/ செய்திகள் /  பா.ஜ.,வை ஒரு கை பார்க்க தயார்: முதல்வர் ஸ்டாலின் திட்டவட்டம்

 பா.ஜ.,வை ஒரு கை பார்க்க தயார்: முதல்வர் ஸ்டாலின் திட்டவட்டம்

சென்னை: ''தமிழகத்தில் பல முனை போட்டிகள் இருக்கலாம். ஆனால், அது பலம் பொருந்திய போட்டியாக இல்லை,'' என முதல்வர் ஸ்டாலின் கூறினார். சென்னையில் நடந்த தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில், முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: தமிழகத்தை தவிர வேறு எந்த மாநிலமும், 11.19 சதவீதம் என்ற வளர்ச்சியை சாதிக்க முடிய வில்லை. ஜனநாயகத்திற்கும், கூட்டாட்சிக்கும் சிறிதும் மதிப்பு தராத பா.ஜ., அரசு மத்தியில் உள்ளது. எதிர்க்கட்சிகள் ஆளக்கூடிய மாநிலங்களை, எந்த அளவிற்கு வஞ்சகத்துடன், ஓரவஞ்சனையுடன் அவர்கள் அணுகுகின்றனர் என்று, நான் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. நாங்கள் செய்திருப்பது போன்ற திட்டங்களை, வேறு எந்த மாநிலத்திலாவது செய்து இருக்கின்றனரா? தமிழகத்தில் எந்த குடும்பத்தை எடுத்துக் கொண்டாலும், அவர்களில் ஒருவராவது தி.மு.க., அரசின் திட்டங்களால் பயனடைந்து கொண்டிருப்பார். அதனால் தான், ஆட்சிக்கு ஆதரவான மனநிலையில் மக்கள் உள்ளனர். தமிழகத்தின் இந்த வளர்ச்சியும், தனித்துவமும், உண்மையான வளர்ச்சி அரசியல் என்றால் என்ன என்று, இந்தியாவின் மற்ற மாநிலங்களுக்கு காண்பிக்கும் செயல்பாடுகளும், பா.ஜ.,வை கடுமையாக எரிச்சல் அடைய வைக்கிறது. அவர்களின் சதி அரசியல் வெளிப்பட்டு, அவமானப்பட்டு அசிங்கப்பட்டு நிற்கின்றனர். மற்ற மாநிலங்களில் கட்சிகளை மிரட்டி ஆட்சிகளை கவிழ்த்து, தங்களின் அரசை கொண்டு வர பயன்படுத்திய வாஷிங் மெஷினை, பா.ஜ.,வினர் இங்கும் கொண்டு வந்து, கூட்டணி அமைத்து உள்ளனர். தேசிய ஜனநாயக கூட்டணி என்பது, முழுக்க முழுக்க ஊழல்வாதிகளை மிரட்டி அமைக்கப்பட்டுள்ள கூட்டணி. அ.தி.மு.க., ஆட்சியில் இருந்த முன்னாள் அமைச்சர்கள் பலர், 'ரெய்டு'களுக்கு ஆளாகினர். கூட்டணிக்காக அவர்களை இப்போது பாதுகாத்து கொண்டிருக்கின்றனர். இன்னும் சொல்ல வேண்டும் என்றால், முன்னாள் அமைச்சர்கள் மீது எப்.ஐ.ஆர்., கூட பதிவு செய்ய விடாமல், கவர்னர் வாயிலாக நீண்ட காலமாக நிறுத்தி வைத்து உள்ளனர். இந்த லட்சணத்தில் அமலாக்கத் துறை, வருமான வரித் துறை, சி.பி.ஐ., வாயிலாக எங்களை மிரட்டலாமா என்று பார்க்கின்றனர். பா.ஜ., தன் படை பரிவாரத்தை அழைத்து வந்தாலும், அதை ஒரு கை பார்க்க நாங்களும் தயாராகத் தான் இருக்கிறோம். மக்கள் பா.ஜ.,வை நம்ப வேண்டும் என்பதற்காக, பழனிசாமி போன்றவர்களை கிளை செயலர்களாக வைத்துக்கொண்டு உள்ளே வர நினைக்கின்றனர். தமிழகத்தில் நடக்க இருப்பது ஜனநாயகத்திற்கும், பாசிசத்திற்கும் இடையிலான தேர்தல். பிரதமர் மோடி, அமித் ஷா ஆகியோர் தமிழகத்திற்கு அடிக்கடி வர வேண்டும். கவர்னரையும் மாற்றக் கூடாது. அதுவே, மக்கள் மத்தியில் எங்களுக்கு பெரிய பலம். 'இண்டி' கூட்டணி தலைவராக நான் வர வாய்ப்பிருக்கிறதா என்று கேட்கிறீர்கள். என் உயரம் எனக்கு தெரியும். அந்த உயரத்தின் அடிப்படையில் நான் இருப்பேன். இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 43 )

mohana sundaram
பிப் 24, 2026 16:31

நீர் வாழ்க உன் குற்றம் வாழ்க உன் குடி வாழ்க.


Madras Madra
பிப் 24, 2026 15:33

கடைசியில் பாஜக கூடத்தான் போட்டி என்று ஒத்து கொண்டு விட்டார்


Ms Mahadevan Mahadevan
பிப் 24, 2026 14:59

எப்ப பார்த்தாலும் சிறு பான்மை, பிற்படுத்தப் பட்டோர், ஒடுக்கப் பட்டோர், தாழ்த்தப் பட்டோர், பிற்படுத்தப் பட்டோர் என்ட்ரி புளுகி சமூகத்தில் எக்கணமிக்கலி வீக்கர் நிலையில் உள்ள வர்களை முற்படுத்தப் பட்டோர் என்று புளுகி ஆட்சியை புடித்துது மது விலக்கை கொண்டு வராமல் தமிழ் நாட்டை நாசமாக்கியயது யார் ? எக்கனாமிக்கலி வீக்கர் செக்ஷன் வாக்காளர்களே இம்முறை நோட்டாவுக்கு வசுக்களித்உ அரசியல் வசதிகளுக்கு பாஸிடம் புகட்டுங்கள்


Rajasekar Jayaraman
பிப் 24, 2026 14:07

தமிழகத்தில் இந்தி கொள்ளையர்களின் கூட்டணி.


vivek
பிப் 24, 2026 16:26

அதை எதிர்க்கும் திருட்டு திராவிட கூட்டம்


Ramesh Sargam
பிப் 24, 2026 13:03

திமுகவினரின் கைகள் லஞ்சம் வாங்குவதில் மும்முரம். பிறகு எப்படி பாஜகவை ஒரு கை பார்ப்பீர்கள்? ஓஹோ... ஒரு கையில் லஞ்சம் வாங்கிக்கொண்டே, மறுகையால் பார்ப்பீர்கள்... கில்லாடிங்கப்பா... நீங்கள்


Ramesh Sargam
பிப் 24, 2026 12:59

எந்தக்கை? ஓ அந்த இரும்புக்கையா...? அந்த இரும்புக்கை இவ்வளவு நாட்களாக எங்கே போனது?


Balasubramanian
பிப் 24, 2026 12:28

பாஜகவின் கையை வாக்காளர்கள் ஏற்கனவே பார்த்து விட்டார்கள்! உங்களுடன் ஒட்டி நிற்கும் கை இறங்கியதற்கு காரணம் அவர்கள் தான்! உங்கள் கை-வரி-சை-களை வாக்காளர் கவனித்து வருகின்றனர்! அதில் அஸ்தமனம் தெரிகிறது!


angbu ganesh
பிப் 24, 2026 12:25

வில்லங்க எல்லாம் கடைசில நல்லவங்க ஆய்டுவாங்க ஸ்டாலின் நீங்க திருந்த மாட்டேன்றிங்களே


R.MURALIKRISHNAN
பிப் 24, 2026 12:02

இப்ப யார் நீர் சொல்லறத கேக்கறான்னு


Sun
பிப் 24, 2026 11:56

தலைவா தாங்கள் முதல்வர்! அதற்கு தகுந்தாற் வார்த்தைகளில் நாகரிகம் இருக்கணும். ஒரு கை பார்க்கிறேன், இரண்டு கை பார்க்கிறேன் என்பதெல்லாம் உங்கள் கட்சியின் மேடைப் பேச்சாளர்கள் பேசும் நடைமுறை வார்த்தைகள். ஒரு முதல்வரின் வாயில் இருந்து இது போன்ற வார்த்தைகள் வருவது தாங்கள் வகிக்கும் மாண்புமிகு பதவிக்கு அழகல்ல!