Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ்

Advertisement


 'கோட்டா சிஸ்டம்' வேண்டாம்; கொடிபிடிக்கும் காங்., நிர்வாகிகள்: தொகுதி செல்வாக்குக்கு 'சீட்' கொடுங்க

 'கோட்டா சிஸ்டம்' வேண்டாம்; கொடிபிடிக்கும் காங்., நிர்வாகிகள்: தொகுதி செல்வாக்குக்கு 'சீட்' கொடுங்க
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

மதுரை: தி.மு.க.,விடம் போராடி பெற்ற 28 சட்டசபை தொகுதிகளிலும் செல்வாக்கு உள்ளவர்களை வேட்பாளராக அறிவிக்க வேண்டும்; வழக்கம் போல் தலைவர்களின் 'கோட்டா சிஸ்டத்திற்கு' இந்த முறை தமிழக காங்., சிக்கக் கூடாது என மாவட்ட நிர்வாகிகள் போர்க்கொடி துாக்கியுள்ளனர்.
தமிழக காங்., என்றாலே 'கோஷ்டி பூசலும் கோட்டா சிஸ்டமும்' தான் நினைவுக்கு வரும். ஒவ்வொரு தலைவர்களுக்கும் ஒரு ஆதரவாளர் வட்டத்தை உருவாக்கி வைத்துள்ள னர். உள்ளாட்சி முதல் லோக்சபா தேர்தல் வரை அந்தந்த தலைவர்கள் 'கோட்டா' அடிப்படையில் வேட்பாளர்கள் வாய்ப்பு வழங்கப்படுகிறது. பல தேர்தல்களில் போட்டியிட்டவர்களுக்கே மீண்டும் வாய்ப்பு கிடைக்கிறது.

அந்த வகையில் எம்.எல்.ஏ., எம்.பி., தேர்தல்களில் 14 முறை போட்டியிட்ட தலைவர் கூட கட்சியில் இன்றும் உள்ளார். கடந்த முறை 25 தொகுதிகளை ஒதுக்கிய தி.மு.க., இந்த முறை த.வெ.க., பக்கம் காங்., சாய்ந்துவிடுமோ என்ற அச்சத்தால் 28 சட்டசபை தொகுதிகள், ஒரு ராஜ்யசபா சீட் என அள்ளிக் கொடுத்துள்ளது. இதற்காக த.வெ.க.,வுக்கு தான் காங்., நன்றி சொல்ல வேண்டும். இந்த வாய்ப்பை பயன்படுத்தி

அனைத்திலும் வெற்றி பெற காங்., திட்டமிட வேண்டும். வேட்பாளரின் 'செல்வாக்கை' பார்க்காமல் தொகுதியில் செல்வாக்கு உள்ளவர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகிகள் போர்க்கொடி துாக்கியுள்ளனர்.

அவர்கள் கூறியதாவது: வேட்பாளர்கள் தேர்வில் கடைபிடிக்கப்பட்டு வந்த தலைவர்களின் 'கோட்டா சிஸ்டத்திற்கு' ராகுல் எம்.பி., முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இந்தமுறையால்தான் அர்ப்பணிப்பான கீழ்மட்ட தொண்டர்கள் காங்.,க்கு இன்னும் கிடைக்கவில்லை. 28 தொகுதிகளில் யாருக்கு செல்வாக்கு உள்ளது என டில்லி தலைமை குழு அமைத்து வேட்பாளர்களை தேர்வு செய்ய வேண்டும்.

தொகுதி பெறுவதில் ஆர்வம் காட்டிய மேலிட பார்வையாளர் கிரிஷ் ேஷாடங்கரின் சுறுசுறு தேர்தல் முடியும் வரை தொடர வேண்டும். இல்லையென்றால், 'காங்கிரசில் கலகக்குரல் எழுப்புவது புதிதல்ல; உட்கட்சி விவகாரத்தில் கதர் சட்டையெல்லாம் கிழிக்கப்பட்டிருக்கும்' என ம.தி.மு.க., பொதுச் செயலாளர் வைகோ மதுரையில் ஒருமுறை காங்கிரசை கலாய்த்தார். அந்த நிலை இன்னும் பல ஆண்டுகள் தொடரும் என்றனர்.

Advertisement

மார் 06, 2026 08:50 am

காங்கிரஸ் ஒரு தேவையில்லாத ஆணி

Reply Rate this