Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ்

Advertisement


 அ.தி.மு.க.,விடம் அதிக தொகுதிகள் கேட்டு கூட்டணி கட்சிகள் நெருக்கடி

 அ.தி.மு.க.,விடம் அதிக தொகுதிகள் கேட்டு கூட்டணி கட்சிகள் நெருக்கடி
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

சென்னை: அதிக தொகுதிகள் தருமாறு, அ.தி.மு.க.,விடம் கூட்டணி கட்சிகள் வலியுறுத்துவதாக தகவல் வெளியாகி உள்ளது.

சட்டசபை தேர்தல் தேதி எப்போது வேண்டுமானாலும் வெளியாகலாம் என்ற நிலையில், தி.மு.க., கூட்டணியில் காங்கிரஸ், முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்டவற்றுக்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மேலும், தி.மு.க., கூட்டணியில் 20க்கும் மேற்பட்ட கட்சிகள் இணைந்துள்ளன.

ஆனால், அ.தி.மு.க., கூட்டணியில் இதுவரை தொகுதி பங்கீட்டு பேச்சு துவங்கவில்லை. தி.மு.க., கூட்டணியில், காங்கிரசுக்கு 28 தொகுதிகள், ஒரு ராஜ்யசபா எம்.பி., பதவி வழங்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டி, 40 தொகுதிகள் வேண்டும் என அ.தி.மு.க.,விடம் பா.ஜ., வற்புறுத்தி வருகிறது.

தி.மு.க., கூட்டணிக்கு தே.மு.தி.க., சென்றதால், அ.தி.மு.க., கூட்டணியில் இணைய முக்கிய கட்சிகள் எதுவும் இனி இல்லை. இதை காரணம் காட்டி, அ.தி.மு.க., கூட்டணியில் உள்ள அ.ம.மு.க., - பா.ம.க., - த.மா.கா., இந்திய ஜனநாயக கட்சி ஆகியவை, அதிக தொகுதிகளை கேட்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த ஜன., 7ம் தேதி, அ.தி.மு.க., கூட்டணியில் பா.ம.க., இணைந்த போது 17 தொகுதிகள் என பேசி முடிக்கப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால், இப்போது 20 தொகுதிகள் வரை கேட்பதாக அ.தி.மு.க.,வினர் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பாக, அ.தி.மு.க., நிர்வாகிகள் சிலர் கூறியதாவது:
கூட்டணி கட்சிகளுக்கு ஒன்றிரண்டு தொகுதிகளை அதிகமாக கொடுப்பதில் எந்த பிரச்னையும் இல்லை. ஆனால், அ.தி.மு.க., பலமாக உள்ள தொகுதிகளை கேட்பதுதான் பிரச்னை. தென் மாவட்டங்கள், கொங்கு மண்டலம், சென்னையில் அதிக தொகுதிகளை பா.ஜ., கேட்கிறது.

தர்மபுரி, சேலம், கிருஷ்ணகிரி, வேலுார், கடலுார், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில், பா.ம.க., அதிக தொகுதிகளை கேட்கிறது. டில்லியில் மத்திய அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தபோது, இப்பிரச்னை குறித்து அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி பேசியுள்ளார். எனவே, தொகுதிப் பங்கீடு சுமுகமாக முடியும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement

மார் 06, 2026 08:52 am

இவனுங்க வேற.. குறுக்க மறுக்க ஓடிக்கிட்டு.. கட்சி அவ்வளவுதான்

Reply Rate this