பிரச்னையை சந்திக்கும் திறன் விஜய்க்கு இல்லை: இபிஎஸ் தாக்கு
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
திருப்பத்தூர்: ஒரு பிரச்னையை சந்திக்கும் திறன் கூட விஜய்க்கு இல்லை. அவர் தேர்தலை சந்திக்கட்டும் என அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் தெரிவித்துள்ளார். திருப்பத்தூரில் நிருபர்கள் சந்திப்பில், ஜெயலலிதா எம்ஜிஆர் வளர்த்த கட்சி சரண்டர் அடைந்து விட்டது என விஜய் கூறியுள்ளதாக நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு இபிஎஸ் கூறியதாவது: அவருக்கு என்னங்க தெரியும். ஒரு நிகழ்வு நடந்தது. நான் சொல்லக்கூடாது. திருப்பி திருப்பி கேட்பதால் சொல்கிறேன். ஒரு பிரச்னை நடந்தது. 72 நாட்கள் வீட்டை விட்டு வெளியே வரவில்லை. விஜய் ஏன் வீட்டை விட்டு வெளியே வரவில்லை என்று கேட்கிறார்கள். தலைவரானால் கேட்க தான் செய்வார்கள். அதற்கு பதில் சொல்ல தான் வேண்டும். நீங்கள் என்னிடம் திருப்பி திருப்பி எத்தனை கேள்வி கேட்கிறீர்கள். ஒரு கட்சி தொடங்கி விட்டால் அந்தக் கட்சி குறித்து நிருபர்கள் கேட்கும் கேள்விகளுக்கும் மக்கள் கேள்விகளுக்கும் பதில் சொல்வது அந்த கட்சி தலைவரின் கடமை. ஆனால் அந்தக் கடமையை செய்து இருக்கிறாரா?
தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !
வாசகர்கள் கருத்துகள் ( 3 )
பிஜேபி கொடுக்கிற பிரச்சனைகளை சமாளிக்க முடியாமல் தானே நீங்கள் பிஜேபி கட்சியை முதுகில் சுமக்கிறீர்க கள் . பிஜேபி யை வளர்த்து விட்டால் அ தி மு க வுக்கு நல்லதல்ல. நீங்கள் செய்யும் தவறு பி ஜே பி கூட்டணி
சரியாக சொன்னீர்கள் தலைவரே!
நம் பிரதமர்மீது அப்படியென்ன கடுப்பு? ஏன் விஜய் பெயரை சொல்லி சாடையாக திட்டவேண்டும்?
மேலும் செய்திகள்
அதிகார பகிர்வு அவசியம்; திமுகவை மீண்டும் சீண்டிய காங் எம்பி மாணிக்கம் தாகூர்
பிப் 14, 2026 12:18 pm