விஜயை முதல்வராக ஏற்றால் கூட்டணி: த.வெ.க.,
மதுரை: த.வெ.க., இணை பொதுச் செயலர் நிர்மல் குமார் நேற்று மதுரையில் அளித்த பேட்டி:
தொகுதி பங்கீட்டில் நீண்ட இழுபறிக்குப் பின், தி.மு.க.,வுடன் காங்., கூட்டணி தொடர்கிறது. இது, காங்., முன்னாள் தலைவர் ராகுலுடைய உடன்பாட்டுடன் நடந்ததா என தெரியாது.
ஆனால், காங்., தலைவர்களை மிகக் கேவலமாகவும், அவதுாறாகவும் அமைச்சர் ராஜ கண்ணப்பன், மதுரை தளபதி எம்.எல்.ஏ., போன்றோர் பேசினர்.
ஆனால், அவர்களை தி.மு.க., தலைமை கண்டிக்கக்கூட இல்லை. இதை பொறுத்துக் கொண்டு தான், காங்கிரசார், தி.மு.க.,வுடன் கூட்டணியை தொடருகின்றனர்.
த.வெ.க.,வுக்கு தொடர்ந்து நெருக்கடிகள் கொடுக்கப்படுகின்றன. யார், எங்கிருந்து நெருக்கடி கொடுப்பர் என எல்லோருக்கும் தெரியும்.
இதை தைரியமாக எதிர்கொண்டு தான் த.வெ.க., தலைவர் விஜய் நிற்கிறார். 234 தொகுதிகளிலும் த.வெ.க., போட்டியிடும். விஜயை யார் முதல்வராக ஏற்றுக் கொண்டு கூட்டணிக்கு வருகின்றனரோ, அவர்களை கூட்டணியில் சேர்ப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Advertisement
முதலில் அவருடைய பெற்றேருக்கு நல்ல புதல்வராகயும், மனைவிக்கு நல்ல கணவனாகயும், பிள்ளைகளுக்கு நல்ல தந்தையாகவும் இருக்க சொல்லுங்கள்.

இந்த பனையூர் பண்ணையாரை முதல்வராக ஏற்க மற்ற கட்சிகளுக்கு என்ன தலையெழுத்தா..... முதலில் போட்டியிடும் அனைத்து தொகுதியிலும் டெபாசிட் கிடைக்குமா பாருங்கள்....!!!