/ செய்திகள் /  5 ஆண்டுகளில் விலைவாசி ஏற்றம் :அ.தி.மு.க., நுாதன  பிரசாரம்

 5 ஆண்டுகளில் விலைவாசி ஏற்றம் :அ.தி.மு.க., நுாதன  பிரசாரம்

கடந்த, 5 ஆண்டுகளில் விலைவாசி ஏற்றத்தால் ஏற்பட்டுள்ள இழப்புகள் குறித்து, மொபைல் பிரிண்டர் மூலம் விலைவாசி ஒப்பீடு பட்டியலை வாக்காளர்களுக்கு அ.தி.மு.க., வழங்கி வருவது, ஆளுங்கட்சியினருக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தி.மு.க.,வும், அ.தி.மு.க.,வும் போட்டி போட்டு கொண்டு வாக்காளர்களிடம் ஓட்டு சேகரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், கடலுார் மேற்கு மாவட்ட அ.தி.மு.க., சார்பில் வீடு வீடாக சென்று நுாதன முறையில் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். புவனகிரி எம்.எல்.ஏ., அருண்மொழிதேவன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், ப ல்வேறு இடங்களில் கடந்த 5 ஆண்டுகளில் விலைவாசி ஏற்றத்தால் பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்புகள் குறித்து மொபைல் பிரிண்டர் மூலம் கூடுதல் சுமை தொகையை பிரிண்ட் எடுத்து வ ழங்கி வருகின்றனர். தினந்தோறும் பால், மளிகை சாமான், காய்கறி, மின் கட்டணம், வீட்டு வரி, சொத்து வரி, குப்பை வரி, மாதந்திர செலவு,உள்ளிட்ட செலவு விவரங்களை கேட்டறிந்து தினந்தோறும் எவ்வளவு, மாதத்திற்கு எவ்வளவு, கடந்த 5 வருடங்களுக்கு எவ்வளவு என்று கணக்கீட்டு அதற்கான செலவு தொகை குறித்து மொபைல் பிரிண்டர் மூலம் கணக்கீடு எடுத்து பெண்கள் கையில் கொடுத்து வருகின்றனர். அ.தி.மு.க., ஆட்சியில் விலைவாசி எப்படி இருந்தது, தி.மு.க., ஆட்சியில் விலைவாசி எவ்வளவு உயர்ந்துள்ளது என்றும் கடந்த 5 ஆண்டுகள் ஆட்சியில் ஏற்பட்டுள்ள இழப்பு மற்றும் கூடுதல் சுமை குறித்தும் ஒப்பீடு செய்து வரும் தேர்தலில் அ.தி.மு.க.,விற்கு ஒட்டுளிக்க வேண்டும் என நுாதன முறையில் பிரசாரம் செய்து வருகின்றனர். அ.தி.மு.க.,வின் நுாதன பிரசாரம் ஆளுங்கட்சியினருக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !