/ செய்திகள் / திமுகவுக்கு விசிக அழுத்தம் தரவில்லை: சொல்கிறார் திருமா

திமுகவுக்கு விசிக அழுத்தம் தரவில்லை: சொல்கிறார் திருமா

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுச்சேரி: ''பா.ம.க.,வை சேர்த்துக் கொள்வதாக, எந்த இடத்திலும் தி.மு.க., சொல்லவில்லை,'' என விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் கூறினார்.அவர் அளித்த பேட்டி: ஒவ்வொரு தேர்தலிலும், கூடுதல் எண்ணிக்கையில் போட்டியிட வேண்டும் என கட்சித் தொண்டர்கள் விரும்புகின்றனர். அதற்காக, கூட்டணி தலைமையிடம் அழுத்தம் கொடுக்கிறோம். இந்த முறையும், அதே அழுத்தம் தொடரும். பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் மீது, வி.சி.,க்களுக்கு மிகுந்த மரியாதை உண்டு. அவர், தைலாபுரம் தோட்டத்திற்கு, என்னை அழைப்பார். சென்றதும், மணிக்கணக்கில் உரையாடுவர். அவரே, எனக்கு உணவு பறிமாறுவார். உடல் நலத்தில் அக்கறை செலுத்த வேண்டும் என பலமுறை அறிவுறுத்தியிருக்கிறார். நான் ஈழத் தமிழர்களுக்காக உண்ணாவிரத போராட்டம் இருந்தபோது, விளிம்பு நிலை மக்களுக்கு நீங்கள் அவசியம் என சொல்லி இருக்கிறார். அதனால், அவர் மீது என்றைக்கும் எனக்கு மதிப்பு உண்டு. அதில் எவ்வித மாற்றமும் இருக்காது.ஆனால் 2011க்கு பின், அவர், அரசியல் ரீதியாக எடுத்த சில முடிவுகள் எங்களுக்கு மட்டும் அல்ல; ஈ.வெ.ரா., இயக்கம் உள்ளிட்ட அனைத்து தரப்பிற்கும் அதிர்ச்சி தரக்கூடியதாக இருந்தது.பா.ஜ., அகில இந்திய அளவில், வெறுப்பு அரசியலை முன்னெடுக்கிறது. பா.ம.க., தமிழகத்தில், தலித்துகளுக்கு எதிராக வெறுப்பு அரசியலை செய்கிறது. இது மிகவும் ஆபத்தானது. இப்படிப்பட்ட அணுகுமுறையால், அவர்களிடம் இருந்து விலகி நிற்கிறோம். இது கட்சியின் கொள்கை முடிவு. அந்த முடிவை எடுக்கும் நிலைக்கு, அக்கட்சிகள் தான் எங்களை தள்ளின.பா.ம.க.,வை சேர்த்துக் கொள்வதாக, எந்த இடத்திலும் தி.மு.க., சொல்லவில்லை. அதனால், தி.மு.க.,வுக்கு வி.சி.,க்கள் எந்த அழுத்தமும் கொடுக்கவில்லை. பார்லிமெண்டில் கமல் பேசியது, பா.ஜ.,வினருக்கு பிடிக்கவில்லை. அதனால், விமர்சிக்கின்றனர். இவ்வாறு கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

ஷ்யாம் சரண்
பிப் 09, 2026 10:39

இது ஒரு வெண்ண வெட்டி


M Ramachandran
பிப் 09, 2026 10:35

சமீபத்திய ஊடக முழக்கு நீ கொடுக்கும் பேட்டி தீ மு க்கா விற்கு தலைவலி கொடுக்கிறது. கடையசி நேரத்தில் நீ யாருடனும் டீல் வைத்து கொள்ள முடியாமல் கழட்டி விடும்.


VENKATASUBRAMANIAN
பிப் 09, 2026 08:19

இவர் தினமும் ஆரம்பித்து உள்ளார். இது தேர்தல் வரை தொடரும்


Mani . V
பிப் 09, 2026 04:31

ஆமாம், அது அழுத்தம் இல்லை. காலில் மஜாஜ் செய்யும் பொழுது ஏற்படும் சிறிய வலி மட்டுமே. அதற்கு தைலம் போட்டு நீவி விட்டால் சரியாகிப் போய் விடும்.


Kasimani Baskaran
பிப் 09, 2026 04:10

பெட்டியின் கனத்தை அதிகரிக்கும் முயற்சி. ஓட்டுக்கு ஒரு விலை என்று இருக்க வேண்டும். உதிரி கட்சிகளுக்கு ஞாயமான எடை கிடைக்க ஒட்டு போடும் பொழுது எந்தக்கட்சி ஒட்டு என்பதை பதிவு செய்ய தேர்தல் ஆணையம் ஆவண செய்ய வேண்டும்.


கடல் நண்டு
பிப் 09, 2026 03:52

அறிவாலய அடிமை … கூடுதலாக 2 சீட் கிடைக்க இவர் நடத்தும் குரளி வித்தை… அறிவாலைய அடைப்பு எடுப்பதில் ஆண்டவரை மிஞ்சும் பிளாஸ்டிக் செயர் பிஸ்தா..


Murugesan
பிப் 09, 2026 03:24

காலில் விழுந்து கிடக்கும் அடிமை எப்படி முதலாளிக்கு அழுத்தம் தரமுடியும்


Srinivasan Narasimhan
பிப் 09, 2026 02:28

ஆத்தா வெய்யும் காசு குடு