Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ்

Advertisement


பிப்., 27க்குள் கூட்டணி புதிய தமிழகம் முடிவு

பிப்., 27க்குள் கூட்டணி புதிய தமிழகம் முடிவு

சென்னை: புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி அளித்த பேட்டி:

அமைச்சர் நேரு மீது, ஊழல் வழக்கு பதிவு செய்ய, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இனியும் காலம் தாழ்த்தாமல், நேரு மீது, தமிழக அரசு உடனே வழக்குப்பதிவு செய்ய வேண்டும். இல்லையெனில், புதிய தமிழகம் கட்சி சார்பில் போராட்டம் நடத்தப்படும்.

புதிய தமிழகம், எந்த கூட்டணியில் இடம்பெறும் என்பதை, வரும் 27ம் தேதிக்குள் அறிவிப்போம். ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு பெறுவதை கொள்கையாக வைத்துள்ளோம். இதை மனதில் வைத்தே, எங்கள் கூட்டணி அமையும்.

இவ்வாறு கூறினார்.

Advertisement