/ செய்திகள் / கல்லாப்பெட்டி கூட்டணி; திமுகவை விளாசினார் விஜய்

கல்லாப்பெட்டி கூட்டணி; திமுகவை விளாசினார் விஜய்

நமது நிருபர்''கொள்ளையடித்த பணத்தை கொடுத்து கூட்டணிக்கு கட்சிகளை பிடிக்கின்றனர். அது, கல்லாப்பெட்டி கூட்டணி,'' என்று வேலுாரில் நடந்த பொதுக்கூட்டத்தில், திமுகவை, தவெக தலைவர் விஜய் கடுமையாக விமர்சனம் செய்தார்.வேலூரில் தவெக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தில் விஜய் பேசியதாவது: மக்களை நேசிக்கும் நல்ல தலைமை இல்லாத காரணத்தினால், இத்தனை வருடமாய் ஸ்டாலின் சார் கொடுத்த பொய்யான வாக்குறுதிகள் எல்லாவற்றையும் நம்பி ஏமாந்த மக்களுக்கு சரியான நேரத்தில் வந்தது தவெக. ஒவ்வொரு வீட்டிலும் நாம் உயிராக இருக்கிறோம். உங்களை எல்லோரையும் நேரில் சந்திக்க எனக்கு ஆசை. எதிர்க்கட்சியாக இருந்து கேள்வி கேட்டு கொண்டு இருக்கும் நமக்கு எதிராக என்ன சூழ்ச்சி நடக்கிறது என்பது உங்கள் எல்லோருக்கும் நன்றாக தெரியும்.வாக்குறுதிஉங்கள் எல்லோருக்கும் நான் வாக்குறுதி கொடுக்கிறேன். நம்ம ஆட்சி அமைந்ததும், ஒவ்வொரு கிராமத்துக்கும் நேரடியாக வந்து என்னுடைய சொந்தங்களாகிய உங்களை சந்திக்கிறேன். கொஞ்ச நாட்களுக்கு முன், ஸ்டாலின் சார் ஒரு உருட்டு ஒன்று உருட்டினார். வரும் சட்டசபை தேர்தலை, தமிழகத்திற்கும், டில்லிக்கு இடையேயான தேர்தல் என்று சொல்கிறார்கள். இது தமிழகத்துக்கும்- தேஜ கூட்டணிக்கும் இடையேயான தேர்தல் என்று சொல்கிறார்கள். என்ன சார் டில்லியில் போய் நிற்க போகிறீர்களா? இது பார்லிமென்ட் தேர்தலா? பிரதமர் பதவிக்கு போட்டி போடுகிறீர்களா? இது ஏன் தமிழகத்திற்கும், தேஜ கூட்டணிக்கும் இடையேயான தேர்தல் என்று சொல்கிறீர்கள், எனக்கு ஏதும் புரியவில்லை. எந்த தேர்தலை எப்படி டீல் செய்ய வேண்டும் என்று தமிழக மக்களுக்கு தெளிவாக தெரியும். நம்ம தமிழக மக்களை மாதிரி நீங்கள் பார்க்கவே முடியாது. தேர்தல் எதற்கு?தமிழக மக்கள் சூப்பர் மக்கள் சார். இந்த போருக்கு போகும் போது தான் படையுடன் போவார்கள் என்று கேள்வி பட்டு இருக்கிறேன். ஆனால் நீங்கள் பால் டப்பாவை உருட்டி கொண்டு இருக்கிறீர்கள் சார். உண்மைக்கும் இந்த தேர்தல் எதற்காக நடக்கிறது என்று சொல்கிறேன். தமிழக மக்களுக்கும் ஊழலுக்கும் இடையே நடக்குற போர்; தமிழக மக்களுக்கும் லஞ்சத்திற்கு இடையே நடக்குற போர்.தவெக vs திமுகதமிழக மக்களுக்கும், நிர்வாகத்தை சரியாக செய்யாத திமுக அரசுக்கும் இடையே நடக்குற போர்; தமிழக மக்களுக்கும் உங்க ஆட்சிக்கும் இடையே நடக்கும் போர்; தமிழக மக்களுக்கும் ஸ்டாலின் சார்க்கும் இடையே நடக்குற போர்; இன்னும் சுருக்கமாக செல்லனும்னா விஜய்க்கும் ஸ்டாலின் சாருக்கும் இடையே நடக்குற போர். தமிழகம் தான் இந்த விஜய். இந்த விஜய் தான் தமிழகம். தூய சக்தி தவெகவுக்கும், தீய சக்தி திமுகவுக்கு இடையே தான் போர்.உல்டா மாடல் இன்னொரு காமெடி, அவருடைய ஆட்சியில் தான் தமிழகம் சூப்பர் ஸ்டார் மாநிலமாக இருக்கிறதாம். சரி தமிழகம் சூப்பர் ஸ்டார் மாநிலம் தான். அது காமராஜர், அண்ணாதுரை அவர்கள் டைமில். எம்ஜிஆர் ஆட்சியில் இருந்த போது. இன்றைக்கு ஒன்றுக்கும் உதவாத உல்டா மாடல் ஆட்சியில், தமிழகம் சூப்பர் ஸ்டார் மாநிலம் கிடையாது. சூப்பர் standup காமெடிகாரர் ஆட்சி நடத்தும் மாநிலமாக மாறிவிட்டது. மக்களே உங்களுக்காக தான், வரும் தடைகள், சூழ்ச்சிகளையும் தாண்டி இந்த 2026ம் தேர்தலில் தவெக தில்லாக நிற்கும். இதுவரைக்கும் நடந்த தேர்தல், வேறு இப்பொழுது நடக்க போகும் தேர்தல் வேறு. ஒவ்வொரு 5 வருடத்திற்கும் ஒரு முறை நடக்கும் தேர்தலாக நினைத்து விடாதீர்கள். 50 வருடத்திற்கு ஒருமுறை நடக்க போகும் தேர்தல் இது. அதிசய தேர்தல் இது. ஊழல், லஞ்சம்ஒரு தேர்தலில், அவர்கள் அவர்களுடைய எதிரிகளை தான் எதிர்ப்பார்கள். இதுதான் யதார்த்தம். இந்த தேர்தலில் தான் ஒட்டுமொத்தமாக சேர்ந்து இந்த விஜயை எதிர்க்கிறார்கள். ஏன் என்றால் இந்த விஜய் ஊழலை எதிர்க்கிறான், லஞ்சத்தை எதிர்க்கிறான். மக்களுடோடு மக்களாக நிற்கிறான். மக்கள் அவனோடு நிற்கிறார்கள், அந்த காண்டு. நீங்கள் எப்படி வேண்டுமென்றாலும் எதிர்த்துக்கோங்க, போட்டி இரண்டே பேருக்கு இடையே தான். ஒன்று தவெக, இன்னொன்று திமுக. நமக்கு எதிராக அவதூறு பரப்புகிறார்கள். அவர்களுக்கு தெரியாது. என் மீது அவதூறு பரப்பினால், அது மக்கள் மேல் அவதூறு பரப்புகிற மாதிரி.எனக்கு எதிராக செய்யும் செயல் மக்களுக்கு எதிராக செய்யும் செயல் என்று அவர்களுக்கு தெரியவில்லை. இந்த விஜயை மக்களிடம் இருந்து பிரிக்கவே முடியாது. சொத்து மதிப்பு எவ்வளவு?அரசியலுக்கு வந்த பிறகு உங்களிடம் இருக்கும் சொத்து விபரத்தை வெளியிட முடியுமா? அந்த உண்மையாக உழைத்து வந்த காசா? ஆட்சி அதிகாரத்திற்கு வந்த பிறகு ஆட்டைய போட்ட காசா? இது எல்லாம் ஓபனாக சொல்ல முடியுமா? வரும் தேர்தல் தான் திமுகவை சுவிட்ச் ஆப் செய்யும் ரிமோட். கரூர் சம்பவத்தில் முதல்வர் என் மீது பழியை போட்டது ஏன்?கல்லாப்பெட்டி கூட்டணிஅறிவாலயம் பக்கத்தில் யார் நடந்து போனாலும், நிழலுக்கு ஒதுங்கினாலும் ஸ்டாலின் கூட்டணியில் சேர்த்துக்கொள்கிறார். கொள்ளையடித்து வைத்திருக்கிற பணத்தில் ஒரு பங்கு கொடுத்து கூட்டணியில் சேர்க்கின்றனர். அதற்கு கல்லாப்பெட்டி கூட்டணி என்று பெயர் வைத்திருக்கிறேன். அப்படி கஷ்டப்பட்டு கூட்டணி சேர்த்திருக்கிறார். அரதப்பழைய அந்த கூட்டணி கணக்கு மூலமாகவோ, கொள்ளையடித்த பணத்தில் எங்கள் மக்களை ஏமாற்றியோ ஜெயிக்க முடியாது. இது வித்தியாசமான விசில் புரட்சி தேர்தல். இவ்வாறு விஜய் பேசினார்.விஜய் வாக்குறுதிகள்!* சட்டம் ஒழுங்கு நீண்ட காலமாகக் காணாமல் போயுள்ளது. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு வலுவான பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யும் மாநிலமாக எங்கள் அரசு உயர்த்தும். * போட்டித் தேர்வுகளுக்கு ஏற்ப பள்ளி பாடத்திட்டம் மேம்படுத்தப்படும். அனைத்து அரசுப் பள்ளிகளிலும் பெண் மாணவர்களுக்கு தரமான கழிப்பறைகள் அமைக்கப்படுவது உறுதி செய்யபபடும்.* போதைப்பொருட்கள் இல்லாத தமிழகம் உருவாக்கப்படும். மாவட்ட கலெக்டர்கள், எஸ்.பி.,க்களில் சரி பாதி பேர் பெண்கள் நியமிக்கப்படுவர்.* மலை கிராமங்களில் மகப்பேறு வசதிகளுடன் கூடிய மருத்துவமனைகள் அமைக்கப்படும். - * ஆட்டோ, டாக்ஸி மற்றும் லாரி ஓட்டுநர்களுக்கு நல வாரியம் அமைக்கப்படும். * மீனவர்கள் மற்றும் நெசவாளர்களின் தேவைக்கேற்ப நல நடவடிக்கைகள் உருவாக்கப்படும்.கண் கலங்கிய விஜய் தமிழக மக்கள் தனது ரத்தமும், சதையுமானவர்கள் என கூறிய போது விஜய் உணர்ச்சிவசப்பட்டு கண் கலங்கினார். விஜய்க்கு வேல்,வாள், வெள்ளி யானைகளை கட்சி நிர்வாகிகள் பரிசு வழங்கினர்.உறுதி மொழி ''எங்கள் ஓட்டு எங்கள் உரிமை. எங்களை யாரும் விலைக்கு வாங்க முடியாது. எங்கள் ஓட்டு விசில் சின்னத்திற்கு தான். யாரையும் நம்பி ஏமாற மாட்டோம். எங்கள் வார்த்தையில் இருந்து மாற மாட்டோம். இது நிஜம். நன்றி'' என கூட்டத்தில் பங்கேற்ற விஜய் உறுதிமொழி ஏற்றுக்கொண்டார்.விஜயின் குட்டி கதை விஜய் சொன்ன கதை பின்வருமாறு: ஒரு குட்டி கதையில் இருந்து ஆரம்பிக்கலாம். ஒரு பெரிய ஊர். 4 ரோடுகள் இணையும் ஜங்ஷன், பிசியாக ஆள் நடமாட்டம் அதிகமாக இருக்கும் ஏரியா, அங்கே சென்டரில் முரட்டு ஜல்லிக்கட்டு காளை நின்று கொண்டு இருக்கிறது. அந்த காளை கிட்ட யாரும் போக முடியவில்லை. அந்த இடம் கேசுவலாக மாற வேண்டும் என்றால் அந்த காளையை அடக்கி, அமைதியாக்க வேண்டும். அந்த ஊரில் இருக்கும் ஒரு சிலருக்கு மட்டும் தான் அந்த காளை அடங்கும். அவர்கள் யாரும் அங்கு இல்லை. ஆனால் அந்த கூட்டத்தில், ஏற்கனவே காளையை அடங்கியவர்களுடன் இருந்த ஒரு சில பேர், எங்களுக்கு இல்லாத அனுபவமா, நாங்கள் பார்க்காத காளையா, மாடுவா என்று கூறிவிட்டு போகிறார்கள். ஒருவராலும் அந்த காளையை தொட கூட முடியவில்லை. எல்லாரையும் அடித்து தூக்கி வீசிப்போட்டது. அப்போது அந்த கூட்டத்தை விலக்கி விட்டு ஒரு சின்ன பையன், ஒரு என்ட்ரி கொடுக்கிறான். அப்போது அவர்கள் எங்களுக்கு இல்லாத அனுபவமா, நாங்களே அடிப்பட்டு படுத்து கொண்டு இருக்கிறோம். இவன் விளையாட்டு தனமாக அந்த காளையிடம் அடிப்பட்டு சாக போகிறான் பாவம் என்று ஒரு சிலர் ஒருபக்கம் ஏளனமாக பேசுகின்றனர். மறுபக்கம் அந்த காளையிடம் மாட்டிக் கொண்டு விட்டான் என்று பரிதாபமாக பேசுகிறார்கள். அந்த பையன் தைரியமாக கெத்தாக, தில்லாக உள்ளே போனான். காளை முட்ட வரும் போது புல்லுக் கட்டு ஒன்றை சின்ன பையன் காட்டுகிறான். பிறகு காளை அந்த சிறுவனின் புல்லை சாப்பிட்டு பின்னால் வந்தது. அடிப்பட்டு கிடந்த அனுபவசாலிகள் இதனை பார்த்து தலையை தொங்க போட்டு நின்று கொண்டிருந்தனர். காரணம் அவர்கள் பேசிய பேச்சு அப்படி. வாய் இருக்கிறது என்பதற்காக நக்கலும், நையாண்டியுமாக பேச்சு. அப்போது சின்ன பையனிடம் ஒருவர் வயதானவர் காளையை எப்படி அடக்கினாய் என்று கேட்டார். எனக்கு அந்த காளை பசியோடு இருந்ததை பார்த்தேன். புல்லுக்கட்டு கொடுத்ததும் சாப்பிட்டு விட்டு வந்தது என்று சொன்னான். அனுபவம் உள்ளவர்கள், இல்லாதவர்கள் என்பது எல்லாம் விஷயமே கிடையாது. யாராக இருந்தாலும் சூழலை சமாளித்து பிரச்னையை சரி செய்கிறானா என்பது தான் விஷயமே. பிறகு அந்த பெரியவர் நீ என்ன சூழலையும் சமாளித்து விடுவாய் என்று கூறி தட்டிக்கொடுத்துவிட்டு சென்றார். இப்பொழுது அந்த கதையில் முரட்டு ஜல்லிக்கட்டு காளை தான் தமிழக அரசியல் களம். அந்த பெரியவர் தான் தமிழக மக்கள். அந்த சின்ன பையன் தான் தவெக. முரட்டு ஜல்லிக்கட்டு காளையை ஏன் சொன்னோம் என்பது புரிய வேண்டியவர்களுக்கு புரியும். இவ்வாறு விஜய் கதை சொன்னார். கெஞ்சிய விஜய்! வேலூர் கூட்டம் முடிந்து கிளம்பிய விஜய், 'நான் செல்லும் போது தயவு செய்து வாகனத்தின் முன்னும், இடையிலும் வரவேண்டாம் என்று உங்களை கெஞ்சி கேட்டு கொள்கிறேன்' என வேண்டுகோள் விடுத்தார்.தினமலர் நேரலை; வீடியோ பாருங்கள்!வேலூரில் நடந்த தவெக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தில் விஜய் பேசியது தினமலர் யுடியூப் உள்ளிட்ட இணைய தளத்தில் நேரலை ஒளிபரப்பு செய்யப்பட்டது.வீடியோ பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.

தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 45 )

sundararajan
பிப் 23, 2026 22:38

அரசுக்குச் செலுத்த வேண்டிய வரியையே செலுத்த விரும்பாத சாத்தான்கள் வேதம் ஓதுகின்றன.இவர்களிடம் இருந்து எங்களைக் காப்பாற்றுங்கள் ஆண்டவரே


தாமரை மலர்கிறது
பிப் 23, 2026 22:31

போட்டியே பிஜேபி தலைமையிலான அணிக்கும் திமுக தலைமையிலான அணிக்கும் தான். அணில் குஞ்சுகள் குறுக்கே மறுக்கே ஓடிவந்தால், யானை காலில் மிதிபட்டு சாக நேரிடும்.


உண்மை கசக்கும்
பிப் 23, 2026 21:48

அந்த காலத்தில் கல்லாபெட்டி சிங்காரம். இப்போ கல்லாபெட்டி ஸ்டாலினா. உம் பொருத்தமா தான் இருக்குவே


ராமகிருஷ்ணன்
பிப் 23, 2026 21:02

5000 ரூபாய் மகளீர் உரிமை தொகை, கூட்டணிக்கு கட்சிகளை இழுக்க பணம், திருமங்கலம் பார்முலா படி பண விநியோகம் என்று எல்லாம் பணமயமா இருப்பதை பார்த்து கல்லாபெட்டி கட்சி சொல்கிறார், தவறில்லை


அருண் பிரகாஷ் மதுரை
பிப் 23, 2026 20:41

எத்தனை முறை சிந்தித்தாலும் விஜய்க்கு ஓட்டுப் போடுவது மறைமுகமாக திமுகவை வெற்றி பெற வைப்பதற்கு சமம். விஜய் வெற்றி பெறலாம்.. ஆனால் 234 தொகுதியிலும் அவர் நிறுத்தும் வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்களா.. ஒரு ஓட்டு வித்தியாசம் இருந்தாலும் தோல்வி தோல்வியே..இந்த தேர்தலில் தனித்து நின்று விஜயால் எதிர்க்கட்சி தலைவர் கூட ஆக முடியாது..மிக நல்ல வித்தியாசத்தில் தோல்வி அடைந்தவர்கள் திமுகவால் நல்ல விலைக்கு வாங்கப்படுவார்கள்..அடுத்த 5 ஆண்டுகளில் கட்சி காணாமல் போகும்..அவ்ளோதான்..வெற்றி பெற்றால் மட்டுமே சிறப்பு.. இல்லை என்றால் தொந்தரவு அதிகம் வரும்..


Kanda kumar
பிப் 23, 2026 20:08

என்னை போன்ற நடுநிலை வாக்காளர்கள் கொஞ்சம் சிந்திக்க வேண்டும். மாறி மாறி திமுக அதிமுக என்று போட்டு நம்மை சுரண்டி கொண்டுள்ளார்கள். அண்ணாமலை தனித்துவமாக தெரிந்தார் இப்போது அவரை டம்மியாக உட்கார வைத்து விட்டார்கள். மாஸ் ஹீரோ நல்லது பண்றேன்னு சொல்றார் மாத்தி ஓட்டு போட்டு தான் பார்ப்போமே தவேக விற்கு. விஜய் சொல்ற மாதிரி கண்டிப்பா ஒவ்வொரு வீட்லேயும் இரண்டு ஓட்டு இருக்கு. இது கண்கூடா தெரியுது. நல்லதே நடக்கட்டும் நம் தமிழ்நாட்டுக்கு.


Ms Mahadevan Mahadevan
பிப் 23, 2026 19:48

உங்கள் கருணாநிதி வெறுப்பு purikirathu


கனோஜ் ஆங்ரே
பிப் 23, 2026 18:48

இவர் நல்ல ஒரு அரசியல் கட்சி தலைவர்னா... தன் கருத்தை அமைதியா... மக்களிடம் சென்று சேர்ந்திடும் வகையில் புள்ளி விவரங்களோடு தெளிவாக, அமைதியாக பேசணும்...


ப.சாமி
பிப் 23, 2026 18:12

கல்லாப் பெட்டி கூட்டணி என்று சொல்வதைவிட சூட்கேஸ் கூட்டணி என்று கூறலாம்.


Govi
பிப் 23, 2026 18:03

முதல்ல நீ ஜெயிக்க பாரு மற்தை எல்லாம் பி றகு பாக்கலாம்


மேலும் செய்திகள்