/ செய்திகள் / தி.மு.க., கூட்டணிக்கு ஆதரவு: மாவட்ட தலைவர்களுக்கு செல்வப்பெருந்தகை நெருக்கடி

தி.மு.க., கூட்டணிக்கு ஆதரவு: மாவட்ட தலைவர்களுக்கு செல்வப்பெருந்தகை நெருக்கடி

தி.மு.க.,வுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என, டில்லி கூட்டத்தில் வலியுறுத்துமாறு, தமிழக காங்கிரஸ் மாவட்ட தலைவர்களுக்கு அக்கட்சி மாநில தலைவர் செல்வப் பெருந்தகை அறிவுறுத்திய தகவல் வெளியாகி உள்ளது. மாநில வாரியாக காங்கிரஸ் மாவட்டத் தலைவர்கள் கூட்டம், டில்லியில் நேற்று நடந்தது. அக்கூட்டத்தில், தமிழக காங்கிரசை சேர்ந்த மாவட்டத் தலைவர்கள் அனைவரும் பங்கேற்றனர். அவர்களை, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையின் ஆதரவாளரும், அமைப்பு செயலருமான ராம்மோகன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசி உள்ளார். 'நீங்கள் அனைவரும் ஒருமித்த குரலில், தி.மு.க., கூட்டணியில் நீடிக்க வேண்டும் என கூற வேண்டும்' என வலியுறுத்தியுள்ளார். ஆனால், அக்கூட்டத்தில் பங்கேற்ற மாவட்ட தலைவர்கள், 'தி.மு.க., கூட்டணியில் நீடிக்க வேண்டுமானால், ஆட்சியில் பங்கு தர வேண்டும்; ஆறு அமைச்சர் பதவிகளை பெற வேண்டும்; 41 தொகுதிகளுக்கு குறையக்கூடாது' என பேசியுள்ளனர். 'இந்தக் கோரிக்கையை தி.மு.க., ஏற்க முன்வரவில்லை என்றால், த.வெ.க.,வுடன் கூட்டணி அமைக்கலாம்' என்றும் கூறியிருக்கின்றனர். இந்த தகவல் தெரியவந்ததும், செல்வப்பெருந்தகையும் அவரது ஆதரவாளர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். - நமது சிறப்பு நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 27 )

V GOPALAN
பிப் 12, 2026 10:45

If minorities votes are only to congress people like Selvaperunthagai it shows clearly minorities requires only rowdies like congress and dmk


gopal KRISHNAN
பிப் 12, 2026 08:09

காங்கிரஸ் மத்தியில் தீ மூ க விடன் கூட்டணி ஆட்சி செய்த போது தீ மூ க அனைத்து முக்கிய துறைகளின் மந்திரி பொறுப்புகளையும் அனுபவித்து வந்தது தீ மூ க... மட்டும் அனைத்து வளம் கொழிக்கும் இலாக்காகளையும் பெற்று அனுபவிக்கலாம் ஆனால் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சிக்கு அமைச்சர் பதவி கிடையாது எண்பது நியாயம் அற்ற செயல் ஆந்திராவில் கூட்டணி கட்சியின் பவன் கல்யாண்...துணை முதல்வர் மஹாராஷ்டிரா வில் ஷிண்டே துணை முதல்வர்.. அஜித் பவார் மனைவி துணைவி முதல்வர் பிஹாரில் முதல்வர் பதவியை கூட்டணி கட்சிக்கு வழங்கி உள்ளது பிஜெபி ஆனால் தீ மூ க வின் செயல் நியாயம் அற்றது காங்கிரஸ் கட்சிக்கு சூடு சுரணை இருந்தால் அது தீ மூ க வை விட்டு வெளியே வந்து விஜய் உடன் கூட்டணி வைக்க வேண்டும் துணிந்தால் வெற்றி இல்லை என்றால் சவக் குழிக்குள் காங்கிரஸ் செல்வது உறுதி


RAVINDRAN.G
பிப் 11, 2026 14:55

செல்வப்பெருந்தகை 5 கட்சி அமாவாசை என்கிற பெயர் நல்லா இல்ல. திமுகவில் சேர்ந்து 6 கட்சி அமாவாசை என்று பெயர் மாற்றிக்கொள்ளுங்கள்.


duruvasar
பிப் 11, 2026 13:58

ஐயா நீங்கள் முயற்சியெடுத்து நீங்கள் சேர்ந்ததுபோல் பேசாமல் காங்கிரஸ் என்ற கட்சியையும் திமுகவுடன் இணைத்துவிடுஙகள். Problem சொல்வது. குருமாவை வழிகாட்டியாக வைத்துக்கொள்ளுங்கள் .


xyzabc
பிப் 11, 2026 12:30

நீ என்ன நெருக்கடி கொடுத்தாலும் பிரயோஜனம் இல்லை. பங்கு கிடையாது. கொள்ளை அடிப்பது என்பது trade mark.


ஆகுயர்த்தோன்
பிப் 11, 2026 12:30

நீ இவ்ளோ கஷ்ட பட்டு திமுக கூட்டணியில் வேணா ரோசம் இருந்தா காங்கிரஸ் ல எவனாவது திமுக கூட்டணி வேண்டாம் சொல்லிட்டு வெளி போய் தொலைங்க உங்களுக்கு கொடுத்த அந்த தொகுதியில் திமுககாரன் நின்னா எல்லா தொகுதியில் வெற்றி பெறுவான்


duruvasar
பிப் 11, 2026 14:00

அப்பறோம் என்னங்க. மா செ வே சொல்லிப்புட்டாரு.


Barakat Ali
பிப் 11, 2026 11:25

காங்கிரசால்தான் திமுகவுக்கு சிறுபான்மையினர் வாக்குகள் தொடர்ந்து கிடைத்தன .....


Murugesan
பிப் 11, 2026 11:07

ரவுடி ஆள் வேறு எப்படி பேசுவார்


Thravisham
பிப் 11, 2026 10:53

திருட்டு த்ரவிஷ ஊழல்மிகு முதல் குடும்ப விசுவாசி மிஸ்டர் டெண்டர் தொகைக்கு காங்கிரசாவது கொள்கையாவது.


Chess Player
பிப் 11, 2026 10:53

விலைக்கு போய்ட்டாரு. இனிமே காங்கிரஸ் உருப்படாது