பெட்டியை வாங்கிக்கொண்டு தி.மு.க., அணியில் சேருவதா?: நயினார் நாகேந்திரன்
திருச்சி: ''பணப்பெட்டியை வாங்கிக் கொண்டு தான், தி.மு.க., கூட்டணியில் சேருகின்றனர்,'' என தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார். திருச்சியில், வரும் மார்ச் 11ல் நடக்கும் தேசிய ஜனநாயக கூட்டணி பிரசார கூட்டத்தில், பிரதமர் மோடி பங்கேற்கிறார். கூட்டம் நடத்துவதற்காக மாத்துார், பஞ்சப்பூர், பொன்மலை ஜி கார்னர் ஆகிய மூன்று இடங்களை, நயினார் நாகேந்திரன் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் நேற்று பார்வையிட்டனர். முன்னதாக, திருச்சி ரயில் நிலையத்தில் நயினார் நாகேந்திரன் அளித்த பேட்டி: தமிழகத்தில், மாணவர்களிடம் கஞ்சா புழக்கம், போலீஸ் விசாரணையில் மரணங்கள், கொலைகள், ரவுடியிசம் என சட்டம் - ஒழுங்கு கடுமையாக சீர்குலைந்துள்ளது. தி.மு.க., கூட்டணி மீது மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். எனவே, எங்கள் தே.ஜ., கூட்டணி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறும் கடந்த 2021 தேர்தலை போலவே, இந்த தேர்தலிலும் தி.மு.க.,வினர் பொய் வாக்குறுதிகளை கொடுத்து வருகின்றனர். தற்போது இருக்கும் தே.ஜ., கூட்டணி, கடந்த 2021 தேர்தலிலும் இப்படியே இருந்திருந்தால், 110 தொகுதிகளில் வெற்றி பெற்றிருப்போம். பணப்பெட்டியை வாங்கிக்கொண்டு தான் தி.மு.க., கூட்டணியில் பலரும் சேர்ந்து வருகின்றனர். முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் மீது நாங்கள் மதிப்பு வைத்துஉள்ளோம். எந்த பக்கம் இருந்தால் அவருக்கு நல்லது என்பதை, அவர் தான் முடிவு செய்ய வேண்டும். தமிழகத்துக்கு, அனைத்து நிதிகளையும் மத்திய அரசு முறையாக வழங்குகிறது. ஆனால், நிதியை பெற்றுக்கொண்டு, மத்திய அரசு தரவில்லை என தி.மு.க., அரசு பொய் சொல்கிறது. ஆதிதிராவிடர் நலத்துறைக்கு மத்திய அரசு கொடுக்கும் நிதியை தமிழக அரசு வேறு துறைக்கு பயன்படுத்துகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !
வாசகர்கள் கருத்துகள் ( 30 )
நீங்கள் பெட்டியை அடிச்சுருவிங்க
சமூக வலை தளங்களில் 700 சி என்று பேச்சு அடிபடுது அவ்வளவு வொர்த்தா என்று தெரியவில்லை
சிறு பிள்ளை தனமான பேச்சு... வகிக்கும் பதவிக்கு அழகல்ல... இந்த சூழ்நிலையில் நாகாக்க வேண்டியது அவசியமாகும்
2024 பாராளுமன்ற தேர்தலில் உமது ஹோட்டலில் 4 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. அது என்ன உழைத்து சம்பாரித்த பணமா? இல்லை பொட்டியா? விளக்கமா சொல்லு பார்க்கலாம். கிழக்கே உதிக்கும் சூரியன் மேற்கே அல்லது தெற்கே உதயமாகலாம்.... ஆனால் உங்க கூட்டணி ஜெயிக்காது........
நீயே பரம்பரை சாராய வியாபாரி உனக்கு முன்னாள் ஒருத்தன் இருந்தான் அவன் யோக்கியன் மாதிரி பேசிட்டு கடைசியில் 30000 கோடி சொத்துக்கள் சேர்த்து விட்டான் என்று அவனை தூக்கி விட்டார்கள்
பிஜேபி வந்தால் பஸ்ஸ்டாண்டு ரயில்வே ஸ்டேஷன் அரசு அலுவலகங்கள் எல்லாமே இந்தி மயமாகும் இந்திக்காரன் இங்கே சர்வ சாதாரணமாக திருடுவான் அரசு வேலைகளில் இருப்பான்.. தமிழ் நாடு பழைய வரலாறு கள் அழிக்கப்படும்
விட்டா திருமங்கலம் ஃபார்முலா ஆரம்பிச்சிவிட்டதே பிஜேபி தான் என்று சொல்லுவார்கள்
டி டி வி தினகரனுக்கு பெட்டி கொடுத்தீர்களே . விஷமும் தூக்கு கயிறும் கொடுத்தீர்களா
Ban All Parties Getting/Giving Money Bags SHAME ON Democracy
சரி 2024 இல் அந்த 4 கோடி பண பெட்டி யார் அந்த சார் கொடுத்த பெட்டி
மேலும் செய்திகள்
இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு; தமிழகத்தில் 5.67 கோடி வாக்காளர்கள்!
பிப் 23, 2026 11:35 am
கொடுத்தது ரூ.20; எடுத்தது ரூ.150 தி.மு.க.,வை மன்னிக்கவே கூடாது அண்ணாமலை ஆவேசம்
பிப் 23, 2026 06:14 am
கூட்டணி கட்சியினரை சந்திக்க தே.மு.தி.க.,வினருக்கு தடை: பிரேமலதா அதிரடி உத்தரவு
பிப் 23, 2026 04:55 am
முதல்வர் ஸ்டாலினுடன் கே.சி.வேணுகோபால் சந்திப்பு: தொகுதி பங்கீடு குறித்து பேச்சு
பிப் 22, 2026 08:52 pm