/ செய்திகள் /  மோடி பெயரை சொல்லக்கூட ஸ்டாலினுக்கு பயம்: த.வெ.க.,

 மோடி பெயரை சொல்லக்கூட ஸ்டாலினுக்கு பயம்: த.வெ.க.,

சென்னை: “ஸ்டாலின் குடும்பத்தினர், பிரதமர் மோடி பெயரை கூட சொல்ல மாட்டார்கள்,” என, த.வெ.க., துணைப் பொதுச் செயலர் நிர்மல்குமார் கூறினார். அவரது பேட்டி: ஆட்சிக்கு வந்ததும், மாதம் 1,000 ரூபாய் தருகிறோம் என, தி.மு.க., வாக்குறுதி கொடுத்தது. ஆனால், 28 மாதங்கள் கழித்துதான் அதை அமல்படுத்தினர். இப்போது உரிமைத் தொகையை யாரோ முடக்க பார்ப்பதாக ஸ்டாலின் சொல்கிறார். அது, பா.ஜ.,வாக இருந்தால், அதை சொல்ல கூட ஸ்டாலினுக்கு தைரியமில்லை. ஸ்டாலின் குடும்பத்தினர், பிரதமர் மோடி, அமித் ஷா பெயரை கூட சொல்ல மாட்டார்கள். அ.தி.மு.க., போஸ்டர்களில் அண்ணாதுரை, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா படமே இருக்காது. சுயலாபத்துக்காக கட்சி நடத்துகின்றனர். இதை, தினகரனே பல மேடைகளில் சொல்லி இருக்கிறார். தி.மு.க.,வும் அ.தி.மு.க.,வும் ஒன்றுதான். விசிலுக்கு நிறைய தடை போட்டும், மக்களிடம் சின்னம் சென்றுவிட்டது. இவ்வாறு கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !