/ செய்திகள் / ஆட்சியில் பங்கு கேட்டு சென்னையில் ஒட்டப்பட்ட காங்கிரஸ் போஸ்டர்கள்; மர்ம நபர்கள் கிழிப்பு

ஆட்சியில் பங்கு கேட்டு சென்னையில் ஒட்டப்பட்ட காங்கிரஸ் போஸ்டர்கள்; மர்ம நபர்கள் கிழிப்பு

சென்னை: தமிழகத்தில் ஆட்சியில் பங்கு கேட்டு, காங்கிரஸ் உரிமை மீட்புக்குழு என்ற பெயரில் சென்னையில் ஒட்டப்பட்ட போஸ்டர்களை மர்ம நபர்கள் கிழித்தனர். திமுக,காங்கிரஸ் கூட்டணியின் நிலவரம் கடந்த சில வாரங்களாக சுமூகமாக இல்லை. ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு தமிழக காங்கிரசின் முக்கிய நிர்வாகிகள் திமுகவுடன் மல்லுக்கட்டி வருகின்றனர். காங்கிரசின் 2ம் கட்ட தலைவர்களின் இந்த பேச்சுகள் திமுக தலைமைக்கு எரிச்சல் ஏற்படுத்த, இந்த கூட்டணி தேர்தலுக்குள் நிலைக்குமா என்ற கேள்விகளும் எழாமல் இல்லை. இந் நிலையில், காங்கிரஸ் தேசிய பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் சென்னை வந்தார். கட்சியின் மாவட்ட தலைவர்கள், நிர்வாகிகளை சந்திக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்ட்டு உள்ள ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்கிறார். அதே நேரத்தில் சென்னையில் கே.சி.வேணுகோபால் பங்கேற்கும் நிகழ்ச்சி நடக்கும் பகுதியில் சில போஸ்டர்கள் ஒட்டப்பட்டு உள்ளன.காங்கிரஸ் உரிமை மீட்புக்குழு என்ற பெயரில் இந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருக்கின்றன. அதில் இடம்பெற்றுள்ள வரிகள்; அதிகாரமற்ற அரசியல்! அர்த்தமற்ற அரசியல்! வேண்டும்! வேண்டும்! ஆட்சி அதிகாரத்தில் பங்கு தரும் கட்சி உடனே கூட்டணி வேண்டும்... அகில இந்திய தலைமையே புரிந்து கொள்! புரிந்து கொள்!! வேண்டாம்! வேண்டாம்! தன்மானம் இழந்து சுயமரியாதை இழந்து கூட்டணி வேண்டாம்' என்று எழுதப்பட்டு இருந்தது.தமிழகத்தில் ஆட்சியில் பங்கு என்பதை வலியுறுத்தும் விதமாக ஒட்டப்பட்ட இந்த போஸ்டர்களை மர்ம நபர்கள் சிலர் கிழத்துவிட்டனர். இதன் காரணமாக அங்கு சிறிதுநேரம் பரபரப்பான சூழல் நிலவியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

xyzabc
பிப் 18, 2026 01:12

நாய்க்கு கூட துண்டு பிஸ்கட் கிடைக்கும். ஆனால்.. மாடல் ஆட்சியினர் தங்கள் சொத்தை பகிர விடமாட்டார்கள்.


Ramesh Sargam
பிப் 17, 2026 21:08

ஒற்றுமையே இல்லை. ஆனால் கூட்டணி என்று கூறிக்கொண்டு திரிகிறார்கள் இந்த திமுகவினரும், காங்கிரஸ் கட்சியினரும்.