக இருந்தன. ஆனாலும், எம்.ஜி.ஆர்., காலத்திலிருந்து அ.தி.மு.க., ஓட்டு வங்கியாக உள்ள அருந்ததியர் ஓட்டுகளும் முக்கியப் பங்கு வகித்தன.

எனவே, வரும் சட்டசபை தேர்தலில் வடக்கு, மேற்கு மாவட்டங்களில் அ.தி.மு.க.,வை தோற்கடிக்க, அருந்ததியர் ஓட்டுகளை மொத்தமாக அள்ள வேண்டும் என தி.மு.க., முடிவு செய்துள்ளது.

அதற்காக, அதியமானின் ஆதித் தமிழர் பேரவை, ஜக்கையனின் ஆதி தமிழர் கட்சியுடன் தி.மு.க., கூட்டணி அமைத்துள்ளது.

இது தொடர்பாக, தி.மு.க., நிர்வாகி ஒருவர் கூறியதாவது:
இந்த முறை சிறுபான்மையினர், பட்டியலின இளைஞர்களின் ஓட்டுகளை, விஜயின் த.வெ.க., கணிசமாக பிரிக்கும் என முதல்வர் ஸ்டாலின் நினைக்கிறார். அதை ஈடுகட்டி வெற்றி பெற வேண்டுமானால், அ.தி.மு.க., எதிர்ப்பு ஓட்டுகள் அனைத்தையும் தி.மு.க.,வுக்கு கொண்டு வர வேண்டும்.

அதற்காகவே, பெரிய கட்சி, சிறிய கட்சி என பார்க்காமல், 23 கட்சிகளுடன் மெகா கூட்டணி அமைத்துள்ளார். அருந்ததியர் கட்சிகளை ஒன்றிணைப்பது, மேற்கு மாவட்டங்களில் பலன் கொடுக்கும் என ஸ்டாலின் கருதுகிறார். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

மார் 06, 2026 02:27 pm

பருப்பு வேகாது

Reply Rate this
மார் 06, 2026 08:51 am

எப்படியோ விஜய் கட்சியை ஓச்சி விடலாம் என்று முடிவு பண்ணி இருக்காரு. ஆனா எதிர்பார்க்கிறத விட விஜய்க்கு அதிக ஓட்டு விழும்

Reply Rate this