/ செய்திகள் /  தேவேந்திர குல மக்களை ஸ்டாலின் ஏமாற்றி விட்டார்

 தேவேந்திர குல மக்களை ஸ்டாலின் ஏமாற்றி விட்டார்

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில், இமானுவேல் சேகரன் மணிமண்டபம் என்ற பெயரில், 3 கோடி ரூபாயில் கல்யாண மண்டபத்தை கட்டிவிட்டு, தேவேந்திர குல மக்களை முதல்வர் ஸ்டாலின் ஏமாற்றி விட்டார். இமானுவேல் சேகரன் சிலையை வெளியே வைத்து, கூண்டு போட்டு அடைத்துவிட்டு, மணமகன் - மணமகள் அறை வைத்து, மணி மண்டபத்தை கல்யாண மண்டபமாக கட்டி இருக்கின்றனர். ஏழு பிரிவுகளை உள்ளடக்கி, தேவேந்திர குல வேளாளர் என அழைக்குமாறு அரசாணை கொடுத்தவர் பிரதமர் மோடி. அன்றைய முதல்வர் பழனிசாமி, சட்டசபையில் விவாதம் வைத்து அதற்கு முக்கியத்துவம் ஏற்படுத்தினார். முன்னாள் பிரதமர் நேரு துவங்கி, ராகுல் வரை நம்மை ஏமாற்றுகின்றனர். அவர்களிடம் பல லட்சம் கோடி ரூபாய் உள்ளது; மோடியிடம் பணம் கிடையாது. மக்கள் மது குடிக்காமல் இருந்தால், அரசு தானாக 'டாஸ்மாக்' கடைகளை மூடிவிடும். - ஜான்பாண்டியன், நிறுவன தலைவர், தமிழக மக்கள் முன்னேற்ற கழகம்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

பாலாஜி
பிப் 10, 2026 08:11

தேவேந்திர குல மக்களுக்கு தேவையானவற்றை நிறைவேற்றி தருவதற்கு நீ என்ன செய்தாய் ஜான் பாண்டியன்?