Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ்

Advertisement


 சிவாஜி கிருஷ்ணமூர்த்தி தண்டனை நிறுத்தி வைப்பு

 சிவாஜி கிருஷ்ணமூர்த்தி தண்டனை நிறுத்தி வைப்பு

சென்னை: தமிழக கவர்னர், நடிகை குஷ்பு ஆகியோரை, ஆபாசமாகப் பேசியதாக பதிவான வழக்கில், தி.மு.க. பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கு விதிக்கப்பட்ட, இரண்டு ஆண்டு சிறை தண்டனையை நிறுத்தி வைத்து, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை கொடுங்கையூர், எருக்கஞ்சேரி கிருஷ்ணமூர்த்தி சாலையில், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 100வது நாள் பிறந்தநாள் பொதுக் கூட்டம், கடந்த 2023ம் ஆண்டு ஜூன் 16ல் நடந்தது.

அதில், தி.மு.க. பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, 63, தமிழக கவர்னர், முன்னாள் அமைச்சர் ஜெயகுமார், முன்னாள் முதல்வர் பழனிசாமி, தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை, நடிகை குஷ்பு ஆகியோர் குறித்து, ஆபாசமாகப் பேசினார்.

இதையடுத்து, ஆபாசமாக பேசுவது, கலகத்தை துாண்டுவது, பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பது என, நான்கு பிரிவுகளில், சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது, கொடுங்கையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கை, சென்னை 10வது பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றம், சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கு, இரண்டு ஆண்டு சிறை தண்டனை, 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டது.

இந்த தீர்ப்பை எதிர்த்து, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில், சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மேல்முறையீடு செய்தார். மனுவில், 'சிறை தண்டனையை ரத்து செய்ய வேண்டும்; தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும்' என, கோரியிருந்தார்.

மனுவை விசாரித்த, 6வது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி வி.பாண்டியராஜ், நிபந்தனையுடன் தண்டனையை நிறுத்தி வைத்து உத்தரவிட்டதுடன், தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்ற மனு மீதான விசாரணையை, வரும் 13ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

Advertisement

மார் 06, 2026 08:01 pm

என்ன எழுவே

Reply Rate this
மார் 06, 2026 07:57 pm

ஓகே பெங்களூரு kumarasamy

Reply Rate this
மார் 06, 2026 06:24 pm

காற்றிலே ஊழல் செய்த ராஜா, ஊழல் மட்டுமின்றி ஜெ. வுக்கு அவமானம் விளைவித்தவர்கள், விஞ்ஞான ஊழல் செய்தவர்கள் என திமுக வை சேர்ந்தவர்கள் யாருக்கும் தண்டனை இதுவரை இல்லை. ஆனால் அளவில் சிறிய டான்சி ஊழலில் ஜெ. வை சிக்க வைத்து திமுகவினர் வெச்சு செஞ்சதில் அம்மா 60வயதுக்குள் தண்டனை பெற்று உடல் நலம் கெட்டு இறந்தே போனார். ஆக ஆப்சமாக பேசினாலும், அசிங்கமாம் பேசினாலும் திமுக வினர் மீது நடவடிக்கைகள் பாயாது. பாய்ந்தாலும் மேலிடம் சரி செய்துவிடும். ஆக திமுகவில் எபாபடி வேண்டுமீனாலும் பேசலாம், மேலிடம் பீர்த்துக்கொள்ளும். சூப்பர்

Reply Rate this
மார் 06, 2026 06:09 pm

நீதி நிலைநாட்டப்படும்.

Reply Rate this
மார் 06, 2026 05:02 pm

நீதிபதிகள் எல்லாம் விலை போய்விட்டார்கள். இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால் ஒரு நீதிபதி தண்டனை வழங்குவதும் அதை மறு நீதிபதி நிறுத்தி வைப்பதும் பின்பு வரும் பெட்டியில் பங்கு. இரண்டு பேருக்கும் பணம். அதனால் தான் டெல்லியில் நீதிபதி வீட்டில் அத்தனை கோடி தீயில் எரிந்தது. கேவலம்.

Reply Rate this
மார் 06, 2026 01:37 pm

பணம் என்றல் நீதிபதிகள் வாயும் திறக்கும்

Reply Rate this
மார் 06, 2026 12:54 pm

உலகிலேயே நீதிபதி அணிகள் கொண்ட ஒரே கட்சி திராவிட முன்னேற்றக் கழகம்

Reply Rate this
மார் 06, 2026 09:19 am

திமுகவினர் அட்டுழியம் செய்வார்கள் நீதிமன்றங்கள் இடைக்கால தடை விதிக்கும். சுமார் 10 அமைச்சர்கள் மீது தண்டனையை நிறுத்தி வைத்து இடைக்கால தடை கடந்த மூன்று ஆண்டுகளாக இருக்கு. எப்போது தண்டனை கொடுப்பீர்கள்.

Reply Rate this
மார் 06, 2026 08:49 am

பெண்களுக்கு சமூக நீதி என்று ஊரை ஏமாற்றிக்கொண்டு பெண்களை கொச்சையாக பேசுபவர்களை பாதுகாப்பது தான் இவர்கள் அரசியல்

Reply Rate this